நிலம் தொடர்பான சட்டங்கள் காடுகளையும் வனவாசிகளையும் எவ்வாறு அச்சுறுத்துகின்றன

By :  IndiaSpend
Update: 2020-09-30 00:30 GMT

கோயம்புத்தூர்: காடழிப்புக்கு ஈடாக நிலத்தை கையகப்படுத்துவதில் வன உரிமைச் சட்டத்தை தவிர்ப்பதன் மூலமும், காடு வளர்ப்பின் ஒரு பகுதியாக பல்லுயிர் காடுகளை மாற்றுவதர்கு தோட்டங்களை அனுமதிப்பதன் மூலமும், காடுகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இரண்டு சட்டங்கள், உண்மையில் இந்தியாவின் குறைந்து வரும் காடுகளையும் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட வனவாசிகளையும் அச்சுறுத்துகின்றன என்று 2008 ஆம் ஆண்டில் இருந்து நிலம் திசைதிருப்பல் தரவு பகுப்பாய்வு மற்றும் வன சட்டங்களில் திருத்தங்கள் காட்டுகின்றன.

கடந்த 2008 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையில் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்ட வன நிலத்தை விட, வன நிலங்கள் திசைதிருப்பப்பட்ட பல்வேறு அரசு ஆதாரங்களின் தரவு பொருந்தவில்லை மற்றும் குறைந்தபட்சம் சம அளவிலான நிலத்தை காடு வளர்க்க வேண்டும் என்று சட்டம் உத்தரவிட்டும் கூட, இழப்பீடான காடுகளின் கீழுள்ள நிலம் குறைவாகவே உள்ளது.

வன பாதுகாப்பு சட்டம்- 1980 (FCA), இது வனம் அல்லாத பயன்பாட்டிற்காக வனத்தை திசை திருப்புவதை ஒழுங்குபடுத்துகிறது, மற்றும் காடு வளர்ப்பு நிதி சட்டம்- 2016 (CAFA) ஆகிய இரண்டு சட்டங்கள், ஈடுசெய்யப்படும் காடு வளர்ப்பிற்கான நிதியை ஒழுங்குபடுத்துகிறது

இந்தச் சட்டங்களில் தொடர்ச்சியான மற்றும் அதிகரிக்கும் திருத்தங்கள் மூலம், அடுத்தடுத்த அரசுகள் 2013, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், நிலங்களை வேறு திட்டங்களுக்கு திசை திருப்பும் முன்பு, கிராம சபைகளின் (ஒரு பொதுவிடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுதல்) ஒப்புதல் தேவை என்பதை குறைத்து, வன நிலங்கள் மீதான மக்களின் உரிமைகளைத் தவிர்ப்பதற்கு உதவுகின்றன. ஈடு செய்ய வளர்க்கப்படும் காடுகளை மோசமாக செயல்படுத்துவதும் முறையற்ற அல்லது காடழிப்புக்கு வழிவகுத்தது, இது இந்தியாவின் பல்லுயிர் பாதிப்பை பாதித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இவையும், பிற சட்ட திருத்தங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தியுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி என்பது காகித முத்திரையிடும் ஒரு செயல்படாக மாறியுள்ளது. இப்போதே, சுற்றுச்சூழல் அனுமதிகளுக்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிப்பின் மூலம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) மேலும் மாற்றங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. இது பசுமை அனுமதிகளைப் பெறுவதற்கான தேவைகளை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

சட்டரீதியான பாதுகாப்புகள்

வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வனம் சாராத பயன்பாட்டிற்காக அதாவது குழாய் இணைப்புகள், சாலைகள் அல்லது தொழில்துறை திட்டங்கள் போன்றவற்றுக்கு வன நிலங்களை கையகப்படுத்துபவர்கள், கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவு மற்றும் பல்லுயிர் அடிப்படையில் அரசுக்கு தொகையை செலுத்துகின்றனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கைத் தணிக்க, இந்த நிதியானது காடு அல்லாத நிலத்தின் சம அளவிலான நிலப்பரப்பில் அல்லது 'சீரழிந்த' வனத்தில் காடு வளர்ப்பிற்காக இரு மடங்கு பரப்பளவில் (40% க்கும் குறைந்த அடர்த்தியுடன், இது மரங்களால் தடுக்கப்பட்ட மொத்த ஒளியின் சதவீதமாக அளவிடப்படுகிறது) ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிதியானது காடு வளர்ப்பு நிதி சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

காடுகளின் செயற்கை மீளுருவாக்கம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிராமங்களை இடமாற்றம் செய்தல் மற்றும் பலவற்றை, வனங்களுக்கான இழப்பீடு உள்ளடக்கி இருக்கிறது. வனத்தை வேறு திட்டங்களுக்கு திசை திருப்பும் உத்தரவு, 1992 இல் வன பாதுகாப்பு சட்ட விதிகளின் ஒரு பகுதியாக மாறியது. இந்த விதிகள் 2003ஆம் ஆண்டில் புதியனவாக மாற்றப்பட்டன, மேலும் 2004 , 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இந்த திருத்தங்கள் மூலம், சுற்றுச்சூழல் அமைச்சகம் வனவாசிகளின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் நிலங்களை வேறுபணிகளுக்கு திசை திருப்புவதற்கான முன்நிபந்தனைகளாக கிராமசபைகளிடம் இருந்து ஒப்புதலை அளிக்க வேண்டும்.

தனித்தனியாக, "வன நிலங்களை திசை திருப்புவது தொடர்பான ஒழுங்குமுறை சிக்கல்களில் கடும் குறைபாடுகள் இருந்தன", என்று கூறிய இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG - சிஏஜி) 2013 அறிக்கை, ஏற்கனவே காடழிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அடர்ந்த வனங்களில் காடு வளர்ப்பு, அங்கீகரிக்கப்படாத இடங்களை காடு வளர்ப்பது மற்றும் எந்த வேலையும் செய்யப்படாத செலவினங்களின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டியது.

சமூக வன உரிமைகள் கற்றல் & ஆலோசனை செயல்முறை மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக மாணவர்கள் 2018ல் மேற்கொண்ட மற்றொரு செயற்கைக்கோள் பட அடிப்படையிலான ஆய்வு, வேளாண் நிலங்கள் ‘காடழிப்புக்கு’ பயன்படுத்தப்படுவதையும், ‘இழப்பீட்டு காடு வளர்ப்பு’ என்ற பெயரில் தோட்டங்களை உருவாக்க வன நிலங்கள் அகற்றப்பட்டதையும் கண்டறிந்தது.

சி.ஏ.ஜி. அறிக்கை "ஈடுஇழப்பீடு செய்யும் காடு வளர்ப்பை ஊக்குவிப்பதில் தோல்வி அடைந்தது, சுரங்க விஷயத்தில் வன நிலங்களை அங்கீகரிக்கப்படாத பணிகளுக்கு திசை திருப்பியது மற்றும் சுற்றுச்சூழல் மீறல்" ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

ஈடுசெய்யும் காடு வளர்ப்பில் பற்றாக்குறை, பொருத்தமற்ற தரவு

கடந்த 2008 ஆம் ஆண்டில், வன நிலங்களை கையகப்படுத்துபவர்கள், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ.10.43 லட்சம் வரை பல்லுயிர் இழப்பை ஈடுசெய்ய வேண்டியிருந்தது. 2014ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்திய வன கணக்கெடுப்பின் நவம்பர் 2014 அறிக்கையின்படி, இந்த தொகையை ஒரு ஹெக்டேருக்கு ரூ.5.65 லட்சத்தில் இருந்து ரூ.55.55 லட்சம் வரை உயர்த்த முன்மொழியப்பட்டது. ஆனால் இது 2019 மார்ச் வரை செயல்படுத்தப்படவில்லை.

ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நிதியில் சேமிக்கப்படும் இந்த நிதி அக்டோபர் 2019 வரை கிட்டத்தட்ட ரூ.74,825 கோடியாக இருந்தது - இது 2020-21 மத்திய சுகாதார பட்ஜெட்டை விட அதிகம். இதில், சுமார் ரூ .65,378 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது என்று அரசு தகவல்கள் (இங்கே மற்றும் இங்கே) காட்டுகின்றன.

ஈடுசெய்யும் காடழிப்புக்காக எடுக்கப்பட்ட நிலத்தில் எந்த வகையான காடுகளை வளர்க்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதன் விளைவாக மரத் தோட்டங்கள், பெரும்பாலும் மரக்கன்றுகள் நடப்பட்டு காடுகள் மற்றும் அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கமானது மாற்றப்படுகிறது. இத்தகைய தோட்டங்கள், இயற்கை காடுகளை மீட்டெடுப்பதற்கு பதிலாக, ஒற்றை வகை மரத்தின் (ஒற்றை வளர்ப்பு) அல்லது குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்களுக்கான தோட்டங்களை ஊக்குவிக்கின்றன, அவை பல்லுயிரியலை அழிக்கும்போது வளிமண்டலத்தில் இருந்து இயற்கையான காடுகளை விட குறைந்த கார்பனை அகற்றுகின்றன என்று இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 1 கட்டுரை தெரிவித்துள்ளது.

காடு அல்லாத பயன்பாட்டிற்காக திருப்பி விடப்பட்ட நிலத்துடன் ஒப்பிடும்போது, இத்தகைய ஈடுசெய்யும் காடு வளர்ப்பு கூட குறைவானதுதான் என்று, கிடைக்கக்கூடிய தரவுகள் கூறுகின்றன. அரசின் பரிவேஷ் இணையதளத்தின்படி, 232,952 ஹெக்டேர் வன நிலங்கள் - அதாவது டெல்லி மாநிலத்தின் பரப்பை விட 1.5 மடங்கு பரப்பு அதிகம் - 2008 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையில் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு திட்டங்களுக்காக சுமார் 17,481 ஹெக்டேர் பயன்படுத்தப்பட்டன, மேலும் “இணங்குதல் பிரச்சினைகள்” காரணமாக 2,746 ஹெக்டேர், இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை, மொத்த திசை திருப்பப்பட்ட வன நிலங்கள் 253,179 ஹெக்டேர் என, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கம்ப்யூட்டர் மைய சுற்றுச்சூழல் தகவல் பிரிவின் மூத்த தொழில்நுட்ப இயக்குனர் அனில் குமார், இந்தியா ஸ்பெண்டிடம் மின்னஞ்சலில் தெரிவித்தார். பரிவேஷ் என்பது "ஒற்றை சாளர மையம்", இது வன அனுமதி உட்பட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனைத்து அனுமதிகளுக்கும் "திட்டங்களின் முழு கண்காணிப்பையும் தானியங்குதலுக்கு உட்படுத்துகிறது".

குறைந்தபட்சம், காடுகளின் நிலமானது திசை திருப்பப்பட்ட நிலத்திற்கு ஈடாக இருக்க வேண்டும். ஆனால் 182,817 ஹெக்டேர் ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக திருப்பி விடப்பட்டது, இது 253,179 ஹெக்டேர் வன நிலங்களில் 72% மட்டுமே 2008 மற்றும் 2019 க்கு இடையில் வனவியல் நோக்கங்களுக்காக திருப்பி விடப்பட்டது என்று, ஆகஸ்ட் 20, 2020 நிலவரப்படி, ஈ-கிரீன் வாட்ச் இணையதள தரவு காட்டுகிறது. ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்தில், 26% சீரழிந்த வன நிலமாகும். மீதமுள்ளவை வருவாய் நிலம் (சமுதாய நிலம், விவசாய நிலம் மற்றும் வீட்டுத் தலங்கள் உட்பட) மற்றும் பொதுவான நிலம், இதில் வன உரிமைகள் சட்டம் 2006 (எஃப்ஆர்ஏ) போன்ற சட்டம் இல்லாத நிலையில் மக்களின் உரிமைகள் வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்படும் வன உரிமைகள் சட்டம், இந்த காடுகளை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் வனவாசிகளின் வழக்கமான மற்றும் பாரம்பரிய, தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளை அடையாளம் காணவும், வரையறுக்கவும், பதிவு செய்யவும் ஒரு எளிய, வெளிப்படையான மற்றும் ஜனநாயக கட்டமைப்பை வழங்குகிறது (இது வேட்டையாடுவதற்கு அனுமதிப்பதில்லை). பரிவேஷ் இணையதளத்தில் வனம் திசைதிருப்பப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தரவு ஆகியன, அரசின் ஈ-கிரீன் வாட்ச் வலைத்தளத்தின் தரவுகளுடன் பொருந்தவில்லை; இந்த வலைதளம் சுயாதீன நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்காணிப்பு, மதிப்பீடு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தணிக்கைகளுக்கு பொதுவில் அணுகக்கூடிய நிகழ்நேர தரவுகளுடன் ஒருங்கிணைந்த, முற்றிலும் வெளிப்படையான, நம்பகமான மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு என்று தன்னை வரையறுக்கிறது.

உதாரணமாக, வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்தை வேறு பணிகளுக்கு திசைதிருப்பலுக்கான புள்ளிவிவரங்கள், மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பதிலின்படி, 2008 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், 251,727 ஹெக்டேர் ஆகும்; ஆனால் அதே காலகட்டத்தில் 399,411 ஹெக்டேரில் 63% என்று ஈ-கிரீன் வாட்ச் புள்ளி விவரங்கள் காட்டின. பரிவேஷ் இணையதளம் காட்டிய 253,179 ஹெக்டேர் என்பதைவிட ஈ-கிரீன் வாட்சின் புள்ளிவிவரங்களும் அதிகம்.

ஈ-கிரீன் வாட்ச் அமைப்பில் "கணிசமான சதவீதம் தரவு பதிவேற்றப்படுகிறது... தவறானது அல்லது முழுமையற்றது" என்று வன ஆய்வாளர் ஜெனரல் ஆகஸ்ட் 10, 2020 அன்று மாநில வனத்துறை முதன்மை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் உறுதிப்படுத்தினார். ஏனென்றால், அந்த பகுதியின் முறையற்ற டிஜிட்டல் மயமாக்கல் அல்லது காடுகளின் தோட்டங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பிற காரணங்களுக்காக என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Full View

இந்த முரண்பாடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியபோது, இந்தத் தரவின் மிகவும் நம்பகமான ஆதாரம் ஈ-கிரீன் வாட்ச் அல்ல என்பதை அவர்கள் மின்னஞ்சல்களில் எங்களுக்கு விளக்கினர். “ஈ-கிரீன் வாட்ச் தரவு புதுப்பிக்கப்படவில்லை”, “பரிவேஷ் இணையதளம் மிகவும் நம்பகமானது” மற்றும் “தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுள்ளது”, என்று மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த எண்ணிக்கை "பரிவேஷ் போர்ட்டலில் கிடைக்கும் தரவை" அடிப்படையாகக் கொண்டது என்று குமார் கூறினார்.

வன உரிமைகள் சட்டம்

வனம் அல்லாத பயன்பாட்டிற்காக நிலம் திருப்பிவிடப்படுவதற்கு முன்பு, ஆகஸ்ட் 2009 சுற்றுச்சூழல் அமைச்சக உத்தரவின்படி, முன்மொழியப்பட்ட பகுதியில் வன உரிமைகள் சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு கிராமப்புற சபைகள் சான்றளித்து நிலத்தை வேறு பணிக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த நிலத்தை நிர்வகிக்கும் அனைத்து கிராம சபைகளுக்கும் முன்பு, திட்டத்தின் முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவற்றை வேறு திட்டங்களுக்கு திசைதிருப்ப ஒப்புக்கொண்டதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், ஒரிசா சுரங்கக்கழகம் 660 ஹெக்டேர் நிலத்தை பாக்ஸைட் சுரங்கத்திற்காக கிராம சபையின் அனுமதியின்றி கையகப்படுத்த முயன்றபோது, ​​உச்சநீதிமன்றம் இது “பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பாக, திட்டத்தின் ஆதரவாளர்கள் காட்டிய அப்பட்டமான புறக்கணிப்பு” என்று கூறியது. மூன்று மாதங்களுக்குள் நிலம் திருப்புவது குறித்து கிராம சபைகள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 12 கிராமங்கள் ஒப்புதல் மறுத்ததோடு, அந்த திட்டமும் நிராகரிக்கப்பட்டது.

இது இயற்றப்பட்டதில் இருந்து, எஃப்.ஆர்.ஏ "சுமார் 40 மில்லியன் ஹெக்டேர் சமூக வன வளங்களை கிராம அளவிலான ஜனநாயக நிறுவனங்களுக்கு பாதுகாப்பதற்கான உரிமைகளை வழங்கியுள்ளது" என்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 2009 பாரஸ்டரி அவுட்லுக் ஆய்வு தெரிவித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 71.22 மில்லியன் ஹெக்டேர் காடுகளில், 56% ஆகும், இது இந்தியாவின் நான்காவது கிராமங்களால் (170,000 க்கும் மேற்பட்ட) அணுகப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, என்று 2015 ஆம் ஆண்டின் வாஷிங்டன் டி.சி ஆய்வு தெரிவிக்கிறது. இது, உரிமைகள் மற்றும் வளங்கள் முன்முயற்சி, வனக் கொள்கை மற்றும் சீர்திருத்தங்களுக்கான உலகளாவிய கூட்டணி அடிப்படையிலான, இந்தியாவை சேர்ந்த வசுந்தரா என்ற கொள்கை ஆலோசனை மற்றும் தேசிய வள மேலாண்மை ஆலோசனை அமைப்பாகும்.

நாட்டில் 28 மாநிலங்கள் மற்றும் ஒன்பது யூனியன் பிரதேசங்களில், 20 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியன, வன உரிமைகள் சட்டத்தை செயல்படுத்துவதாக, பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேச அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018 பிரமாண வாக்குமூலம் தெரிவித்தது. சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை தசாப்தங்களாக, 40 மில்லியன் ஹெக்டேரில் 13% மட்டுமே வன உரிமைகள் சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் விவகார அமைச்சின் தரவுகளின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த காடுகளில் இது, வெறும் 6.8% ஆகும்.

வன உரிமைகள் சட்டத்தின் கீழ், பலவகை உரிமைகள் உள்ளன, அதாவது நிலம் அல்லது பரப்பளவில் ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகள், அவை வன விளைபொருட்களை சேகரிக்க உள்ளூர்வாசிகளால் பயன்படுத்தப்படலாம். பல்வேறு வகையான உரிமைகளின் கீழ் நிலத்தில் பகிரங்கமாக பிரிக்கப்படாத தரவு எதுவும் இல்லை. பெரும்பாலும், ஒரே நிலப்பரப்பில் பல வகையான உரிமைகள் இருக்கலாம். உதாரணமாக, சிறிய வன உற்பத்தி சேகரிப்புக்காகக் கோரப்பட்ட பகுதிகள், கால்நடை மேய்ச்சலுக்காகக் கோரப்பட்ட பகுதிகளுடன் ஒன்றிணைந்து, இரட்டை எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் மற்றும் இது, 13% எண்ணிக்கையை மிகைப்படுத்தி மதிப்பிடுகின்றன.

வன உரிமைகளின் கீழ் உரிமை கோரப்பட்ட நிலத்தின் மீது காடு வளர்ப்பு இருக்கக்கூடும்

வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்ட வன நிலங்களுக்கு, கிராம சபைகள் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்க வேண்டும், ஆனால் ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக நிலத்தை திசை திருப்புவதற்கு முன்பு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அத்தகைய ஒப்புதல் தேவையில்லை. இருப்பினும், 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஒப்புதல் தேவைப்படுகிறது, இது வன உரிமைகள் பெறப்படும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் கிராம சபைகளின் ஒப்புதல் தேவை மற்றும் அவர்களின் உரிமைகளை இழக்கும் போது - தனிநபர் மற்றும் சமூக உரிமைகள் - போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், காடு வளர்ப்பு நிலங்களில் 70% க்கும் மேற்பட்டவை, காடுகள் மற்றும் பல வன உரிமைகள் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் அல்லது சமூகங்களால் உரிமை கோரப்பட்ட நிலங்களில் இருந்தன, 2017 ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் 2,479 ஈடுசெய்யும் காடு வளர்ப்பு தோட்டங்கள் பற்றிய பகுப்பாய்வைக் கண்டறிந்தது. 63 கிராமங்களில் 53 இல் உள்ள நிலங்கள் கிராமசபையின் அனுமதியின்றி எடுக்கப்பட்டன, மேலும் சமூகங்கள் இழப்புக்கு ஈடுசெய்யப்படவில்லை என்று பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. சத்தீஸ்கரில் கசவுண்டி மற்றும் துஹமேதா கிராமம் மற்றும் கர்நாடகாவின் ஹராகபாவி கிராமம் போன்றவற்றில், உள்ளூர் சமூகங்கள் அணுகுவதைத் தடுக்க தோட்டங்கள் வேலி போடப்பட்டன.

நிலங்களை திசை திருப்ப உதவி செய்யும் அரசு

வனம் பிற திட்டங்களுக்காக திசை திருப்புவதை விரைவாகவும் எளிதாகவும் செய்ய, சுற்றுச்சூழல் அமைச்சகம் வருவாய் நிலங்களையும், மோசமான வன நிலங்களையும் ஈடுசெய்யும் காடுகளுக்கு அடையாளம் காணுமாறு ஆகஸ்ட் 8, 2014 மற்றும் நவம்பர் 8, 2017 அன்று மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. ஆந்திரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2.68 மில்லியன் ஹெக்டேர் (திரிபுராவின் பரப்பளவில் இரண்டரை மடங்கு) அமைந்துள்ளது என, இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2017 கட்டுரை கூறியது.

கேரளா தவிர, வன உரிமைகள் சட்டம் செயல்படுத்தும் அனைத்து 20 மாநிலங்களும் வன நிலங்களில் ஈடுசெய்யும் காடு வளர்ப்பையும் செயல்படுத்துகின்றன. நான்கு மாநிலங்கள் (பஞ்சாப், ஹரியானா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம்) மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் (சண்டிகர் மற்றும் டெல்லி) ஆகியவை காடுகளை பதிவு செய்திருந்தாலும், ஈடுசெய்யும் காடு வளர்ப்பை செயல்படுத்துகின்றன, ஆனால் வன உரிமைகள் சட்டம் அல்ல. ஈடுசெய்யும் காடு வளர்ப்பிற்காக மணிப்பூர் மட்டுமே காடு அல்லாத நிலங்களை மட்டுமே திருப்பிவிட்டதை தரவுகள் காட்டுகின்றன.

Sources: State of Forest Report 1999, Rights and Resources Initiative, State-wise FCA projects from Parivesh of the Ministry of Environment, Forests and Climate Change. FCA Project Plantations Reports from e-Green Watch, Monthly update on status of implementation of the Scheduled Tribes and Other Traditional Forest Dweller (Recognition of Forest Rights) Act, 2006
Note: Explore data on potential area here.

வன உரிமைகள் சட்டத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகள்

இமாச்சலப் பிரதேசம், அதன் பரப்பளவில் 66.5% காடுகளின் கீழ் உள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் சான்றின் அடிப்படையில், மாநிலத்தில் வன உரிமைகள் சட்டத்தின் உரிமைகோரல்கள் இல்லை என்று இமாச்சல பிரதேச அரசு கூறியதுடன், சுற்றுச்சூழல் அமைச்சகம் செப்டம்பர் 20, 2012 அன்று வன உரிமைகள் சட்டத்திற்கு இணங்குவதில் இருந்து விலக்கு அளித்தது. ஆங்கிலேயர் காலத்தில் வன உரிமைகள் தீர்க்கப்பட்டதாக அரசு கூறியது, ஆனால் 2020 ஜனவரியில், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் தகவல்களின்படி, வன உரிமைகள் சட்டத்தின் கீழ் 2,700 உரிமைகோரல்களில் இருந்து 1,921 ஹெக்டேருக்கு 164 உரிமைகள் வழங்கத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

வன உரிமைகள் சட்டம், எந்தவொரு விலக்கையும் வழங்கவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள சாலை கட்டுமானம், கால்வாய்கள், குழாய் பதித்தல், ஆப்டிகல் ஃபைபர்கள், டிரான்ஸ்மிஷன் கோடுகள் போன்ற திட்டங்களுக்கு, கிராம சபையின் ஒப்புதலில் இருந்து 2013 பிப்ரவரி மாதத்தில் விலக்கு அளித்தது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் உரிமைகள் (பழங்குடியினக் குழுக்களிடையே மிகவும் பின்தங்கியவை பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கு வன வளங்களை சார்ந்திருப்பவர்கள்) சம்பந்தப்பட்ட இடங்களில் இது பொருந்தாது என்ற எச்சரிக்கையுடன், இந்த விலக்கு நடைமுறைக்கு வந்தது. ஆனால், மார்ச் 7, 2014 அன்று, பழங்குடியினர் அமைச்சகம், வன உரிமைகள் சட்டம் "எந்தவொரு திட்டங்களுக்கும் எந்தவிதமான விலக்கையும் வழங்கவில்லை" என்பதால் எந்தவொரு விதிவிலக்கையும் ஏற்கவில்லை என்று கூறியது. "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வன உரிமைகள் சட்டத்திற்கு இணங்குமாறு திட்டங்களை வற்புறுத்தவில்லை என்றாலும், வன உரிமைகள் சட்டத்தை மீறுவதற்கு நிலம் கையகப்படுத்தும் / அதிகாரிகள் இடமாற்றத்திற்கு இது அங்கீகாரம் அளிக்கிறது என்று கூற முடியாது" என்று, 2014ம் ஆண்டில் அனைத்து மாநில அரசுகளுக்கும் பழங்குடி விவகார அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வன நிலங்களில், பட்டியலின பழங்குடியினரின் உரிமைகள் தொடர்பான சட்டம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு 2006 இல் மாற்றப்பட்டன, ஆனால் சுற்றுச்சூழல் அமைச்சகம் பழங்குடியினர் அமைச்சகத்தின் ஆட்சேபங்களை மீறி, உத்தரவுகளை பிறப்பித்து சட்டங்களை திருத்தியது. மேலும், வன நிர்வாகத்திடம் இருந்து காடுகளின் நிர்வாகம் கிராமசபைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று வன உரிமைகள் சட்டம் கூறுகிறது. ஆனால், களத்திலோ வன நிர்வாகத்தினர் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் காடுகளை நிர்வகித்து வருகின்றனர், இது வன உரிமைகள் சட்டம் அமலாக்கத்தின் தேவையை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் வனப்பகுதிகளை திசைதிருப்ப கிராம சபைகளிடம் இருந்து ஒப்புதல் அளிக்கப்படுவதை எங்கள் பகுப்பாய்வு கண்டறியப்பட்டது.

இந்த சட்டங்களை மாற்றுவதில், சுற்றுச்சூழல் அமைச்சகம் வன உரிமைகள் சட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரே "காடு தொடர்பான பிற சட்டங்களை நன்றாக சரிசெய்யப்பட" வேண்டும் என்ற தனது சொந்த ஒப்புதலுக்கு எதிராக செல்கிறது. வன உரிமைகள் சட்டத்தின் விதிமுறைகளை அதிகாரிகள் மீறுவது ஒரு குற்றமாகும், மேலும் வன உரிமைகளை மீறும் எவரும் வன உரிமைகள் சட்டம் மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கொடுமை தடுக்கும்) சட்டம்-1989 இன் கீழ் வழக்குத் தொடரலாம் என்று சட்டம் கூறுகிறது.

இது குறித்து கருத்து அறிய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அமைச்சகம் பதிலளித்தால், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:710px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Amendments To Laws/Rules On Forest Land Diversion
Law Year Link Amendment
Forest (Conservation) Act 1980 January 2003 Forest (Conservation) Rules 2003 This replaced the Forest (Conservation) Rules 1981, and provided details on who would receive proposals for forest diversions and the process for getting approvals.
August 2009 F.No.11-9/1996-FC (pt) A guideline was issued which mandated consent from Gram Sabhas for forest diversion and implementation of the Forest Rights Act.
March 14, 2014 Forest (Conservation) Amendment Rules 2014 Instead of direct consent from the Gram Sabhas, the environment ministry said that District Collectors could issue a certificate showing consent of Gram Sabhas. Under the FRA, the final authority on the Forest Rights Act lies with the District Level Committee, with the District Collector as Chairman. The 2017 amendment clarifies these rules and breaks them up into separate provisions.
March 6, 2017 Forest (Conservation) Amendment Rules 2016
February 26, 2019 File No.11-43/2013 FC The environment ministry said that FRA compliance is not necessary for an ‘in-principle’ approval for forest diversion. Gram Sabha consent would be required only at the time of final approval. The tribal ministry opposed this change.
March 31, 2020 F.No.11-97/2018-FC The environment ministry agreed with the The Mineral Laws (Amendment) Act 2020 that new lessees of expired mines do not need fresh approval--and therefore Gram Sabha consent--to operate on the same land for two years.
Violations of the Forest Rights Act February 5, 2013 F. No.11-9/98-FC(pt) Even though the law does not allow it, the MoEFCC exempted linear projects such as roads, canals, pipelines/optical fibres, and transmission lines, etc., from obtaining Gram Sabha consent for forest diversion unless recognised rights of PVTGs are being affected. The ministry of tribal affairs did not agree with this change.
January 15, 2015 F. No.11-306/2014-FC In spite of opposition from the tribal ministry, the MoEFCC simplified the procedure for felling of trees in linear projects.
October 28, 2014 Letter F.No.11-09/98-FC(pt) The MoEFCC granted District Collectors unilateral powers to sanction diversion of forest land in areas notified as ‘forest’ less than 75 years before December 13, 2005 and with no record of tribal population as per Census 2001 and 2011. This amendment should not have been allowed because, for the FRA to be applicable, when the forest was itself notified is irrelevant and non-tribal forest dwellers have to prove their residence in the region prior to 1930 and not specifically on that forest land.

கடந்த அக். 2014 இல், 1930 டிசம்பர் 13-க்குப் பிறகு பழங்குடியினர் அல்லாத கிராம வனங்களை, காடுகள் அல்லாதவற்று திசை திருப்புவதர்கு சுற்றுச்சூழல் அமைச்சகம், வன உரிமைகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்தது, இதனால் கிராமவாசிகள் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிமை பெற தகுதியற்றவர்கள். காடுகளை மாநில அரசுகள் அறிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த விலக்கு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படக்கூடாது, காடு அறிவிக்கப்பட்டபோது பொருத்தமற்றது மற்றும் பழங்குடியினர் அல்லாத வனவாசிகள் 1930-க்கு முன்னர் இப்பகுதியில் தங்கள் குடியிருப்பை, குறிப்பாக அந்த வன நிலத்தில் உரிமை கோர தகுதியற்றவர்கள் அல்ல வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அந்த பகுதியில் உரிமைகளை நிரூபிக்க வேண்டும் என்று, பழங்குடியினர் விவகார அமைச்சகம் மேற்கோள்கள் தெரிவித்தன.

நிலத்தை திசைதிருப்ப கிராமசபையின் ஒப்புதலின் தேவையை மேலும் குறைக்க, சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014 இல் வன பாதுகாப்பு சட்ட விதிகளை திருத்தியது. இது வன பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கும் கிராம சபைகளின் சம்மதத்தைப் பெறுவதற்கும் 2009 வன பாதுகாப்பு சட்ட இணக்க ஆணையை இணைத்தது, ஆனால் ஒவ்வொரு கிராமசபையின் சான்றிதழ்களுக்குப் பதிலாக, எஃப்.ஆர்.ஏ இன் கீழ் ஒப்புதலுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மட்டுமே தேவை என்றது. வன பாதுகாப்பு சட்டம் அமலாக்கத்திற்கான மாவட்ட அளவிலான குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியரே, வன உரிமைகளைப் பதிவுசெய்து, கிராமசபைகளின் ஒப்புதலைப் பெறுவதற்கான பொறுப்பு கொண்டிருப்பார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில், இந்த விதிகளில் மற்றொரு திருத்தம் மூலம், சுற்றுச்சூழல் அமைச்சகம் கிராமசபையின் ஒப்புதல் என்ற சட்டத்தை மேலும் தளர்த்தியது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் கிராம சபையின் ஒப்புதல் தேவையில்லை என்று அமைச்சகம் கூறியது. எந்தவொரு சான்றிதழும் இல்லாமல் நிலத்தை திருப்புவதற்கு மாவட்ட ஆட்சியர் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிக்க முடியும். சான்றிதழ் இப்போது அனுமதி செயல்பாட்டின் இறுதி கட்டத்தில் மட்டுமே தேவைப்படும், அதாவது அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், கிராம சபையின் ஒப்புதல் தேவைப்படும்.

ஒவ்வொரு கட்டத்திலும் வன உரிமைகள் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதை எதிர்த்த பழங்குடி அமைச்சகம், திசைதிருப்பல் இப்போது ஒரு "நடந்து முடிந்த" ஒன்றாக இருக்கும் என்று கூறியது, அதன் பொருள், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிலத்தை திசை திருப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகும்.

(சி.ஆர். பிஜோய், ஆதிவாசி மற்றும் வனவாசிகளின் அமைப்புகளின் தேசிய அமைப்பான Campaign for Survival and Dignity-ல் இருக்கிறார், மேலும் இயற்கை வள அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினைகள் குறித்து செயலாற்றி வருகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News