இந்து கண்காணிப்பாளர்களால் சரிவடையும் ராஜஸ்தான் மாடு வர்த்தகம்

Update: 2019-05-15 02:00 GMT

புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது பெரிய கால்நடை வர்த்தகத்தை கொண்டுள்ள ராஜஸ்தானில் முன்னணி கால்நடை திருவிழாவில் மாட்டு வியாபாரம், 2017ஆம் ஆண்டுடனான ஆறு ஆண்டுகளில் 95% வீழ்ச்சியுற்றது; பாரதிய ஜனதா ஆட்சியில் இது - ஒரு பிரபலமான வாழ்வாதார தேர்வாக இருந்த- மாடு வளர்ப்பு வீழ்ச்சியின் அறிகுறியாகும்.

கடந்த 2011இல், ராஜஸ்தானின் மேற்கில் உள்ள பார்மேர் மாவட்டத்தில் உள்ள தில்வாராவில் நடைபெற்ற மிகப்பெரிய கால்நடை திருவிழாவில் 7,430 மாடுகள் ரூ.1.35 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டன. 2017 க்குள், இந்த சந்தையில் விற்ற பசுக்களின் எண்ணிக்கை 342 ஆகக் குறைந்து, வருவாய் ரூ.7.3 லட்சமாக சரிந்தது என அரசின் அதிகாரபூர்வ அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.

இந்த போக்கு ராஜஸ்தான் முழுவதும் காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் மாநிலத்தில் கால்நடை கண்காட்சிகளில், 2,000 (25%) விலங்குகளில் 500 மட்டுமே விற்பனை செய்யப்பட்டன என்று, டவுண் டு எர்த், 2019 ஜனவரியில் செய்தி வெளியிட்டு இருந்தது.2012-13ஆம் ஆண்டில் 54,000 கால்நடைகளில் 37,000 எண்ணிக்கை விற்பனையானதுடன் ஒப்பிடும் போது, இது 44% வீழ்ச்சியாகும்.

மேலும், மாடுகளைப் பாதுகாப்பதற்காக பா.ஜ.க.வின் பல்வேறு அதிகாரப்பூர்வ இயக்கங்கள் இருந்தபோதிலும், குறிப்பாக அவற்றின் சொந்த இனங்கள் மறையும் நிலையில் இனப்பெருக்கத்தை அதிகரித்தல் போன்றவற்றுக்கு, ராஜஸ்தானின்அரிதான பாலைவனம், தார்பர்கர், பாஜகவின் ஐந்தாண்டு ஆட்சியில் அழிவை நோக்கி நகர்ந்தது என, 2017 கால்நடை ஆய்வு தெரிவிக்கிறது.

வறண்ட பாலைவன மாவட்டங்களில் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் இல்லாததால், கால்நடை வளர்ப்பு பாரம்பரியமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உயிர்நாடியாகவே உள்ளது. ஆனால், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பார்மர் ஆகியவற்றின் கிராமப்புற பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட கள விசாரணைகளில், பசு பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு குழுவால் - பசு கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் மக்களைத் தாக்கும் வலதுசாரி ஆதரவு குழுக்களால் - கிராமவாசிகள் அதுதொடர்பான தொழில்களை கைவிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

"இரண்டு எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள 95% கிராமத்தினர் (முஸ்லீம்), இந்துத்துவா குழுவினரின் அச்சுறுத்தல்கள் காரணமாக கால்நடை வணிகத்தை கைவிட்டுவிட்டனர்" என்று, பார்மர் மாவட்டத்தின் தெரசாஸ் கிராமத்தை சேர்ந்த முகமது இஷாகான் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மோர் மாவட்ட எல்லையோரங்களில் உள்ள 95% கிராமத்தினர் (முஸ்லீம்), இந்துத்துவா குழுவினரின் அச்சுறுத்தலால் கால்நடை வணிகத்தை கைவிட்டுவிட்டனர்" என்று, தெரசாஸ் கிராமத்தை சேர்ந்த முகமது இஷாகான் தெரிவித்தார்.

தினமும் சுமார் 6 லிட்டர் பால் உற்பத்தி செய்து, இந்தியாவின் முதன்மை பால் வழங்கி வந்த பசுமாடு, அதன் இடத்தை எருமை மாட்டிடம் இழந்துள்ளது; எருமை, சுமார் 12 லிட்டர் தருகிறது. மத்தியிலும், மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசுகள், கடுமையான பசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்த பிறகும், பசு கண்காணிப்பு குழுவினரின் தாக்குதல்கள் அதிகரித்ததாலும், அதன் சந்தை மதிப்பு மேலும் சரிவை சந்தித்தது.

கடந்த 2014 மே மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே, ஒன்பது மாநிலங்களில் பசுக்களுக்கு எதிரான வன்முறைகளில் 45 பேர் கொல்லப்பட்டதாக, உள்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் அதே காலத்தில் ஏழு சம்பவங்கள் நடந்தன.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், இன்று வரை 22 மாநிலங்களில் மொத்தம் 127 பசு தொடர்பான தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக, அத்தகைய வன்முறை பற்றிய ஆங்கில ஊடக செய்திகளை கண்காணித்து வரும் பேக்ட்செக்கர்.இன் தரவுகள் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல்களில் 98 சதவிகிதம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த மே 2014 க்குப் பிறகு நடந்தன. ராஜஸ்தானில் நிகழ்ந்த 10 தாக்குதல்களுமே, 2014 க்குப் பிறகு நடந்ததை தரவுகள் காட்டுகின்றன.

வயதான கால்நடைகளை சந்தையில் விற்க முடியாது என்ற நிலையில் இருந்த விவசாயிகள், அவற்றை உணவுக்காக கொல்வது அல்லது, மறைமுகமாக அவற்றை பறிகொடுப்பது என்றிருந்தது. இவ்வாறு மேய்ச்சல் மாடுகளில் நிலையானது, விவசாயத்தையும் அழிக்க தொடங்கின. குறிப்பாக இந்தியாவின் ம்மையப்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில், கோழி பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது பெரும்பாலும் மத்திய பிரதேசத்தில், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வன்முறைக்கு வழிவகுத்தது.

"சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக கால்நடை விவகாரம் வெளிப்பட்டது," என்று, ராஜஸ்தான் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (கால்நடை வளர்ப்பு), பவன் குமார் கோயல், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "2,727 பதிவு செய்யப்பட்ட கோசாலைகள் (பசு கொட்டகை) உள்ளன, இவை அனைத்தும் நிதி ஆதாரமற்றவை அல்ல. அங்கு வயதான மற்றும் நோயுற்ற பசுக்கள் அல்லது கன்றுகளை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை தெருக்களிலும் வயல்வெளிகளிலும் திரிந்து பயிர்களை உண்டு நஷ்டம் விளைவிக்கும்" என்றார் அவர்.

இந்தியாவின் ரயில் தண்டவாளத்தில் இறக்கும் பசுக்கள் எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டுடனான மூன்று ஆண்டுகளில் 112% உயர்ந்துள்ளது என்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ், ஆகஸ்ட் 2018 இல் செய்தி வெளியிட்டது. கடந்த 2015-16ல் இந்தியா முழுவதும் 2,183 வழக்குகள் பதிவாகியுள்ளன; ஆனால் 2017-18 இல்இது 10,105 ஆக உயர்ந்துள்ளது; இது 362% அதிகரிப்பாகும். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்தவை. அதிகாரத்தை பா.ஜ.க. கைப்பற்றியபின், மாட்டு பாதுகாப்பு என்பது ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது.

ஜெய்ப்பூருக்கு அருகே ஹொங்கொனியாவில் 2019 பிப்ரவரியில் கிட்டத்தட்ட 500 பசுக்கள் பட்டினியால் இறந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. 2013 முதல் 2018 வரை ஐந்து ஆண்டுகளில் 70,000 க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துவிட்டதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜனவரி 23, 2019 அன்று குற்றச்சாட்டு கூறினார்.

ராஜஸ்தான் கால்நடைத்துறை (கோபாலன்) அமைச்சர் பிரமோத் ஜெயின் பாயே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கையாள்வதில் பல "மரபுவழி சிக்கல்கள்" இருந்தன என்பதை ஒப்புக்கொண்டார். "மார்ச் 2, 2019 அன்று, மாநில அரசு ஜெய்ப்பூரில் உள்ள பசு உரிமையாளர்களுடன் ஒரு மாநாட்டை நடத்தியது," என்ற அவர், "அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், நாங்கள் ஒரு கொள்கையை அமைப்போம்" என்றார். மாடுகளின் நலனுக்காக அமைச்சகத்தை அமைத்த முதல் மாநிலம் ராஜஸ்தான்; இப்போது அது ஒரு நிர்வாகத் துறையாக மாறியுள்ளது.

'பசுவை வைத்து வியாபாரம் செய்வதை எங்களால் அனுமதிக்க முடியாது'

ராஜஸ்தான் எல்லைப்புற மாவட்டமுஸ்லீம் கிராமவாசிகள் தலைமுறைகளாக, கால்நடைவளர்ப்பு தொழில் செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வேலையில் இல்லை.

"முஸ்லீம் குடும்பங்கள் பாரம்பரியமாக இந்த பகுதியில் பசுக்களை மிக பக்தியோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன " என்று தார் இன கால்நடை பாதுகாப்பு அமைப்பான தர் ஜக்ருக் நாகிரிக் மஞ்ச் ஒருங்கிணைப்பாளர் புவனேஷ் ஜெயின் தெரிவித்தார். "அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்து தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள் இந்த பகுதிகளின் சமூக பொருளாதார விவரங்களை மாற்றியுள்ளன. முஸ்லீம்கள் மாடு தொழிலை கைவிட்டு மற்ற வாழ்வாதாரத் திட்டங்களுக்கு மாறி வருகின்றனர் " என்றார் அவர்.

ஜொலூர் மாவட்டத்தில் சஞ்சூரில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பசுக்களுக்கு எதிரான வன்முறை மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பஜ்ரங்தளத்தின் உள்ளூர் பிரிவுகள், ஒரு வலதுசாரிக் குழு, உள்ளூர் முஸ்லிம்களை எந்தவொரு கால்நடை தொழிலுக்கும் திரும்ப அனுமதிப்பதில்லை.

"அவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் அல்ல, ஆனால் அவர்களில் சிலர் மாடு கடத்தல்காரர்கள்," என்று சாஞ்சோரில் உள்ள பஜ்ரங்தள் அமைப்பின் சாண்ட் சர்வந்தாஸ் கூறினார். "நாங்கள் சுமார் 15 தன்னார்வலர்கள் கொண்ட படை அமைத்து, ஒரு எல்லை பகுதிகளை கண்காணிக்கிறோம். அவர்கள் (முஸ்லிம்) பசு வியாபாரம் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

பஜ்ரங்தளத்தின் உத்தி வேலை செய்ததாக தோன்றுகிறது. "மாடு விற்பனை / வாங்கலில் இருந்து எவ்வித பணமும் கிடைக்கவில்லை. இந்துத்துவா குழுவினரிடம் இருந்து மாநிலத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை" என்று தெரசாஸ் கிராமத்து விவசாயி முசகத் அலி கூறினார். "எங்களுக்கு மாட்டு வியாபாரத்தை தவிர வேறு வழி தெரியாது; ஆனால் அதை கைவிட்டாக வேண்டும்" என்றார்.

.fluid-width-video-wrapper { display: inherit !important; } Full View

பஜ்ரங்தள் ஆதரவாளர்கள், கொட்டகையில் மாடு வளர்க்கும் முஸ்லீம்களையும் கூட விட்டுவைக்கவில்லை என்று கிராமவாசிகள் புகார் கூறினர். "ஜோத்பூர்-பார்மர் சாலையில் இருக்கும் பூஜாவத் கிராமத்தில், எங்கள் அமைப்பு - மார்வார் முஸ்லிம் கல்வி மற்றும் நலச்சங்கம் - கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மாட்டு பண்ணை நடத்தி வருகிறது" என்று நிறுவனத்தின் புரவலர் ஷோகாட் அன்சாரிகூறினார். "ஆனால் பஜ்ரங்தள் ஆட்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததால், நான் கடந்த மாதம் அந்த வணிகத்தை மூட வேண்டியிருந்தது" என்றார்.

பார்மர் மாவட்டத்தின் பந்தசார்ஸ் பகுதியை சேர்ந்த ஹாகாம் கானும் இதேபோன்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டார். "பஜ்ரங் தள் தொண்டர்கள் சமீபத்திய ஆண்டுகளில் முற்றுகையிட்ட் காளை மாடு விற்பனை செய்வதை தடுக்கிறார்கள்," என்று அவர் கூறினார். "ராஜஸ்தான் முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் அல்ல; ஆனால் சமூகம் இன்னும் அவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த குழுக்களின் கோபத்தில் இருந்து தப்புவதற்கு மற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்" என்றார்.

பயன்படுத்தப்படாத பசு நலனுக்கான நிதி

ராஜஸ்தானில், பாஜக அரசின் பசு பாதுகாப்பு தொடர்பான பேச்சுகள், அதன் நடவடிக்கைகளோடு பொருந்தவில்லை. பசு பாதுகாப்புக்கு என ரூ. 123.43 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ. 9.84 கோடி மட்டுமே அதாவது ஒதுக்கீட்டில் 8% மட்டுமே செலவிடப்பட்டது, மாநில கால்நடை நலத்துறை அமைச்சகத்தின் 2016-17 அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த திட்டங்களுக்கான நிதி படிப்படியாக குறைந்துவிட்டன: கடந்த 2014-15இல் 100.39 கோடி ரூபாய் என்றிருந்தது, 2015-16ல் ரூ.13.75 கோடி ஆகவும், 2017-18இல் ரூ. 9.28 கோடியாகவும் இருந்தது. முக்கிய திட்டங்கள் கசிந்ததாக, அறிக்கை காட்டியது. 2014-15 ஆம் ஆண்டில் மாநில அரசு கோசாலைக்காக ரூ. 91.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது; ஆனால் செலவிடப்படவில்லை. அடுத்த ஆண்டு, ரூ 3 லட்சம் வழங்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படாதது. 2016-17 ல் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது, அதில் 3 லட்சம் ரூபாய் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு எதிராக ரூ. 21.63 லட்சம் செலவிடப்பட்டது.

"அதே ஆண்டில், திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி தேவை என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது" என்று, ஜெய்ப்பூரை சேர்ந்த பட்ஜெட் பகுப்பாய்வு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவரும் சிந்தனையாளருமான நசீர் அகமது தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட பசுக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ்,2014-15 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 2.06 கோடியில் ரூ. 7.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அனுமதிக்கப்பட்ட தொகையில் இது ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு. ராஜஸ்தானின் புதிய கால்நடைத்துறை அமைச்சர் பிரமோத் ஜெயின் பாயாவிடம் அளித்த மனுவில் கோ கிராம் சேவா சங்கம் - 2000 கால்நடை கொட்டகைக்கான கூட்டு - இரு விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.

  • கடந்த ஐந்து ஆண்டுகளில், நந்தி ஷாலஸ் (காளைகளுக்கான கொட்டகை முகாம்) அபிவிருத்தி செய்வதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரூ .50 லட்சத்தை தொடர்ந்து மாநில அரசு வெளியிடவில்லை. இதுவரை ரூபாய் 16.50 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ளது;
  • அதேபோல், 25 அடையாளம் காணப்பட்ட பசு கொட்டகைகளில் இயற்கை எரிவாயு சாதனங்கள் நிறுவுவதற்கான ஒரு திட்டத்திற்காக நிதி விடுவிக்கப்படவில்லை.

முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, பிகானேர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களில் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இரண்டு மாடு சரணாலயங்களை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. மேலும், பால் தொடர்பான வணிகத்தை அதிகரிக்க, பிகானேரில் ஒரு "பாலாடை கட்டி மையம்", பில்வாராவில் ஒரு "சாக்லேட் உற்பத்தி மையம்" அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். ஆனால் இரு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

கடந்த 2014 டிசம்பரில் நரேந்திர மோடி அரசு பசு மாடுகளை பாதுகாப்பதற்காக 150 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தது. நாகோரி, ரதி மற்றும் கிர் போன்ற தார்பர்கர் மற்றும் பிற பாலைவன பகுதி மாடு இனங்கள் பின்தங்குவதை தடுக்க, இந்த திட்டம் ராஜஸ்தானில் மட்டுமே பகுதியாக செயல்படுத்தப்பட்டது. அதன் முதல் வருடம் (2014-15), மாநிலத்திற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது; ஆனால் நிதி எதுவும் வெளியிடப்படவில்லை.

"இந்த திட்டங்கள் எதுவும் செயல் வடிவில் மாற்றப்படவில்லை.ஏனெனில் பாரதிய ஜனதா, மாடுகளை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துவதில் தான் ஆர்வமாக உள்ளது” என்று, ராஜஸ்தான் முன்னாள் கோ சேவா ஆயோக்(கால்நடை நலத்துறை ) முன்னாள் உறுப்பினர் பூனம் பண்டாரி தெரிவித்தார்; பின்னர் பாஜக அரசால் இந்த அமைச்சகத்திற்கு கோபாலன் மறுபெயர் சூட்டப்பட்டது.

"கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் மூலம் பா.ஜ.க. அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது, பல்வேறு கால்நடை நலத்திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டன" என்று ராஜஸ்தான் முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் ஒட்டாரம் தேவஸி தெரிவித்தார். இவர், 2018 சட்டசபை தேர்தலில் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

தார்பர்கரின் சரிவு

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ராஜஸ்தானின் தார்பர்கர் மாவட்டம், வீரம் மிக்க அதன் கால்நடை இனத்தால் ஈர்க்கிறது. நாம் முன்பே கூறியது போல், பாலைவன வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் திறனுக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் அது மதிக்கப்படுகிறது. நாகோரி போன்ற பிற பழங்குடி இன மாடுகள் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக 5 லிட்டர் பாலை உற்பத்தி செய்யும் போது, தார்பர்கர் 8 லிட்டர் உற்பத்தி செய்கிறது என்று புவேஷ் ஜெயின் கூறுகிறார்.

பார்மேரில் சுமார் 2,301 "சிறப்பு இயல்பு" மாடு வகைகள் மற்றும் ஜெய்சால்மரில் -பெரும்பாலும் தார்பார்க்கர் -1,637 மாடுகளும் இருந்ததாக, 2012 கால்நடை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கைகள் 2017 கணக்கெடுப்பின் போது மேலும் சரிந்துவிடும் என்று, ராஜஸ்தான் அரசில் பதவியில் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"தார்பர்கர் போன்ற மாட்டு இனங்கள் அழிவிற்கு அருகில் உள்ளன," என்று, ராஜஸ்தான் அரசு கால்நடைத்துறை (கோபாலன்) இயக்குனர் கஜான் சிங் தெரிவித்தார்.

தார்பார்க்கர் இன மாடுகளின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. "காலநிலை மாற்றம், பயிர் முறைகளில் மாற்றங்கள் (தீவனம் பற்றாக்குறையை ஏற்படுத்துதல்), இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், டிராக்டர் பயன்பாடு மற்றும் ஓரன் மற்றும் கூச்சர் நிலங்கள் (பொது மேய்ச்சல் நிலங்கள்) ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை தார்பார்க்கர் இன கால்நடைகளின் எண்களில் படிப்படியாக வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தது” என்று, பார்மர் சார்ந்த தன்னார்வ அமைப்பான கிராமப்புற மேம்பாட்டிற்கான சங்கத்தின் (SURE) லதா கச்சாவா தெரிவித்தார். "ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் தார்பர்கர் இனத்தின் உயிர் பிழைப்பதற்கான மிகப்பெரிய தடையாக மாடு கண்காணிப்புக் குழுக்கள் வந்துள்ளன" என்றார் அவர்.

Full View

கடந்த 1990களின் பிற்பகுதியில், இரண்டு தார்பர்கார் காளைகள் கால்நடை சந்தையில் ரூ. 30,000க்கு பெறுவார்கள். "ஆனால் இந்நாட்களில் அதை தேர்வு செய்ய யாரும் முன்வருவதில்லை," என்று, ஜெய்ப்பூரை சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியில் ஈடுபடும் விகாஸ் ஆத்யாயன் சன்ஸ்தான் அமைப்பின் தல்பீர் சிங் தெரிவித்தார்.

(ஜா, டெல்லியை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News