திருமணத்தை ஓராண்டு தள்ளிப்போடுவதால் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு அதிகாரம் தரலாம்

Update: 2018-11-10 00:30 GMT
திருமணத்தை ஓராண்டு தள்ளிப்போடுவதால் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு அதிகாரம் தரலாம்

மும்பை: இந்தியாவில், பெண்களின் திருமணத்தை ஓராண்டுக்காகவது தள்ளிப் போடுவதன் மூலம், குடும்ப வன்முறைகளுக்கு அவர்கள் இலக்காவது குறிப்பிடத்தக்க அளவில் குறைய வாய்ப்புள்ளதாக, அண்மையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டுடன் முடிந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை, 20% புள்ளிகள் குறைந்துள்ளன; அதாவது, 2006ஆம் ஆண்டில் 47% ஆக இருந்தது, 2016ஆம் ஆண்டில் 27% என சரிந்துள்ளதாக, யுனிசெப் தெரிவிக்கிறது. எனினும், திருமணத்தை தாமதமாக செய்பவர்களை விட, 1.5 மில்லியன் பெண்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படுவதாக, இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்) மற்றும் சிவ்நாடார் பல்கலைக்கழகம் கூட்டாக நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டில் ”குறைந்தளவு உடல் ரீதியான வன்முறை” -- அதாவது அழுத்துவது, கையை முறுக்குதல், முடியை இழுத்தல் அல்லது அடித்தல்-- போன்றவை பெண்ணின் திருமணத்தை ஓராண்டுக்கு தாமதப்படுத்துவதால், 25%ல் இருந்து 18% ஆக குறையும்.  கடும் குடும்ப வன்முறையான -- அதாவது உதைத்தல், தாக்குவது, ஆயுதங்களால் அச்சுறுத்துவது அல்லது அடிப்பது-- போன்றவை 6%-ல் இருந்து 2% ஆக குறையும் என்று, 2018ஆம் ஆண்டு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நடைமுறையை, தேசிய பெண்கள் எண்ணிக்கையில் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 586 மில்லியன்; அவர்களின் 50% பேர் பெண்கள்) பயன்படுத்தினால், குடும்ப வன்முறைக்கு இலக்காகும் பெண்களின் எண்ணிக்கை, 73 மில்லியனில் இருந்து 53 ஆக, அதாவது 20 மில்லியன் ஆக  குறையும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடும் உடல்ரீதியான வன்முறைக்கு உட்பட்டவர்களது எண்ணிக்கை 18 மில்லியனில் இருந்து, 6 மில்லியனாக சரியும் வாய்ப்புள்ளது.

திருமணத்திற்கு பின் இளம்பெண் ஏன் வீட்டு வன்முறையை சந்திக்க வேண்டியுள்ளது? இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் படிப்பு தடைபடுகிறது. மன, உடல்ரீதியாக முதிர்ச்சி பெறாதது, தாக்குதலுக்கு உள்ளாகும் போது எதிர்ப்பை காட்டாதது, தற்காத்துக்கொள்ள தெரியாதது போன்றவை “பாதுகாப்பை பாதிக்க செய்கிறது” என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும், முறையான கல்விக்கு பதில் குடும்ப பொறுப்புகளுக்கு நிர்பந்திக்கப்பட்ட பெண்கள், குறைந்த சமூக, பொருளாதார வளங்களையே கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் திருமணத்திற்கு அதிகாரம் அளிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுவதாக, அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொது சுகாதார பிரச்சனை. கணவரால் உடல் அல்லது பாலியல் ரீதியாக சந்திக்கும் வன்முறையால், 16% பெண்கள் குறைந்த எடையுள்ள குழந்தைகளை பிரசவிக்கின்றனர்; இதைவிட இரு மடங்கு அதிகம் பேருக்கு கருக்கலைப்பும், இரு மடங்கு எண்ணிக்கையிலான பெண்கள் மன அழுத்தத்திற்கும் உள்ளாவது தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு- 4 (2015-2016) படி, இந்தியாவில் 52% பெண்கள், மனைவியை கணவன் தண்டிப்பது ஒரு நியாயமான காரணம் என்று கருதுகின்றனர்.

சிறுவயது திருமணத்திற்கும், குடும்ப வன்முறைக்கும் இடையே இயல்பான தொடர்பு இருப்பதால், குழந்தை திருமணத்தை தடுக்கவும், அவர்களின் கல்வி தொடர்வது, திருமணத்தை தள்ளிப்போடுவதன் அவசியத்தையும் இது கோடிட்டு காட்டுகிறது.

இந்தியாவில், குழந்தை திருமணத்தை தாமதப்படுத்துவதால் உள்ள நன்மைகள் உள்ளிட்ட சமூக  விழிப்புணர்வுக்காக மத்திய (சுகன்யா சம்ரிதி யோஜனா) மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் (உதாரணத்திற்கு, மேற்கு வங்க மாநிலத்தில்  ‘கன்யாஸ்ரீ பிரகல்பா’; ஹரியானாவில் ‘அப்னி பேடி; அப்னி தன்’)  நடைமுறையில் உள்ளன.

பெற்றோர், -- குறிப்பாக குறைந்த சமூக-பொருளாதார பின்னணி மற்றும் பழமைவாத எண்ணங்களில் மூழ்கியவர்கள் -- பெரும்பாலும் ஒரு பெண் பருவமடைந்தவுடனே அவளின் திருமண ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க தொடங்கிவிடுகின்றனர்.  பெண் குழந்தையை தொடர்ந்து பாதுகாப்பதில் உள்ள சிக்கல், அதனால் ஏற்படும் செலவினம், குறைந்தை வரதட்சணை, தேவையற்ற  கர்ப்பம் அடைவாளோ என்ற கவலை போன்றவையே, மகளை சிறுவயதிலேயே மணம் முடிக்க, பெற்றோர்களை உந்துகிறது.

“பருவமடைதல் என்பது, ஒரு குழந்தையானவள் ‘பெண் ஆகியிருக்கிறாள்’ என்பதாகும்” என இந்திய குழந்தை பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் தொண்டு நிறுவனமான, ஆங்கன் டிரஸ்ட் நிறுவன இயக்குனரான சுபர்ணா குப்தா தெரிவித்தார். சிறுமியை திருமணம் செய்து கொடுப்பது (முரண்பாடானது) என்பதில் உள்ள ஆபத்தை விட, அதை பாதுகாப்பானது என்ற கருத்து நிலவுகிறது. பருவம் எய்திய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பாலியல் தொல்லைகளுக்கு இலக்காக நேரிடும்; தாக்குதலுக்கு கூட ஆளாகலாம்”.

”ஏழை குடும்பங்களில், பொருளாதார சிக்கலை சமாளிக்க சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதை போன்றது, பாதுகாப்பு கருதி சிறுமியரை இளம் வயதிலேயே மணம் முடித்து கொடுப்பதும்” என்று குப்தா மேலும் கூறினார்.

பெண்களுக்கு குறைவான மதிப்பு, குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு வித்திடும் சமூக நடைமுறைகள், பாலின சமத்துவமின்மை பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முதன்மை காரணமாக கருதப்படுகிறது.

ஒன்று அல்லது அதற்கு மேல் குடும்ப வன்முறையை அனுபவித்ததாக கூறும் 28% பேர்

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 (2015-2016) புள்ளி விவரங்களின்படி, ஆய்வுக்குழுவினருக்கு பதிலளித்த 9,343 பேர், பல்வேறு வகையான குடும்ப வன்முறைகளை தாங்கள் சந்தித்திருப்பதாக கூறியுள்ளனர்.

திருமண வயது மற்றும் குடும்ப வன்முறைக்கு இடையே இயல்பான ஒரு உறவு இருப்பதை, இதில் முதல்முறையாக வெளிப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையானது 4 பிரிவுகளாக பகுக்கலாம்: உடல் ரீதியான கடும் துன்புறுத்தல்,  குறைந்த அளவிலான உடல் துன்புறுத்தல், பாலியல் ரீதியான வன்முறை மற்றும் உணர்ச்சியால் ஏற்படும் வன்முறை.

இந்த ஆய்வில், 28% பேர் தாங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, மேலே குறிப்பிட்ட மாதிரியான குடும்ப வன்முறைகளை சந்தித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகில் மூன்றில் ஒரு பெண், தனது கூட்டாளியின் வன்முறைக்கு இலக்காகிறார் என்ற உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களோடு, இந்த ஆய்வு முடிவும் ஒத்துப்போகிறது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் கால்பகுதியினர், உடல்ரீதியாக குறைந்த வன்முறையை (25% பேர்) சந்தித்ததாகவும்; 6% பேர் கடுமையான உடல்ரீதியான வன்முறைக்கு ஆளானதாகவும், 6% பேர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், 11% பேர் உணர்ச்சிகர வன்முறையை சந்தித்தாகவும் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வன்முறை பிரிவில், 19 வயதுக்கு பின் திருமணம் செய்து கொண்டவர்களை விட, அதற்கு முன்பே மணந்து கொண்ட பெண்களே அதிக துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த வயதுடையோர் குழுவில், கடுமையான குடும்ப வன்முறைகள் மற்றும்  கடுமை குறைந்த வன்முறைகள் இடையே பெரிய வித்தியாசம் காணப்பட்டது. பாலியல் மற்றும் உணர்ச்சிரீதியான வன்முறைகளுக்கும் திருமண வயதிற்கும் எந்தவொரு தொடர்பு புள்ளியும் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

திருமண வயதில் குடும்ப வன்முறையின் தாக்கம்

Source: The causal impact of women’s age at marriage on domestic violence in India, 2018

முன்கூட்டியே பருவம் எய்துவதால் அதிகரிக்கும் குழந்தை திருமணம்

சிறுமியரில் முன்கூட்டியே -- அதாவது 14 வயதுக்கு முன்பாகவே மாதவிடாயை சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் (0.75%), 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இது, இயல்பாக மாதவிடாய் சந்திக்கும் பெண்களை விட (0.49%) அதிகமாகும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

பருவம் எய்தும் வயதை பொருத்து திருமண வயதை தீர்மானித்தல்

Source: The causal impact of women’s age at marriage on domestic violence in India

சிறுமியருக்கு மாதவிடாய் தொடங்கியதுமே திருமணம் நடத்திவிட வேண்டும் என்ற சமூகத்தின் போக்கு மாறினால், குடும்ப வன்முறைகளில் இருந்து பல பெண்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சமுதாய பாதுகாப்பு திட்டங்களை தவிர, அரசியல் விருப்பு வெறுப்புகள் இருப்பதால் இவற்றை மாற்றுவது கடினமானது. ”பீகாரில், குழந்தை திருமணத்தை தடுக்க முன்னுரிமை தரும் வகையில், அம்மாநில முதல்வர் 2017ஆம் ஆண்டில் இலக்குடன் கொள்கையை வெளியிட்டார். இவ்விவகாரத்தில் காவல்துறையினர் கவனித்து வருகின்றனர்” என்று குப்தா கூறினார்.

படித்த பெண்களும் கூட குடும்ப வன்முறையில் இறங்கும் அவலம்

வயது மற்றும் கூட்டாளியால் ஏற்படும் வன்முறைக்கு இடையே உள்ள உறவு எப்போதும் எதிர்மறையாக இருந்ததில்லை என்பது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அதிக கல்வி, நல்ல திருமண வாய்ப்பு, அதிக பேரம் பேசும் திறன், மிக உறுதியாய் இருப்பதற்கான திறனை கொண்டிருக்கலாம்.  எனினும் தனது கூட்டாளியிடம் இருந்து ”கடும் பின்னடைவை” அவர் சந்திக்க நேரிடலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

"கூடுதல் கல்வி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பெண்களுக்கு நல்லது, அது பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை, அதிக வளங்களை தருகிறது. அதேநேரம், இந்த வளங்கள் இருந்தபோதும், அந்த (வன்முறை) உறவை தொடருவதை தீர்மானிக்கும் விஷயங்கள் பல உள்ளன” என்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கூடிய தொண்டு அமைப்பான ’ஸ்நேகா’வின் இயக்குனர் நெய்ரன் தருவாலா தெரிவித்தார். "கடந்த 18 ஆண்டுகளில் நாங்கள் 13,000-க்கும் அதிகமான பெண்களிடம் ஆய்வு நடத்தியிருக்கிறோம். கடுமையான குடும்ப வன்முறை துன்புறுத்தல்களை  அனுபவிக்கும் பெண்களைக் கூட நாம் காண்கிறோம் - துரதிருஷ்டவசமாக இது (வன்முறை) இந்தியாவின் குடும்ப கட்டமைப்புடன் உறுதியாக உள்ளது” என்றார்.

அதிகரிக்கும் கல்வி முன்னேற்ற விளைவுகள் ஏற்படிருந்தாலும், விவாகரத்து அல்லது தனியாகவே இருப்பது களங்கம் ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் பெண்கள் அதையும் மறுக்கக்கூடும்.

(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News