2022-ம் ஆண்டில் வெளியிடப்படாத இந்தியாவின் மக்கள்தொகை, வறுமை மற்றும் நுகர்வுத் தரவுகள்

அரசின் கொள்கைகளை வகுப்பதில் உதவும் பல முக்கியமான தரவுத்தொகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படவில்லை.;

Update: 2023-01-03 00:30 GMT

மும்பை: அரசின் 20 தரவுத்தொகுப்புகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில், தரவு சேகரிப்பு அல்லது அதன் பொது வெளியீடு என்பது, 12 தரவுத்தொகுப்புகளில் தாமதமானது. பிற தரவுத் தொகுப்புகள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, குடும்பச் செலவுகள் மற்றும் வறுமை மதிப்பீடுகள் போன்றவை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படவில்லை.

தரவு வெளியீடுகளில் அரசியல் புகுதல் மற்றும் பலவீனமான தரவு உள்கட்டமைப்பு ஆகியன, இந்த தாமதங்களுக்கு முதன்மையான காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுத்துறையில் ஏற்கனவே கிடைக்கும் தரவு அணுகல்தன்மை, வடிவத் தரவு தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது, இதில் அதன் பயன்பாட்டினைப் பாதிக்கும் மற்றும் பிற தரச் சிக்கல்கள் உள்ளன.

ஆண்டு நிறைவடைந்துள்ள இத்தருணத்தில், இந்தியாவின் தரவு நிலப்பரப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து இங்கு பார்க்கவுள்ளோம்.

Full View

இந்தியாவில் தரவு எப்பொழுதும் சில தாமதத்துடன் வெளியிடப்படுகிறது, பெரும்பாலானவை ஒரு வருட பின்னடைவுடன் உள்ளது. உதாரணமாக, தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் குற்றப் புள்ளிவிவரங்கள், சமீபத்திய ஆண்டுகளில் ஒரு வருட கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன, தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு போன்ற உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தரவுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சேகரிக்கப்பட்டு மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படுகின்றன.

இந்தியா, ஒரு வருட கால தாமதத்துடன் தரவுகளை வெளியிடுவதற்கான காரணங்களில் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான உள்ளீடுகள் மற்றும் நாடு தழுவிய தரவுகளை சேகரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரமாகும் என்று மும்பையை சேர்ந்த மனித உரிமைகள் இயக்கமான நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CJP) அறிக்கை கூறுகிறது.

பெரிய தரவுகள் [சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும்] நேரம் எடுக்கும் மற்றும் பெரிய தரவுகளுக்கான போதுமான தரவு மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு திறன் இந்தியாவிடம் இல்லை என, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பொறுப்புக்கூறல் முன்முயற்சியை வழிநடத்தும் அவானி கபூர் கூறினார்.

இருப்பினும், பல தரவுத் தொகுப்புகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதத்தைக் காண்கின்றன. உதாரணமாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 'அடிப்படை சாலை புள்ளிவிவரங்கள்' அறிக்கை, கடந்த 2018-19 இல் வெளியிடப்பட்டது.

"தரவு (குறிப்பாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவு) வாக்களிக்கும், நிதி ஆணையம் [மத்திய அரசாங்கத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி] மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கூட, மக்கள்தொகை அடிப்படையிலான விதிமுறைகளின் அடிப்படையில் பி.எச்.சி.-கள் தீர்மானிக்கப்படுவதால்," என்கிறார் மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் எஸ்.சந்திரசேகர்.

பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது முதல் வாக்களிக்கும் தொகுதிகள் வரை, பொதுக் கொள்கைக்கு தரவு மிகவும் முக்கியமானது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள தரவுத் தொகுப்புகளில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வீட்டு நுகர்வோர் செலவுக் கணக்கெடுப்பு மற்றும் வறுமை மதிப்பீடுகள் ஆகியன மிக முக்கியமானவை. இந்த தரவுத்தொகுப்புகள் பிற தரவுத்தொகுப்புகளை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவைச் சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்புத் தரவுகளின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தரவு வெளியீடுகளில் தாமதம் அரசாங்க திட்டங்கள் மற்றும் திட்டங்களை பாதிக்கிறது, மேலும் நுகர்வு, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய பிற கணக்கெடுப்புகளின் நம்பகத்தன்மையற்ற மதிப்பீடுகள், கொள்கை மற்றும் நலன்புரி நடவடிக்கைகளைத் தீர்மானிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவைச் சார்ந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, கிராம அளவில், மக்கள் தொகை, கல்வியறிவு மற்றும் இடம்பெயர்வு, இந்தியாவின் மக்கள்தொகையின் பிற அம்சங்களை தீர்மானிக்கும் ஒரு தசாப்த கணக்கெடுப்பாகும். நாடு முழுவதும் கோவிட்-19 காரணமாக போடப்பட்ட ஊரங்கு காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமானது, மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காலக்கெடு தெளிவாக இல்லை.

டிசம்பர் 14, 2022 அன்று, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில், அதுவரை மொபைல் மற்றும் வெப் அப்ளிகேஷன்கள், போர்டல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பிற செயல்பாடுகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் 24.84 கோடி ரூபாய் செலவிட்டதாக தெரிவித்தார்.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் குடும்ப நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது மற்றும் வீட்டு உபயோக முறைகள் மற்றும் நிலைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த ஆய்வுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பதில் உதவுகின்றன. 2011-12ல் இருந்து இதுபோன்ற சமீபத்திய கணக்கெடுப்புத் தகவல்கள் கிடைக்கின்றன. 2017-18 கணக்கெடுப்புக்கான தரவுகளை வெளியிட வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது, இது "தரவு தர சிக்கல்களை" சுட்டிக்காட்டுகிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இந்த வெளியீட்டின்படி, 2022-23 கணக்கெடுப்புக்கான தரவு சேகரிப்பு செயல்முறைக்கான பயிற்சி ஜூலை 2022 இல் தொடங்கியது.

வறுமை மதிப்பீடுகள்:

முந்தைய திட்டக் கமிஷன் 1973-74 முதல் ஒவ்வொரு ஐந்து-ஆறு ஆண்டுகளுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை வெளியிட்டு வந்தது. டெண்டுல்கர் வறுமைக் கோட்டின் அடிப்படையில் 2011-12 ஆம் ஆண்டிற்கான கடைசி மதிப்பீடுகள் ஜூலை 2013 இல் வெளியிடப்பட்டன. "இதற்குப் பிறகு, இந்தியாவில் அதிகாரப்பூர்வ வறுமை மதிப்பீடுகள் எதுவும் வெளியிடப்படவில்லை" என்கிறது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2020 வேலை அறிக்கை.

தரவு வெளியீடுகளில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சியை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "தரவு கொள்கை வகுப்பதை சிக்கலாக்குகிறது, ஏனெனில் அது முடிவெடுப்பதை மிகவும் கடினமாக்குகிறது, குறிப்பாக ஒரு கடினமான மற்றும் நம்பத்தகாத நிகழ்ச்சி நிரலுடன் ஆட்சிக்கு வரும் ஒரு கட்சிக்கு, இது தரவை தாமதப்படுத்த அல்லது கையாளுவதற்கு அழுத்தங்களை உருவாக்குகிறது" என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான விகாஸ் குமார் விளக்குகிறார், அவர் அரசாங்க புள்ளிவிவரங்களின் அரசியல் பொருளாதாரம் குறித்த பாடத்தை அங்கு கற்பிக்கிறார்.

கருத்துக்கணிப்புகள் மற்றும் அவற்றின் முடிவுகளை அரசியல் ரீதியாக கையாள்வது புதிதல்ல என்றும் குமார் சுட்டிக்காட்டுகிறார்; அடுத்தடுத்த அரசாங்கங்கள் இதைச் செய்தன, ஆனால் கடந்த தசாப்தத்தில் குறுக்கீடுகளின் அளவு மற்றும் அதிர்வெண் வளர்ந்துள்ளது. உதாரணமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-I (UPA-I) ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்ட 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 2001 மதத் தரவு வெளியிடப்படவில்லை. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு UPA-II ஆல் நடத்தப்பட்டது, இது ஏப்ரல் 2013 இல் தயாராக இருந்த மத அடிப்படையிலான தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தியது என்று குமார் கூறினார். இது 2015 இல் வெளியிடப்பட்டது

விகாஸ் குமார் இணைந்து எழுதிய 2020 ஆய்வறிக்கையின்படி, தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதற்கு அரசாங்க புள்ளியியல் அமைப்பு பொது ஆய்வு மற்றும் அரசியல் தலையீட்டை எதிர்கொள்ள விரும்பாமை காரணமாக இருக்கலாம். அரசியலின் வளர்ந்து வரும் வகுப்புவாதமானது, அடையாளத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் நேரத்தை குறிப்பாக பாதித்துள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த 1970களில் இருந்து அரசு புள்ளியியல் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு முற்போக்கான பலவீனமடைந்து வருவதையும் குமார் சுட்டிக்காட்டினார். "1970 களில் தொடங்கிய அதிகாரத்துவத்தை நீக்குதல் மற்றும் அரசியல் மயமாக்குதல் ஆகியன, 1990ம் ஆண்டுகளின் போது, கட்டமைப்பு ரீதியிலான சரிசெய்தலின் கீழ், அரசாங்கம் தனது பிடியை இறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. இது புள்ளியியல் போன்ற அரசியல் முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் வெட்டுக்களுக்கு வழிவகுத்தது, அதாவது பணியமர்த்தல் முடக்கம் மற்றும் தாராளமயமாக்கலுக்குப் பிறகு அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைச் சமாளிக்க தேவையான சீர்திருத்தங்களில் தாமதம் ஏற்பட்டது," குமார் கூறினார்.

இந்தியாவில் அரசாங்க தரவுகளில் தாமதம் ஒரு பெரிய பிரச்சினையின் ஒரு பகுதியாகும். கிடைக்கக்கூடிய தரவின் அணுகல், வடிவமைப்புச் சிக்கல்கள், தரவின் தரச் சிக்கல்கள் மற்றும் வெளியான பிறகு தரவைத் திரும்பப் பெறுதல் போன்ற பிற கவலைகளையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தரவு வடிவங்கள்

பெரும்பாலும் கிடைக்கக்கூடிய தரவுகள் பயன்படுத்த முடியாதவை, ஏனெனில் அவை பி.டி.எப்.-கள் போன்ற வடிவங்களிலும் சில சமயங்களில் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களாகவும் வெளியிடப்படுகின்றன. "ஏராளமான தரவுகள் உள்ளன. அரசு அதை எளிதாக, அணுகக்கூடிய முறையில் கிடைக்கச் செய்ய வேண்டும், அங்கு ஒருவர் அதை பதிவிறக்கம் செய்து அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) வடிவத்தில் வைத்திருக்கலாம்," என்று சந்திரசேகர் கூறினார். பெரும்பாலான தரவுகள் முதலில் அரசாங்க இணையதளங்களில் உள்ளிடப்படும் போது, எக்செல் அல்லது CSV (காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகள் கோப்பு) வடிவங்களில் கிடைக்கும், இருப்பினும் அது அதே வடிவத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்காது என்று, சந்திரசேகர் மேலும் விளக்குகிறார்.

தர சிக்கல்கள்

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு தரவு, ஒரு பொது போர்டல் ஆகும், அங்கு 200,000 பொது சுகாதார வசதிகள் - அவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நடத்தப்படும் மற்றும் கிராமப்புறங்கள் - ஒவ்வொரு மாதமும் பதிவேற்றப்படுகின்றன. தற்போது கிடைக்கும் தரவு 2008 ஆம் ஆண்டிற்கு முந்தையது, மேலும் 2019-20 இன் பகுப்பாய்வு அறிக்கையின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் துணை மாவட்ட அளவில் கிடைக்கும்.

ஆனால், சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) தரவு எப்போதும் மற்ற தரவுத்தொகுப்புகளுடன் பொருந்தாது.

உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4 (2015-16), ஒரு சுயாதீனமாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு, இந்தியாவின் நோய்த்தடுப்பு கவரேஜ் 62% எனக் காட்டியது; பல வளர்ந்த மாநிலங்களின் செயல்திறன் மோசமாக இருந்தது. ஒப்பிடக்கூடிய காலத்திற்கு (2014-15), மே 2019 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரையின்படி, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு தரவு (HMIS) முழு நோய்த்தடுப்பு குழந்தைகளின் சதவீதத்தை தொடர்ந்து 100% க்கும் அதிகமாகக் காட்டியது.

சிவில் பதிவு அமைப்பால் வெளியிடப்பட்ட இறப்புக்கான காரணத்திற்கான மருத்துவ சான்றிதழ் போன்ற பிற அறிக்கைகளிலும் தரவு சிக்கல்களின் தரம் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது; ஜூன் 2020 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி, 2019 இல் ஐந்தில் ஒரு பங்கு இறப்புகள் மட்டுமே மருத்துவ சான்றிதழ் பெற்றன, மேலும் பெரும்பாலும் இறப்புக்கான அடிப்படைக் காரணம் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தரவு நீக்கம்

பொது டொமைனில் இருந்தும் தரவுகள் அகற்றப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. ஆகஸ்ட் 2020 இல், இந்தியா ஸ்பெண்ட் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு தரவைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் பெரியவர்களுக்கு மருந்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கான அணுகல் மார்ச்-மே 2020 இல் கடுமையாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, ஜூலை 2021 கட்டுரையில் நாங்கள் தெரிவித்தபடி, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் இணையதளத்தில் தரவு கிடைக்கவில்லை. ஆகஸ்ட் 2, 2021 இல் தரவு வெளியிடப்பட்டது, இருப்பினும் அது இன்னும் 'தற்காலிகமாக' உள்ளது.

தரவுகள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படாத நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சமூகப் பொருளாதார மற்றும் ஜாதிக் கணக்கெடுப்பை வெளியிடும் திட்டம் தன்னிடம் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

நாங்கள் மேலே கூறியது போல, 2017-18 ஆம் ஆண்டுக்கான வீட்டு நுகர்வோர் செலவினங்கள் "தரவு தரச் சிக்கல்கள்" காரணமாக வெளியிடப்படவில்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News