அரசு வேலை பெற போட்டித்தேர்வு மையங்களில் பெரும்தொகையை செலவிடும் மக்கள்

Update: 2019-05-22 02:40 GMT

புதுடெல்லி: அலகாபாத்தில், தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தும் பிரபல மையங்களில் ஒன்று, ஜி.என். ஷாக்யா. பலரைப் போலவே, அவர் ஒரு பாதுகாப்பான அரசு பணியை தேடிக் கொண்டிருந்தார் - இது 16 ஆண்டுகளாக நடக்கிறது. இதற்குள்ளாக அவர் ஐந்து டிகிரி (பி.ஏ., எம்.ஏ., எல்.எல்.பி., பி.எட் மற்றும் எம்.எட்) வாங்கியுள்ளார்; மற்றும் தொழில் முறை தேர்வுக்கான படிப்பின் போது பகுதி பணியும் மேற்கொண்டிருந்தார். "ஒரு வேலையை தேடுவதற்கே பாதி வாழ்க்கை செலவாகிவிடுகிறது; பிறகு எப்போது வேலை செய்யும்?" என்று 2019 ஏப்ரல் தொடக்கத்தில் நாங்கள் சென்றிருந்த போது, எங்களிடம் அவர் கேட்டார்.

அருகாமையில் உள்ள இந்த துயரம், தீபக் மவுரியாவை இன்னும் பிடித்துக் கொள்ளவில்லை. ஒரு வெள்ளை நிறை ஆடை மற்றும் ஷாட்ஸ் அணிந்துள்ள 17 வயதான இவர், தனது 12ஆம் வகுப்பு தேர்வை முடித்துள்ளார்; ரயில் மூலம் அலகாபாத்திற்கு ‘தைய்யார் கி லீ’ - அதாவது ‘தயார் ஆக’ வந்துள்ளார்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள பல தங்கும் விடுதிகளில் ஒன்றில் ஒரு அறையில் தமது உறவினருடன் மவுரியா தங்கி இருக்கிறார். இந்த குறிப்பிட்ட தங்கும் விடுதியில் அறை சுமார் 8 அடி, 9 அடி அறைகள் ஒவ்வொன்றிலும் 20 நபர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் அனைவருக்கும் அரசு பணி - போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள்.

போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் துறை இந்தியாவின் பல பகுதிகளிலும் வளர்ந்து வருகிறது; வடக்கில் டெல்லியில்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அதேபோல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்தவர்களை அலகாபாத் வரவேற்கிறது; ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இத்துறைகளில் உள்ளன; ஜெய்ப்பூர் போன்ற பெருநகரங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு, ராஜஸ்தானில் உள்ள சிகார் போன்ற சிறு நகரங்களும் உள்ளன.

ஜெய்ப்பூரில் உள்ள விவேக் விஹார், அலாகாபாத்தில் உள்ள காத்ரா மற்றும் பாக்தாடா பகுதிகள் மற்றும் டெல்லியில் உள்ள முகர்ஜி நகர், ராஜேந்திர நகர் போன்றவை கல்வி கற்ற வேலையில்லாதவர்களை கொண்டிருக்கிறது - இந்தியா வரலாற்று ரீதியான மக்கள்தொகை ஆற்றலைக் கொண்டிருந்தும், அவர்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே இருக்கும்.

இந்த நகரங்களை சுற்றிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பகுதிகளில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேர்ச்சி பெற்றாலும் சில ஆண்டுகளில் அவர்களுக்கு அரசு வேலைகளை பெறவோ அல்லது பெறாமல் இருக்கவும் செய்யலாம். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமீபத்தில் இந்திய ரயில்வேயின் கீழ்நிலை பணிகளுக்கான 90,000 காலி பணி இடங்களுக்கு 2.5 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்தது இளைஞர்களின் வளர்ச்சிக்கு போதுமான வேலைகள் இல்லை என்று சான்றுகளை மேற்கோள்காட்டி அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பகுதிகள் கொண்ட தொடரின் முதல் பாகத்தில் நாம், கணக்கெடுப்பு முடிவுகளை பகிர்தல், இந்த படிப்புகளுக்கு நேரம், தொகை செலவிட்டவர்களுடன் அது குறித்து நேர்காணல் மற்றும் குறிப்பிட்ட சமூக-பொருளாதார பின்னணியை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை விவரிக்கிறது.

இரண்டாவது பகுதியானது இந்த போட்டியாளர்கள் அரசு வேலைக்கு எப்படி பொருந்துவார்கள், அவர்கள் தனியார் துறை வேலையை எப்படி பார்க்கிறார்கள்; இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை மேம்பட, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது.

ஒரு தீவிர நெருக்கடி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கசிந்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலக அறிக்கை (NSSO), 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாயிப்பின்மை பெருகியுள்ளதாக தெரிவித்தது. இதற்கு மாறாக, அரசின் முன்னணி அரசியல் மற்றும் நிர்வாக புள்ளிவிவரங்கள் - பிரதமர் மற்றும் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்டோர் - வேலை பெருகியதற்கு ஆதாரம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கு (EPFO) விவரங்களை சுட்டிக்காட்டினர். ஆனால் அவர்கள், தவறான தரவுகளைப் பயன்படுத்தி சிக்கலைத் தீர்க்க முயல்வதாக, நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

table,th,td{ font-size: 12px; font-family: arial; border-collapse: collapse; border: 1px solid black; } table{ width:320px; } th,td{ text-align:center; padding:2px; } th.center{ text-align:center; } tr:nth-child(odd) { background-color: #f9f9f9; } tr:nth-child(even) { background-color:#fff; } th { background-color: #1f77b4; color: #FFFFF0; font-weight: bold; }
Table 1: Elusive Government Jobs
Job Posts Applicants
Peon in UP State Secretariat 368 2,300,000
Waiter in Maharashtra State Secretariat 13 7,000
Group D in Railways 90,000 25,000,000

Source: Compiled by the authors from reports from various sources including the BBC, India Today and Reuters.

இந்தியாவில் எந்த காலத்திலும் அரசு பணிகள் எப்போதுமே மிகவும் விரும்பப்பட்டன. இப்போது அந்த வேறுபாடு, மிகவும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களை (மேலே உள்ள அட்டவணையில் உள்ள பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது) அரசுத்துறையில் சிறிய பதவியிலாவது அமர வேண்டும் என்று போட்டியிட வைக்கிறது.

இந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடியைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியில், ஒரு சாதாரண அரசு பணியைப் பெற முயற்சிக்கும் பல ஆண்டு காலம் கழிக்கும் இளைய, படித்தவர்களை கொண்ட இந்த குழு மீது கவனம் செலுத்த முடிவு செய்தோம்.

மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற புள்ளிவிவரங்கள் பல லட்சக்கணக்கில் எண்ணிக்கை உள்ளன என்பதை குறிப்பிடுகின்றன. இருப்பினும், இந்த மக்கள் குழு குறித்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லை; அவர்கள் பாதுகாப்பான வேலைவாய்ப்பை பின்தொடர்வதற்கான முதலீடு பற்றி அதிகம் அறியப்படவில்லை. இக்குழுவின் கவலைகளையும், இந்தியாவின் வேலைவாய்ப்பு சரிவை பற்றி அவர்கள் என்ன சொல்லலாம் என்பதையும் புரிந்து கொள்ள, நாங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அலாகாபாத் ஆகிய மூன்று நகரங்களில் சிறிது ஆய்வு நடத்தினோம்.

எங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இரு காரணிகள்:

  1. இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு இன்மை ஒரு தீவிரமான சிக்கலாகும்: வேலைவாய்ப்பின்ன்மை விகிதம் 6.1% உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்ட, என்.எஸ்.எஸ்.ஓ.வின் கசிந்த அறிக்கை, அதிகரித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வளர்ச்சி போக்கானது ஒரு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தவறிய விளைவுகளையே தருகிறது. ஒரு முக்கிய சுட்டிக்காட்டி, வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி - பொருளாதாரம் வளர்ந்து வருகிறது எப்படி தொடர்புடைய வேலை எத்தனை வேலைகள் உருவாக்கப்படுகின்றன - மிக உயர்ந்த ஜிடிபி உள்ள ஆண்டுகளில்
    0.01
    ஆக குறைந்தது. இந்திய பொருளாதாரம் கண்காணிக்கும் மையத்தின் (CMIE) சமீபத்திய மதிப்பீடுகள் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 47% முதல் 45% வரை வீழ்ச்சியடைந்ததைக் காட்டியுள்ளன - அதாவது, 1.3 கோடி குறைவான மக்களே வேலை தேடினர்.
  2. சுருங்கி வரும் அரசுத்துறை: 1999 மற்றும் 2011 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பங்களிப்பு 32%இல் இருந்து 67% ஆக உயர்ந்தது. அரசு வேலைவாய்ப்புக்கான போக்கு,
    பாதுகாப்பான, முறையான வேலைவாய்ப்பு குறைப்புடன்
    ஒத்திருக்கிறது. மத்திய அரசு சேவைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு 2006-07 மற்றும் 2016-17 இடையே 16.1 லட்சத்தில் இருந்து, 11.3 லட்சமாக குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்தியன் ரயில்வே நிரந்தர ஊழியர் பலத்தில் 90,000 என்ற ஒரு முழுமையான சரிவை கண்டிருக்கிறது. 2012-13 மற்றும் 2016-17ஆம் ஆண்டுக்கு இடையில் 18,000 மற்றும் 60,000 க்கும் மேற்பட்ட முழுமையான ஆட்குறைப்புக்களை இந்திய தபால் துறை மற்றும் பொது வங்கிகள் கண்டிருக்கின்றன.

எங்களது மாதிரிகளாக எடுக்கப்பட்ட மூன்று நகரங்களை சேர்ந்த 515 பேர் சமமற்ற எண்ணிக்கையில் அதாவது டெல்லியில் 317, ஜெய்ப்பூரில் 132, அலகாபாத்தில் 66 என்றிருந்தது. நாங்கள் தரமான பேட்டிகள் மற்றும் குழு விவாதங்களை நடத்தி கணக்கெடுப்பு முடிவுகளை நிறைவு செய்தோம். இதன் கண்டுபிடிப்புகளை பிரதிநிதித்துவமாக கருதப்படக்கூடாது; ஆனால் நகரங்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் சுவாரஸ்யமான தகவல்களை வழங்குகின்றனர்.

எவ்வளவு நேரம் எடுக்கிறது?

சற்று வயது அதிகம் உள்ளவர்கள், தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதை, எங்களின் பகுப்பாய்வு பதில்கள் காட்டுகின்றன.

20 வயதிற்கு உட்பட்டோருக்கு சராசரியாக தேர்ச்சி பெற 2 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்; 28 வயதிற்கு மேலானவர்களுக்கு 3 வருடம் மற்றும் 7 மாதங்கள் என்ற ஒரு நிலையான அதிகரிப்பு உள்ளது. அலகாபாத்தில் இந்த போக்கு கச்சிதமாக இருந்தது (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்); சிறிய நகரங்களில் உள்ளவர்கள் தேர்வில் வெற்றிபெற அதிகம் போராடுவார்கள் என்று கூறிவிடலாம்.

வயது குழு வாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை

Source: Centre for Equity Studies

எங்கள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளபடி போட்டிப் பரீட்சைக்குத் தயாரான வருடங்களின் சராசரி எண்ணிக்கை 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் ஆகும். இந்த எண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என்று பொதுவாகக் குறிப்பிடுவதால், பொதுவாக அரசு வேலைகளுக்கு போட்டியிடுபவரால் முதலீடு செய்யப்படுகிறது. எங்கள் கணக்கெடுப்பு மாதிரி பயிற்சி மையத்திற்கு வெளியே எடுத்துக் கொள்ளப்பட்டதால், ஒரு வருடம் அல்லது இரு மையங்களில் பயிற்சி பெற்ற பிறகு, நீண்ட தூரத்திற்கு செல்ல தயார்படுத்திக் கொண்டவர்களாக இருந்தனர். அதனால், மூத்த போட்டியாளர்கள், எங்களது மாதிரிக்கு போதுமான பிரதிநிதித்துவமாக இல்லை; குறிப்பாக சிறிய நகரங்களில். டெல்லி போன்ற பெருநகரங்களைவிட சிறிய நகரங்களில் வாழ்க்கை செலவுகள் குறைவாக இருப்பதால்,போட்டியாளர்கள் தொடர்ந்து சுய பரிசோதனைக்கு தொடர்ந்து ஈடுபடலாம்.

அதேபோல், தயாராகும் போது செலவிடப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எதிர்பார்ப்புகள் அடிக்கடி குறைகிறது; வேலை பெற்றாக வேண்டுமென்ற அழுத்தம் அதிகரிக்கும்.

ஆரம்ப ஆண்டுகளில் இருந்த ஜோஷ் அல்லது உற்சாகம், தோல்வியுற்ற பல ஆண்டுகளால் போய்விடுகிறது," என்று கடந்த 7 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வரும் அமீத் குமாவத்* தெரிவித்தார். இதே நேரத்தில், அவர் திருமணம் செய்து கொண்டார் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு பகுதி நேர தொழிலாக பயிற்றுவித்து வந்தார். "ஆரம்பத்தில் விண்ணப்பதாரர்களின் கனவாக இருப்பது ஒரு ஆய்வாளராவது தான்; ஆனால் காலப்போக்கில் ஒவ்வொரு நபருமே ஒரு பியூன் அல்லது டி பிரிவு பணி [கீழ்நிலை அரசுப்பணி வகை] பதவிக்கும் கூட விண்ணப்பிக்க தயார்ப்படுத்திக் கொள்கின்றனர்." என்று அவர் கூறினார்.

“எந்த நிலை அல்லது என்ன வேலை என்பது முக்கியமல்ல” என்று, 19 வயது நிரம்பிய ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் கற்றறிந்துள்ள விண்ணப்பதாரர் தெரிவித்தார். “எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பதே முக்கியம்” என்றார் அவர்.

அனைத்து காலியிடங்களுக்கும் அதன் தகுதியைவிட அதிகமானதை கொண்டுள்ள விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர் என்று அலகாபாத் பயிற்சி நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளர் ஒருவர் கூறினார். "பி.ஏ./பி.எஸ்.சி பட்டம் பெற்ற பிறகு தான் நமது தலைமுறையினர் தேர்வுக்கு தயாராக தொடங்குகின்றனர்; இது எந்தவொரு வேட்பாளருக்கும் தெரிந்த தேர்வுக்கான ஒரு முன்நிபந்தனையாகும். ஆனால் இப்போது பி.ஏ.வை தொடங்கும் முன்பே மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி படிப்புக்கு பிறகே தயாராக தொடங்குகின்றனர்” என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் பகுதி கத்ராவில், போட்டித் தேர்வு பயிற்சி தரும் மையங்களுக்கான சேர்க்கை குறித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள். இத்தகைய சுவரொட்டிகளை கத்ரா முழுவதுமே பார்க்கலாம்.

உத(வாத)வும் முந்தைய கல்வி பயிற்சி

எங்கள் மாதிரி கிட்டத்தட்ட ஐந்தில் இரண்டு பேர் - இதில் 91% மக்கள் பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டதாரிகள் - இது பயனற்றதாக இருந்தது என்றனர்; 8% அவர்களது கல்வித் தேர்வுகள், அவர்களது போட்டி தேர்வுகளுக்கு தயாராக மிக உதவியாக இருந்ததாக கூறினர்.

Full View

இந்தி மொழியில் கல்வி கற்ற கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் பதில் கூறுகையில், நகர்ப்புற பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை அடைய கூடுதல் தொகை, பெரும் முயற்சி மற்றும் கூடுதல் நேரம் எடுத்து கொள்ள வேண்டி இருந்ததாக கூறினர்.

கல்வியின் பயன் மதிப்பீட்டில் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் இந்தி கற்றவர்கள் ஆகியோரின் மொத்த சராசரி 2.81 (5இல் ) இருந்து, 2.76ஆக குறைகிறது. மேலும், மாநில அரசு நடத்தும் நிறுவனங்களில் (அதாவது கிராமப்புறங்களில் மாநில அரசால் நடத்தப்படும் ஹிந்தி மொழி கல்வி நிறுவனங்கள்) இருந்து மிக உயர்ந்த டிகிரிகளை முடித்தவர்களை நாங்கள் கணக்கிட்டால், இது 2.48 க்கு குறைகிறது. இத்தகைய பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் சேவை, மத்திய பல்கலைக்கழகங்களில் அல்லது ஆங்கிலத்தில் கல்வியைப் பெற்றவர்களைவிட அதிகமானதாக தோன்றியது.

எங்களிடம் பதிலளித்தவர்களில் 65% பேர், கிராமப்புற பின்னணியில் இருந்து வருவதாகவும், 66% பேர் கடைசியாக அரசு கல்வி நிறுவனத்தில் படித்து வந்ததாக தெரிவித்தனர். 40% அவர்களின் கல்வி பயிற்றுவித்த மொழி ஹிந்தி என்று தெரிவித்துள்ளனர்.

பதிலளித்தவர்களில் டெல்லியில் 80% பேர் ஆங்கிலம் தங்கள் கல்வி கற்பிக்கப்பட்ட மொழி எனவும், அலகாபாத்தில் 86% ஹிந்தி மொழி என்றும் கூறினர்.

கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தின் தன்மை

Source: Centre for Equity Studies

படம் 4: கல்வி பயிற்சியின் மொழி

data-style="font-family: arial; font-size: 11px;">Source: Centre for Equity Studies

கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் தோற்றத்தை கண்டால் உறவினர்களே அதை அனுகூலமற்றதாக கருதுவதாக, அலகாபாத்தில் உள்ள பல மாணவர்கள் தெரிவித்தனர். அலஹாபாத் பல்கலைக் கழகத்தின் மத்திய நூலகத்திற்கு வெளியே உள்ள புல்வெளிகளில் உள்ள மாணவர் குழுவிடம் பேசும்போது, ரத்னெஷ் யாதவ் என்ற மாணவர், இந்த இடைவெளி பள்ளிக்கூடத்திலேயே மிகவும் ஆரம்பமானது என்பதை வலியுறுத்தினார்.

தனியார் பள்ளிக்கல்வியை பெற முடியாத அல்லது கிராமப்புறங்களில் உள்ள பொது பள்ளிகளில் தங்கியிருக்க முடியாதவர்கள், தரமான கல்வியை வழங்குவதில் தவறில்லை. எனவே, நகரத்தில் ஒருமுறை, அவர்கள் தங்கள் குறைபாடுகளை பொருந்தும் வகையில் கொண்டு வர வேண்டும்.

"எங்கள் கிராமங்களில் இருந்து வந்து, நாங்கள் இங்கு குடியேற ஆறு மாதங்கள் ஆகிவிடுகிறது. பின்னர் பொருத்தமான பயிற்சி மையங்கள் தேடுகிறோம். ஒரு வருடம் பயிற்சிக்குப் பிறகு, மற்றொரு வருடம் சுயமாக போட்டித் தேர்வுக்கு நாங்கள் செல்கிறோம். நாம் வெற்றி பெறாதபோது, மற்றொரு வருடம் மீண்டும் இரண்டாவது பயிற்சிப் பயிற்சியை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்; அதன்பிறகு மட்டுமே கட்- ஆப் தேர்வுகளை சரிசெய்கிறோம். இதற்கெல்லாமே எங்களுக்கு ஒரு வேலைக்காக போராடுவதற்கு மொத்தம் 5 முதல் 7 ஆண்டுகள் எடுக்கும் … காலியிடங்கள் அப்படியே நிரந்தரமாக இருந்தால், "என்று மற்றொரு தேர்வாளர் பிரதீப் ராவத் கூறினார். தேர்வாளர் கற்றல் வழிகளை சரி செய்யவும் மற்றும் அவர்கள் என்ன போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதை கண்டறியவுமே 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.

நகரங்களில் தயார் செய்வதற்கான செலவு

"ஒப்பீட்டளவில் பார்த்தால் அதிகமான பணம் மற்றும்"ஆதரவு "[சமூக மூலதனம்] உள்ளவர்கள் மட்டுமே டெல்லி போன்ற நகரங்களுக்கு செல்ல முடியும்” என்று, அலஹாபாத்தில் ஒரு பயிற்சி நிறுவன பயிற்சியாளர் ராஜீவ் கூறினார். அம்பேத்கர் நகர் அருகே இருந்து வரும் ராஜீவ் அலகாபாத்தில் முன்பு ஒரு போட்டித் தேர்வு எழுதுபவராக இருந்தார்; அலகாபாத்தில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி பெறுவோரில் பாதி பேர், ஏழை பொருளாதார பின்னணியில் இருந்து வருவதாக மதிப்பிட்டுள்ளது. "நான் ஒருமுறை அவர்களது காலணியை பயன்படுத்தி இருந்தபோது, அவர்களின் நிலைமையை உணர்ந்தேன்" என்று, பட்டதாரியாக இருந்து பயிற்சியாளராக பின்னர் மாறிய அவர் கூறினார். "நான் மாலை நேரத்தில் தேநீர் கடைக்கு செல்ல பயப்படுவேன்; ஏனெனில் நண்பன் யாராவது வந்து, தனக்கு ஒரு கோப்பை டீ வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டால் மிகவும் சங்கடமாகிவிடும்” என்றார்.

அலகாபாத்தில் பயின்று வரும் பெரும்பாலான போட்டித் தேர்வு பயிற்சி போல, ராஜிவ் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வருகிறார். சிறிய நகரங்களில் உள்ள பெரும்பாலான மற்ற மாணவர்களிடம் இருப்பது போல் ராஜீவின் உலக கண்ணோட்டத்தில், விவசாய கஷ்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. டெல்லியில் பதில் அளித்தவர்களில் 22% பேர் விவசாய வருவாயை தங்களின் குடும்ப வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக குறிப்பிட்டுள்ளனர்; அலகாபாத்தில் இது 71% ஆகும் (கீழே உள்ள படத்தைப் பாருங்கள்).

Full View

மீண்டும் பார்த்தால் டெல்லியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சிக்கு வந்தவர்களில் 50% பேர் கிராமப்புற பின்னணி கொண்டவர்கள்; இந்த எண்ணிக்கை அலகாபாத்தில் 92%; ஜெய்ப்பூரில் 87% ஆகும். (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்)

Full View

"போட்டித்தேர்வு புத்தகத்தின் ஒரு புதிய பதிப்பானது சந்தைக்கு வரும் போது, அதை உபயோகிப்பதன் மூலம் பயனடைவேன் என்று எனக்குத் தெரியும்.ஆனால் அதன் விலை 800-1000 ரூபாய். நான் என் குடும்பத்தாரிடம் கேட்டால், அவர்கள் விளை பொருட்களிய கிடைக்கும் விலைக்கு [பண்ணையில் உற்பத்தி] விற்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், "என ராஜீவ் கூறினார். “எனவே அவர்களிடன் நான் சொல்வதில்லை” என்றார்.

நாங்கள் போய் பார்த்த போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்தில், பயிற்சி கட்டணத்தை குறைக்கும்படி மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்தோம். போட்டித் தேர்வுக்கு சேரும் மாணவர்கள், முழுக்கட்டணம் செலுத்த பணம் இல்லை என்று சொல்வதை இங்கு அடிக்கடி கேட்பது சர்வ சாதாரணம் என்று ராஜிவ் எங்களிடம் கூறினார்.

கணக்கெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் சராசரி வருடாந்திர பயிற்சி கட்டணத்தில் வேறுபாடுகள் இருந்தன - ஜெய்ப்பூரில்ரூ. 21,040, அலகாபாத்தில் ரூ.11,449 மற்றும் டெல்லியில் ரூ 65,351. மற்ற இரண்டு இடங்களுடன் ஒப்பிடுகையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற உயர்நிலை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மக்களின் விகிதம் டெல்லியில் அதிகமாக உள்ளது.

அலகாபாத்தில் தங்கும் அறைக்கான மாத வாடகை சராசரியாக ரூ. 3,737 என்று போட்டித் தேர்வாளருக்கு செலவாகிறது; இது ஜெய்ப்பூரில் ரூ. 4,677; மற்றும் டெல்லியில் ரூ 6,638 (கீழே உள்ள அட்டவணை பார்க்க).

போட்டியாளருக்கான மொத்த வருடாந்திர செலவு, மூன்று நகரங்களில் மாறி மாறி வேறுபடுகிறது என்பதை எங்கள் கணக்கெடுப்பு காட்டுகிறது. அலகாபாத்தில், ஒரு போட்டித் தேர்வு பயிற்சி பெறுபவர் சராசரியாக 1,52,303 ரூபாயை ஒரு வருடத்திற்கு செலவழிக்கிறார். ஜெய்ப்பூரில் ஆண்டு சராசரி செலவானது 22% உயர்ந்து 1,95,130 ரூபாயாக உள்ளது. டெல்லியில், ஒரு போட்டி தேர்வாளரின் வருடாந்திர செலவு ரூபாய் 2,97,168 ஆகும்; இது அலகாபாத்தில் செலவிடப்படும் தொகையைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.

Table 2: Expenditure Break-up Across All Three Cities
Expenditure Summary - Delhi
Monthly Annual
Expenditure Category Rent Food Library City Travel Other Coaching Educational Material Medical Travel for Exam Exam Form Other Inter City Travel
No of respondents 241 234 134 270 214 235 305 151 231 262 107 208
Average Expense Reported 6,638 3,976 1,025 1,700 2,579 65,351 9,743 7,574 4,430 3,889 8,581 6,579
Expenditure Summary - Jaipur
Monthly Annual
Expenditure Category Rent Food Library City Travel Other Coaching Educational Material Medical Travel for Exam Exam Form Other Inter City Travel
No of respondents 116 117 113 130 105 125 126 117 130 130 75 103
Average Expense Reported 4,677 3,128 766 1,366 1,664 21,040 8,163 5,272 6,068 6,020 5,272 4,080
Expenditure Summary - Allahabad
Monthly Annual
Expenditure Category Rent Food Library City Travel Other Coaching Educational Material Medical Travel for Exam Exam Form Other Inter City Travel
No of respondents 62 62 22 62 30 65 64 52 62 66 24 59
Average Expense Reported 3,737 2,504 618 1,052 1,316 11,449 9,589 5,042 4,476 4,158 3,908 2,962

Source: Centre for Equity Studies

Full View

கீழே உள்ள படம், மூன்று நகரங்களில் போட்டி தேர்வு பயிற்சி பெறுவோரின் வர்க்க பின்னணியை விளக்குகிறது. மூன்று நகரங்களில் குறிப்பிடப்பட்ட செலவினங்களின்படி, இந்த எண்ணிக்கை அதிக செலவின நகரங்களில் இருந்து (மேலே கூறப்பட்ட செலவு அடிப்படையில்) ஒரு நகர்வு என்பதை காட்டுகிறது. பதிலளிப்பவர்களது வருவாய் குழு விகிதம் டெல்லி, ஜெய்ப்பூர்-அலாகாபாத் என வரிசைப்படுத்துவதாக உள்ளது.

உயர் வருவாய் குழுவினருக்கு (குடும்பத்தின் மாத வருமானம் = ரூ 40,000 +) பிரதிபலிப்பு விகிதம் டெல்லியில் அதிகமாகவும், அலகாபாத்தில் மிகக் குறைவாகவும் உள்ளது.

குறைந்த வருமானம் (குடும்பத்தின் மாத வருமானம் = 20,000) உடைய போட்டியாளர்களின் விகிதம் அலகாபாத்தில் அதிகம் (அதாவது 73%; இது ஜெய்ப்பூரில் 57% மற்றும் டெல்யில் 24%).

Full View

இறுதியாக, ஒரு கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினர் அல்லது பின்தங்கிய பிரிவினரோ, பல ஆண்டுகளாக தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு இது ஏதுவாக உள்ளதா? பட்டியலியன வகுப்பினர் (SC) போட்டித்தேர்வு வேட்பாளரான பிரதீப் ராவத் கூறுகையில், வேலைகள் போதுமானதாக இருந்தால், வேலைவாய்ப்புகள் வழக்கமானவை, மற்றும் பரிசோதனைகள் -சில ஆண்டுகள் முயற்சி மற்றும் முதலீடுகளுக்குப் பிறகு வேலை கிடைப்பதற்கான சாத்தியம் நியாயமானதாக இருந்தால் -பின்னர் மிகவும் பின்தங்கிய பகுதிகள் கூட தங்கள் குழந்தைகளை வேலைகளை தொடர அனுப்புவதில் முதலீடு செய்யும். அவர் சம்பவங்களைப் பற்றி பேசுகையில், கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வுக்கு தயாராக பணம் செலுத்துவதற்காக கடன் வாங்கியிருந்தார்கள்; ஏனென்றால் கிராமத்தில் யாரோ ஒருவர் அலகாபாத்தில் போட்டித்தேர்வு பயிற்சி பெற்று அதன் பிறகு அரசு வேலைக்கு சென்றவர்களை அவர்கள் கண்டுள்ளனர்.

ஆனால் நிகழ்தகவு குறைவாக இருந்தால், விளைவு எதிர்மறையாகும். மேல்சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.க்கள்) போட்டித் தேர்வு பயிற்சி பெருபவர்களில் பெரும்பாலானவர்களாக இருப்பது எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. டெல்லியில் உயர் சாதியினரின் மிக உயர்ந்த விகிதம் (பொது அல்லது இட ஒதுக்கீடு பெறாத பிரிவு 52%) உள்ளது; ஓ.பி.சி.க்கள் அலகாபாத்தில் கணிசமான பங்கை உருவாக்குகின்றனர். தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் பழங்குடி (எஸ்டி) பின்னணி கொண்ட போட்டித் தேர்வுக்கு தயாராவோர் ஒட்டுமொத்த மாதிரியில் முறையே 9% மற்றும் 8% ஆக உள்ளது; (கீழே உள்ள படம் பார்க்கவும்).

Full View

வேலையின்மை துறை

போட்டித் தேர்வு பயிற்சிக்கு வருவோருக்கான வசதிகளாக நூலகங்கள், வைபை வசதி, சுத்தமான தண்ணீர், பார்க்கிங் வசதி, ஏசி, சார்ஜ் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட ஒரு ‘நேர்மறையான சூழல்’ ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே குஜர் கி தாடி பகுதியில் காணப்படுகிறது.

ஒருநாள் நிச்சயம் அரசுப்பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, அவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகின்றனர்; போட்டித் தேர்வுக்கு தயார் ஆவோரால் பயிற்சி மையங்களுக்கும்; அவர்கள் அமைந்துள்ள இடங்களிலும் பொருளாதார ஆதாயம் கொண்டு வருகின்றனர். வேலையற்றோர் தொடர்ந்து வேலை இல்லாதவர்களாகவே இருப்பதன் மூலம், மற்ற பலருக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார ஆதாயத்தையும் தருகிறார்கள். யுவா ஹால போல், இத்தகைய ஒரு பிரச்சாரம் பரந்த கவனத்தை பெற வர உதவியது, இது "வேலையின்மைத் தொழில்" என்று கூறுகிறது. தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் (PGs), வாடகை குடியிருப்புகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஜெராக்ஸ் கடைகள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனையாளர்கள், சிறு உணவகங்கள் போன்றவை, போட்டித்தேர்வு எழுதுவோரியன் நுகர்வை நம்பியிருக்கின்றன.

டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அலகாபாத் ஆகியவற்றில் ஒரு போட்டித் தேர்வு பயிற்சி பெறுபவரி ஒவ்வொரு ஆண்டு சராசரி மொத்த செலவினம் முறையே ரூ. 2,82,270; ரூ. 1,78,962 மற்றும் ரூ. 1,40,708 என்று இருக்கும் என்று எங்களின் ஆய்வில் நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.

ஒரு சிறப்பாஅ வாழ்க்கைக்காக ஒரு வருவாயைத் தேடி இந்த போட்டித் தேர்வு மையங்களுக்கு கனவுகளோடு வரும் படித்த இளைஞர்களின் விருப்பங்களை நிச்சயமற்ற தன்மை மற்றும் விரக்தியால் வளர்க்கும் ஒரு துறை இது. வேலைகளில் உள்ள தீவிர நெருக்கடித்தன்மையால் இந்தத்துறைக்கு பலர் வருகின்றனர்.

இந்த நெருக்கடியின் சுமைகளை போட்டித் தேர்வுக்கு தயாராவோர் எதிர்கொண்டாலும், அதன் சுமை பின்தங்கிய வகுப்பு / சாதி பின்னணியில் இருந்து வரம்புக்குட்பட்டதாக உள்ளது.

* 'நேர்காணலில்' குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள், வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டுள்ளன.

(பட்டாச்சார்யா மற்றும் சித்திக் ஆகியோர் புதுடெல்லியில் உள்ள ஈக்விட்டி ஆய்வுகள் மையத்தில் சங்கரன் அலகின் ஆராய்ச்சியாளர்கள் ஆவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News