‘அனைத்து கட்சிகளும் மலைவாழ் மக்களை வேண்டாதவர் போல் நடத்தின’
புதுடெல்லி: பி.எச்.டி. முடித்த சமூகவியலாளர் அபய் ஜாக்ஸா, கடந்த 1990 களில், ஒரு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்; அப்போது அவர் மீது காலனித்துவ ஆதிக்க காலத்தின் இந்திய வனச்சட்டம்-1927 இன் கீழ் வன பாதுகாவலரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது ஒன்றுபட்ட மத்தியபிரதேசமாகவும், இப்போது சத்தீஸ்கரின் ஒரு பகுதியாகவும் உள்ள அவரது சொந்த மாவட்டமான ஜஷ்பூரில், காடுகளில் இருந்து விறகு சேகரித்ததற்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.
தனது பள்ளி விடுதியில் தினசரி உணவு தயாரிக்க தேவையான விறகை சேகரித்துக் கொண்டிருந்ததற்காக வழக்கை சந்தித்த ஜாக்ஸா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இது போன்ற அவரது அனுபவங்கள், பழங்குடியினர், அல்லது மலைவாழ் மக்களுக்கு எதிரான கொள்கைகளை ஆழமாக அறிந்து கொள்ள உதவியது. இதனால், பழங்குடி அறிவுசார்சொத்து கூட்டு இணை இணைப்பாளராகவும், மற்றும் மலைவாழ் மக்கள் நீதிக்கான தேசிய கூட்டணி என்ற அமைப்பிலும் இணைய காரணமானது. மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் அவர்களுக்கான சவால்களை ஆய்வு செய்ய, அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் மலைவாழ் மக்களின் உரிமைகள் பற்றி பேசும் வகையில் இந்தியா முழுவதும் மலைவாழ் அமைப்புகளின் பல்வேறு அமைப்புகளை இந்த இரண்டும் ஒருங்கிணைக்கின்றன.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்ற ஜாக்ஸா,36, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில், 30 மாநிலங்களில் வசிக்கும் 100 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட கடமைகளை பொறுத்தவரையில் பிரதான அரசியல் கட்சிகளின் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மதிப்பிடுகின்றன. 30 மாநிலங்களில் வசிக்கும் 10 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு, அரசியல் கட்சிகளின் சமீபத்திய தேர்தல் அறிக்கைகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மதிப்பிடுகிறார்.
மலைவாழ் மக்கள் மற்றும் ஆதிவாதிகள் எதிர்கொள்ளும் சவால்களை அரசியல் கட்சிகள் எப்படிக் கருதுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். முக்கிய கட்சிகளின் - பாரதீய ஜனதா கட்சி (பாஜக), இந்திய தேசிய காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போன்றவை -ம க்களவை தேர்தல் அறிக்கைகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
உண்மையை சொல்வதானால், அனைத்து ஆளும் கட்சிகளுமே மலைவாழ் மக்களை மனிதாபிமானமற்ற மற்றும் கறிவேப்பிலையாக ஒதுக்கி வைக்கக்கூடிய வகையில் தான் நடந்துகின்றன. இன்று, நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, சமூக விலக்கு மற்றும் கலாச்சார படுகொலைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனுபவித்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, மலைவாழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புடமும், நடைமுறை அறிந்தவர்களாகவும் உள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள், குறிப்பாக வளங்களைக் கொண்டு சமரசம் செய்யும் எந்த அரசியல் அமைப்பையும் தண்டிக்கத் தயாராக உள்ளனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் டிசம்பர் 2018 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மலைவாழ் பகுதிகளில் பா.ஜ.க.வின் மோசமான தேர்தல் தோல்விக்கு இதுவே காரணமாகும்.
மலைவாழ் மக்களுக்கு வெளிப்படையான வாக்குறுதிகளை வழங்கும்போது, துரதிருஷ்டவசமாக மலைவாழ் வாக்காளர்கள் இடையே வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் உருவாக்கிய மிகச்சிறிய விழிப்புணர்வு உள்ளது. மலைவாழ் மக்களின் தேவை மற்றும் ஆசைகள் என்ன; அவர்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்படுகிறது; உண்மையில் என்ன வழங்கப்படுகிறது என்பது இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
மலைவாழ் மக்கள் மற்றும் வனத்தில் வசிப்போரின் பிரச்சினைகள் பற்றிய பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் தரத்தை ஆராயும் போது, நல்லது, கெட்டது, சில விநோதமான மற்றும் நம்பமுடியாத வாக்குறுதிகள் அதில் உள்ளன. உதாரணமாக, காடுகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் பெயரில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் மற்றும் வனவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படுதல், கட்டாய இடமாற்றம், நிலம் கையகம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி வரும் சூழலில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையானது, திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிப்பதை உறுதிப்படுத்துவோம் என்கிறது; ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அந்த கட்சி தான் ஆட்சியில் இருந்தது. 9,000 சதுர கி.மீ பரப்பளவில் வனப்பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் கூறுகின்றனர். எப்படி இது இரண்டும் சாத்தியமாகும்? மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி அப்பாவித்தனமாக, சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; அல்லது ஒருவேளை நாம் மலைவாழ் மக்களை முட்டாளாக கருதுகிறோம். அத்தகைய முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த காரணங்களுக்காக தான் நான் எப்போதும் உப்பு ஒரு சிட்டிகை மூலம் அறிக்கைகள் எடுத்து ஆராய்கிறேன். இதில் சிபிஐ (எம்) அறிக்கையை சிறந்த முறையில் மதிப்பிடுகிறேன். ஏனெனில் அது இயற்கை வளங்களைக் குறித்த உரிமைகள் தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது, மேலும் நில உரிமைகள் தொடர்பான விவகாரங்களை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆனால், பெரும்பாலான பழங்குடிப் பகுதிகளில் கட்சி போட்டியிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிபிஐ (எம்) அநேகமாக தொடர்ந்து வந்துள்ளது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. அதில், வன உரிமைகள் மற்றும் கிராமப்புற சபா அதிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அறிக்கையில், சந்தாலி விவகாரம் பற்றி எடுத்துகூற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பா.ஜ.க. அறிக்கையானது அறிக்கைகளுக்கு மிகவும் சிக்கலானது என்று நான் கூறுவேன்; பழங்குடி மக்களை பாதிக்கும் விரைவான அனுமதி போன்றவை அதில் உள்ளன. மேலும் 2014 தேர்தலில் மலைவாழ் மக்களுக்கு பா.ஜ.க. அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கடந்த 2014 தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பழங்குடியினரின் நிலம் கையகம் செய்யப்படுவது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதாகும். இது எவ்வாறு நடந்துள்ளது?
மத்தியில் உள்ள தே.ஜ.கூ. (தேசிய ஜனநாயக கூட்டணி) அரசு, அதேபோல் குஜராத், சத்தீஸ்கர், ஜார்கண்ட்டில் உள்ள பா.ஜ.க. அரசுகளின் செயல்பாடு பதிவுகளை பார்க்கும் போது, கடந்த சில ஆண்டுகளில் பழங்குடியின மக்களின் நிலம் கையகம் செய்வது, பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் பல சுரங்கங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வனப்பகுதியில், பஞ்சாயத்துகள் (திட்டமிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் மற்றும் வன உரிமை சட்டம் (FRA) ஆகியவற்றின் முக்கிய விதிகள், பாதுகாப்பு முறைகளை புறந்தள்ளிவிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் பகுதிகளில் என்னென்ன முன்னேற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். பாசன திட்டங்கள், சிலை கட்டுமானம், மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம், சுரங்க திட்டங்கள், காடு வளர்ப்பு, புலி மற்றும் யானை பாதுகாப்பு திட்டங்கள் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது அதை எதிர்கொள்கிறார்கள். பழங்குடியினர் பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெளியேற்றங்களில் மிகக் குறைந்தளவே ஊடகங்களில் வெளியாகிறது என்பதால், இந்த நெருக்கடியின் அளவு பொதுமக்களுக்குத் தெரியவில்லை.
பா.ஜ.க. அரசு பல சட்ட பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம்நேரடியாக பழங்குடி நிலத்தை அந்நியப்படுத்தியது; நில ஆக்கிரமிப்பில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் (LARR சட்டம்), சோட்டா நாக்பூர் வாடகை சட்டம் 1908, மற்றும் சாந்தல் பர்கானாஸ் வாடகை சட்டம் 1949 (ஜார்க்கண்டில் பாதுகாப்பு சட்டங்கள்) போன்றவை நீர்த்து போகச் செய்து, மலைவாழ் மக்களின் நில உரிமைகள் அகற்றப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் மற்றும் அரசு உத்தரவுகளில் திருத்தம் செய்துள்ளது. கிராம சபாக்களை வலுவிழக்கச்செய்து, மலைவாழ் மக்களின் உரிமைகளை, சுதந்திரங்களை, சம்மதம் பெற வேண்டும் என்ற அம்சத்தை குறைத்துவிட்டது. இது ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் திட்டங்களுக்கு வனம் மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்களை விரைவாக திசைதிருப்ப வழிவகுத்தது. இது இரண்டும் சட்டவிரோதம் மற்றும் ஒழுக்கமின்மை ஆகும். இதன் விளைவாக, பழங்குடியின மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது, அண்மை சட்டசபை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் சுட்டிக் காட்டினேன்.
தேர்தல் பிரச்சாரங்களில், நாம் உண்மையில் அந்த கண்ணோட்டத்தை இழக்க நேரிடலாம்; அதாவது, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் உரிமையாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டது. இதை ஜூலை வரை அது நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் மலைவாழ் மக்களை பெரிய அளவில் இடப்பெயரச் செய்யும் தன்மை இன்னும் தொடர்கிறது. கட்சிகளின் தேர்தல் அறிக்கை இதை எவ்வாறு களையும்?
முற்றிலும் உண்மை. வன உரிமை சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றுவது மோடி அரசின் வாட்டர்லூ தருணம் போன்று இருக்கும். ஏனெனில் அவர்கள் சிக்கலைக் கையாளுவதைக் காட்டிலும் வெளிப்படையான அசைவுதான் காட்டுகிறார்கள். விசாரணைகள் இந்த ஆண்டு ஒரு முக்கியமான கட்டத்தில் இருந்த போது நீதிபதிகள் முன் அரசு உண்மை நிலவரத்தை முன்வைக்கவில்லை; அது வெளியேற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுத்தது. அதேபோல், அதன் தேர்தல் அறிக்கையானது இந்த முக்கியமான சிக்கலைக் கூட குறிப்பிடவில்லை.
அதேபோல், அண்மைய ஊடக அறிக்கையின்படி, வன உரிமை பிரச்சினை 130-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. பழங்குடிசமூகங்களின் வாக்களிப்பு வடிவங்களின் உண்மையான சீற்றத்தை நாம் காணலாம் என்று நம்புகிறேன். எவ்வாறு ஆயினும், சில எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில், 'வளம் நீதி' பிரச்சினையை சேர்த்துள்ளன; மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை வெளிப்படையாக காட்ட அவை முயற்சி செய்கின்றன. சிபிஐ (எம்) அறிக்கையானது இதை செய்கிறது. காங்கிரஸ் அறிக்கையானது எழுத்து மற்றும் செயல் வடிவில் வன உரிமை சட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கியத்துவம் பற்றி பேசுகிறது மற்றும்வெளியேற்றங்களை நிறுத்தவும் உறுதி அளித்துள்ளது.
வனம் மற்றும் பழங்குடியினத்தவர் பிரச்சினையில், திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, “பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்து மீட்க புதிய வனச்சட்டத்தை இயற்ற வேண்டும்” என்கிறது. இது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது?
மலைவாழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான சரியான திசையில் இது வரவேற்கத்தக்கது. மலைவாழ் மக்கள் மற்றும் பிற பாரம்பரிய பழங்குடியினத்தவர்களின் (OTFD) அங்கீகரிக்கப்படாத பழக்கவழக்கங்களை முறையாக சட்டப்பூர்வமாக்குவதற்கு வன உரிமைச்சட்டம் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், மார்ச் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடியும் நேரத்தில், இந்திய வனச் சட்டத்திற்கு (1927 ஆம் ஆண்டு காலனித்துவ கால சட்டம்) கடும்தி ருத்தங்களை அரசு முன்வைத்தது. இந்த திருத்தங்களில் காலனித்துவ கொள்கைகள் மீண்டும் குவிந்து கிடக்கின்றன. இத்தகைய திட்டங்களில் சில, வனத்துறை அதிகாரிகளுக்கு எந்தவொரு அதிகாரமும் இன்றி, சுடுவதற்கு அனுமதி அளிக்கின்றன; மலைவாழ் மக்களின் உரிமைகளை குறைக்க, அல்லது திரும்பப் பெற, வனத்துறை அதிகாரிகளுக்கு அனுமதிக்கிறது. வனப்பகுதி ஒட்டிய காடுகளை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கான மலைவாழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்துகிறது. இந்த திருத்தங்கள் மலைவாழ் மக்கள் போன்ற பங்குதாரர்களுடன் எந்தவொரு ஆலோசனையுமின்றி இரகசிய முறையில் முன்மொழியப்பட்டுள்ளன; இது அவர்களை நேரடியாக பாதிக்கும்.
மற்றொரு வகையில், சாந்தாலி மொழியில் தேர்தல் அறிக்கையை நாட்டில் வெளியிட்டுள்ள ஒரே கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பாராட்டத்தக்கது; அத்துடன், தேர்தல் வாக்குறுதிகளைளும் இந்த முன்மாதிரியை பின்பற்ற விரும்புகிறேன்; அரைகுறையான விஷயங்களின் சிக்கல்கள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதோடு, கூட்டு நடவடிக்கைகள் மூலம் தீர்க்க வேண்டும்.
தரமான கல்வியின் பற்றாக்குறை, இது கலாச்சார ரீதியாக உணர்திறன் மற்றும் அணுகக்கூடியது, மற்றொரு பிரச்சினை. இது மலைவாழ் சமூகங்களை ஆழமாக பாதிக்கிறது. இதில், அரசின் செயல்திறன் மற்றும் 2019 தேர்தல் அறிக்கைகளை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்?
மலைவாழ் மக்களுக்கு தரமான கல்விப் பிரச்சினை உள்ளது போலவே, மேலும் அவசர கவனம் தேவைப்படும் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக அனைத்து அரசுகளுமே இதை புறக்கணிப்பு குற்றவாளிகள் தான். பள்ளிக் கல்வி முறை, கற்பிக்கும் விவகாரங்கள், கல்வி உள்கட்டமைத்தல், கற்பித்தல் தரம், கல்வி உரிமைகளை தரம், கல்வி, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல், கல்வி பயன் பெறும் வேலைகளை இணைத்தல் ஆகியவை இதில் அடங்கும். 2014 ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் பாஜக "வன் வந்து” திட்டத்தின் கீழ் பழங்குடிப் பிரதேசங்களில் விரிவான கல்வி அமைப்பு ஏற்படுத்த வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி, 2019 ஆம் ஆண்டின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் காணாமல் போனது ஆச்சரியம் அளிக்கிறது. பழங்குடிப் பிரதேசங்களில் உள்ள பொது கல்வி முறைகளில் ஒரு சிறப்பு கவனம் இருக்கும்போது மலைவாழ் சமூகங்களில் எத்தகைய மாற்றமும் ஏற்படலாம்.
மலைவாழ் மக்கள் தொடர்பான கல்வித் திட்டங்களின் செயல்திறன் நீங்கள் பார்த்தால், பல கல்வி உதவி திட்டங்கள் போதிய நிதியின்றி வெறுமனே இருக்கும் அல்லது மூடப்பட்டிருக்கும் என்பது சோகமான கதையாகும். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமர்கந்தக் மற்றும் தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள பழங்குடியின பல்கலைக்கழகம், மலைவாழ்மக்கள் குறித்த ஆய்வுகளில் விளையாட்டு மாற்றீடாக அறிவிக்கப்பட்டன; ஆனால் அவற்றின் சூழ்நிலையை நீங்கள் பார்த்தால், படுமோசமான நிலையில் இயங்குகின்றன.
டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் 1945இல் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் தொடங்கினார். அது அட்டவணை மற்றும் பழங்குடியினரை மேம்படுத்துவதற்கு மற்றும் மேம்படுத்துவதற்காக. ஆயினும்கூட, அவரது மரபுக்கு ஏற்றவாறு அரசு கொள்கைகள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் என்.சி.டி.எச்.ஆர்.-இல் எனது சக ஊழியர்களால் எஸ்.சி மற்றும் எஸ்.சி.களுக்கு செலவழிப்பது [தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரம்], தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வேண்டுமென்றே அதன் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் மலைவாழ் மக்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் நிதியில் ரூ. 2,871 கோடியை வேண்டுமென்றே நிறுத்தி வைத்ததை காட்டுகிறது. இதன் விளைவாக, ஸ்காலர்ஷிப் சார்ந்துள்ள லட்சக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு அவர்களுக்கான நலநிதி ஆதரவு மறுக்கப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிப்பதில் 13 அம்ச பட்டியலை செயல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சமீபத்திய உத்தரவு, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மலைவாழ் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பாரபட்சம் இருந்ததால், பரவலான போராட்டங்களுக்கு அது வழிவகுத்துள்ளது. இந்த உத்தரவு சமூக நீதிக்கான கொள்கையை மீறுகிறது. கல்வி பயின்ற மலைவாழ் மக்களின் கவுவமான வேலைவாய்ப்பை, கல்வியை முடக்குவதற்கான தெளிவான நடவடிக்கையாகும்.
மலைவாழ் மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய சவாலாக சுகாதார உள்ளது. ஒரு சமீபத்திய அறிக்கை அவர்களின் மோசமான சுகாதார நிலையை நிரூபித்தது - இது அவர்களின் முறையான சமூக-பொருளாதார நாகரிகத்தில் இருந்து வருகிறது - இதில், 40% வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் பழங்குடியினர் தங்கள் பகுதிகளில் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஒரு குறைபாடுடன் உள்ளனர். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், பரிந்துரைகளை பின் தொடர்ந்துள்ளனவா?
பழங்குடியினத்தவரின் சுகாதாரம் என்பது, அனைத்து தேர்தல் அறிக்கையிலும் ஒரு புறக்கணிக்கப்பட்ட அம்சமாக உள்ளது என்பது வருத்தமான ஒன்று. கடந்த ஆண்டு, விரிவான சுகாதார அறிக்கையை, டாக்டர் அபய் பேங் தலைமையில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம் இணைந்த வல்லுநர்கள் குழு பிரத்யேக அறிக்கை வெளியிட்டது மிகச்சிலருக்கே தெரியும். ஆனால் அத்தகைய ஒரு முக்கியமான அறிக்கையை யாரும் அறிந்திருக்கவில்லை, அரசும் அதுபற்றி விவாதிக்கவில்லை. பழங்குடியினர் பகுதிகளில் எந்தவொரு சுகாதார தலையீட்டிற்கும் ஒரு வழிகாட்டு கோட்பாடாக செயல்படத்தக்க, ஒரு சிறப்பு தேசிய பழங்குடி சுகாதாரக் கொள்கை இருக்க வேண்டும். பல்லுயிர் வளத்திற்கும் இயற்கை ஆதாரங்களுக்கும், மலைவாழ் மக்களின் அணுகல் அவற்றின் வாழ்வாதாரங்கள், மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, மலைவாழ் மக்களை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் இடமாற்றம் செய்வது, அவர்களின் சுகாதார அடிப்படையை தாக்கும்.
தேர்தல் அறிக்கை உட்பட நீங்கள் காண விரும்பிய சில சிக்கல்கள் அல்லது வரும் வாரங்களில் கட்சிகள் பிரச்சாரங்களில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகளாக கருதுகிறீர்கள்?
ஒரு முக்கியமான பிரச்சினை, பழங்குடி துணை திட்டம் - டி.எஸ்.பி. (TSP) செலவில் சரிவு ஏற்பட்டிருப்பதாகும்: தே.ஜ.கூ. ஆட்சியில் டி.எஸ்.பி. செலவினம் 2014-15ல் ரூ. 32,387 கோடி என்பது, 2015-16ஆம் ஆண்டில் ரூ .20,000 கோடியாக குறைக்கப்பட்டது; 2016-17 ல் ரூ .24,005 கோடியாகும். இது 2017-18ஆம் ஆண்டில் ரூ. 31,920 கோடியாக அதிகரித்தாலும் கூட, தே.ஜ.கூ. அரசு, (பொதுவான / நிர்வாக) செலவு (உள்கட்டமைப்பு பராமரிப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, நல்ல நிர்வாக நிதியம், விளையாட்டு ஆணையத்தின் ஒதுக்கீடு போன்ற) இலக்கு எதையும் கொள்ளவில்லை. டிஎஸ்பி என்பது, புள்ளிவிவரங்களை உயர்த்துவதற்கு என்று எங்கள் பகுப்பாய்வு காட்டியது. இது இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுவான / அல்லாத இலக்கு செலவினத்தை சேர்க்காவிட்டால், பழங்குடி மக்களின் நலனுக்கு ரூ. 15,643 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.மு.கூ. அரசின் இடைக்கால பட்ஜெட் (2014-15) உடன் ஒப்பிடும்போது, பழங்குடி மக்களின் நலன்களுக்கு தே.ஜ.கூ அரசு ஒதுக்கிய நிதி கிட்டத்தட்ட 52% குறைத்துவிட்டது!
(சவுத்ரி, சுதந்திரமான பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். உள்நாடு மற்றும் கிராமப்புற சமூக பிரச்சினைகள், நிலம், வன உரிமை மற்றும் வள நீதித்துறை ஆகியன தொடர்பாக எழுதி வருகிறார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.