'73% நகர்ப்புற இந்தியர்கள் வாழ்க்கை உயில் உரிமையை அறியாதவர்கள்'

Update: 2019-06-04 00:30 GMT

டெல்லி: கடந்த 2018 மார்ச் 9-இல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு ஒன்றில், "மரணம் வரை கண்ணியமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உரிமை உள்ளது; இதில் மரணம் கண்ணியமான நடைமுறையில் நிகழ்வதும் அடங்கும்”; அரசியலமைப்பின் 21ஆம் பிரிவின் கீழ், இது ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்றது.

இதை அங்கீகரிக்கும் வகையில், “ஒரு வயது வந்த நல்ல மனநிலை கொண்ட ஒருவருக்கு தெரிந்த முடிவாக, உயிர் காக்கும் சாதனங்கள் திரும்பப் பெறுதல் உட்பட மருத்துவ சிகிச்சையை மறுக்கும் உரிமை உண்டு”, நீதிமன்றங்கள் முடிவுகளை எடுக்கவோ அல்லது தங்கள் விருப்பங்களை தெரிவிக்கும் திறனை இழக்க வேண்டும் எனில், இந்தியர்கள் முன்கூட்டியே மருத்துவ உத்தரவை உருவாக்க அல்லது ஒரு வாழ்க்கை உயிர்விருப்பத்தை வைத்திருக்க வேண்டும்; அவர்களின் முடிவில்லாத மருத்துவ சிகிச்சையை பற்றி ஒரு நபரின் விருப்பங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த தீர்ப்புக்கு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு, 2,400 க்கும் மேற்பட்ட நகர்ப்புற இந்தியர்களிம் நடத்திய கணக்கெடுப்பில், 88% பேர், தங்கள் வாழ்நாளின் கடைசி நாட்களில் தங்களது விருப்பும்படி மருத்துவ சிகிச்சையை முடிவு செய்ய விரும்பினர்; 27% பேர் மட்டுமே, வாழ்க்கை உயில் என்ற கருத்தை அறிந்திருந்தனர்; அவர்களில் 6% பேர் உண்மையில் ஒரு வாழ்க்கைத் தோற்றத்தை உருவாக்கியிருந்தனர்.

இத்தகைய, The Living Will ஆய்வானது, சுகாதார சேவை வழங்கும் இல்லத்தில் சுகாதார பராமரிப்பு (HealthCare at HOME - HCAH) மூலம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஏழு நகரங்களில் பிராந்திம் ஒன்றுக்கு 350 முதல் 400 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பதில் அளித்தவர்களில், ஆண் மற்றும் பெண்கள் சமமான எண்ணிக்கை இருந்தது; அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள்.

பதிலளித்தவர்களில் 85% பேர், தங்களது கடைசி நாட்களில் தங்கள் குடும்பத்திற்கு குறைந்தபட்ச அளவிலேயே மன மற்றும் நிதி சிக்கலை தர விரும்பியது ஆய்வில் தெரிய வருகிறது. ஆயினும்கூட, 74% பேர், தாங்கள் இறப்பது குறித்து எவ்வித தீவிர சிந்தனைக்கும் இடம் தரவில்லை; ஒருவேளை இறந்தால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு கூட இல்லை என்றனர்; 26% பேர் அத்தகைய பாதுகாப்பு இருப்பதாக கூறினர்.

பதிலளித்தவர்கள் நான்கு வயது குழுக்களாக சமமாக பிரிக்கப்பட்டுள்ளனர் - அதாவது 25-35 வயது; 36-50 வயது; 51-60 வயது மற்றும் 60+ வயது - இதில் மூத்த குடிமக்கள் (60+) தங்கள் கடைசி நாட்களில் தங்களது குடும்பத்தினருக்கு குறைந்தபட்சமாகவே சங்கடப்படுத்த விரும்புவதாக அதிகம் பேர் (94%) தெரிவித்தனர். ஆயினும்கூட, இந்த வயதில் குறைந்தபட்சம் 80% பேர் - அனைத்து வயதினரிடையேயும் குறைந்தபட்சம் - தங்கள் வாழ்க்கை உயில் மூலமாக கடைசி நாட்களில் தங்கள் சிகிச்சை முறையை முடிவு செய்ய விரும்பினர். 25-35 வயதிற்கு உட்பட்ட பிரிவினரில் 97% பேர் சிகிச்சை வகையை தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை விரும்பினர்.

அதேபோல், 25-35 வயது பிரிவினரில், 36% பேர், வாழும் வாழ்க்கைக்கான அர்த்தத்தை அறிந்திருந்தனர், இந்த வயதுக் குழுவினர் அதிகபட்ச விழிப்புணர்வைக் காட்டியுள்ளனர். 51-60 வயது பிரிவினரில் 21% பேர் மட்டுமே வாழ்வதற்கான விருப்ப உரிமைகளை அறிந்திருந்தனர்.

வாழ்க்கை உயில் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களில் 17% பேர், 60+ வயதினர் வாழ்க்கை உயில் கொண்டிருந்தனர்; 36-50 வயதுக்குட்பட்டவர்களில் 1% க்கும் குறைவாக உள்ளனர்; 25-35 வயதினர் மத்தியில் அவ்வாறு எதுவும் இல்லை.

Full View

இந்த ஆய்வானது, End of Life Care in India Task Force (ELICIT) என்ற அமைப்பின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது; அதன் உறுப்பினர்கள் நோய்த் தணிப்புக்கான இந்திய சங்கம், இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் இந்திய நரம்பியல் அகாடமியில் உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் நோக்கங்களில் ஒன்று, வாழ்க்கை உயில் பற்றி மக்களை அறியச் செய்வதாகும் என்று, எச்.சி.ஏ.எச். மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரிதலுக்கு பிறகு, 76% பேர் அந்த கருத்து தங்களுக்கு மிகவும் பொருந்துவதாகவும், 15% பேர் வாழ்க்கை உயில் பற்றி முடிவெடுக்க தங்களுக்கு மேலும் தகவல் தேவை என்றும், 9% பேர், வாழ்க்கை உயில் தங்களுக்கு பொருத்தமற்றது மற்றும் அநீதியானது எனவும் கூறியது கண்டறியப்பட்டது. பிற்பாடு கருத்து கூறியவர்கள், வாழ்க்கை உயிலை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு, கடைசி தருணங்களின் காலத்தை தீர்மானிக்க முடியாத தன்மையை சுட்டிக்காட்டி, இதை உருவாக்க விரும்பாத காரணங்களாக தெரிவித்தனர்.

Full View

தங்களுக்கான வாழ்க்கை உயில் கண்டறிந்துள்ள 76% பேரில் 91%, தாங்கள் முன் கூட்டியே நோய்வாய்ப்பட்டு, செயற்கை உபகரணங்கள் உதவியோடு மீளவ வேண்டிய சூழல் ஏற்பட்டால், எவ்வித உயிர் காக்கும் சாதனங்களையும் தாங்கள் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

"இந்த கணக்கெடுப்பு தெளிவாக காட்டுவது என்னவென்றால், வாழ்க்கை உயில் குறித்த விழிப்புணர்வு இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது; அவர்களாலும் இத்தகைய தெரிவிக்கப்பட்ட முடிவு எடுக்க இயலும் என்பது தான்” என்று, ELICIT தலைவர் ஆ.கே. மணி மின்அஞ்சல் வாயிலான அறிக்கையில் தெரிவித்தார்.

(ஷர்மா, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News