பெங்களூரு: இந்திய வாக்காளர்கள் வளர்ச்சி அல்லது கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை என்று, 2019 பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்த சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

நாட்டில் பொருளாதாரத் துயரங்கள், வேலையின்மை பிரச்சனை, விவசாயிகளுக்கு பெரும் துன்பம் போன்றவற்றுக்கு மத்தியில், பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) 56% இடங்களை வென்று, இந்தியாவில் ஆட்சியை பிடித்திருக்கிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அறிஞர் தனுஸ்ரீ கோயல் மேற்கொண்ட ‘Do Citizens Enforce Accountability For Public Goods Provision?’ என்ற தலைப்பிலான ஆய்வில், இந்தியாவின் 90% மக்கள் தொகையை கொண்டுள்ள 14 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இது பிரதமந்திரி கிராம் சதக் யோஜனா(பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் - PMGSY) செயல்திறனை இணைத்து, 1998 மற்றும் 2017 இடையே மாநில மற்றும் மத்திய தேர்தல் முடிவுகளை அலசியது.

பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைமையிலான அரசின் முக்கிய திட்டமான பி.எம்.ஜி.எஸ்.ஒய். அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான அரசால் 2000இல் தொடங்கப்பட்டது. 2018 க்குள் இந்த திட்டத்தில் கிராமப்புற இந்தியாவில் ரூ. 28 மில்லியன் கோடி செலவில் (40 பில்லியன் டாலர்). 5,50,000 கி.மீ. நீள சாலைகள் போடப்பட்டுள்ளன.

கிராமங்களில் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டாலும் கூட, இணைப்பு, முன்னேற்றம் மற்றும் பொது வசதிகளுக்கான சிறந்த அணுகல் ஆகியன கொண்டு வந்தாலும், வாக்காளர்கள் அதே அரசை தேர்வு செய்ய மீண்டும் வாக்களிக்கவில்லை என்று ஆய்வு காட்டுகிறது. உதாரணமாக, 1998 முதல் 2003 வரை, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு, 13,634.43 கி.மீ. நீள சாலை முழுவதும் அமைத்தது. இருப்பினும், 2003 தேர்தலில் காங்கிரஸ் சராசரியாக 9.6% வாக்குகளையே பெற்றது; ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தது. 1999-2004 ஆண்டுக்கு இடையே ஒன்றுபட்ட ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) அரசு அப்போது, 8167.56 கி.மீ. சாலைகளை அமைத்தது. இருப்பினும், 2004 தேர்தலில், தெலுங்கு தேசம் அதன் வாக்குகளை 7.3 சதவிகிதமாக இழந்தது; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

"என் அனுபவ ரீதியான பகுப்பாய்வு கூறுவது, உலகின் மிகப்பெரிய கிராமப்புற சாலைகள் வழங்கும் இத் திட்டமானது, சந்தைக்கு செல்லும் வசதி கூட இல்லாத 2,00,000 அதிகமான சாலை வசதி இல்லாத இந்திய கிராமங்களில் அந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது; இத்தகைய சாலைகள் ஒதுக்கீட்டில் தேர்தல் விளைவுவும் காலப்போக்கில் நெருக்கமாக இருந்தன; அதன் இடம் மற்றும் தேர்தல் நிலைகளை பொருத்து என்பதாகும்” என்று, கோயல் தனது ஆய்வை விவரித்தார். "மிகச் சில நேரங்களில் முடிவு கணிசமாக நேர்மறை அல்லது எதிர்மறையானது, அவை மிக வலுவற்றவை மற்றும் முரண்பாடானவையாக இருக்கின்றன; அவை எதிர்கால கொள்கை விதிமுறைக்கு ஊக்கமளிக்கின்றன அல்லது ஊக்குவிக்கின்றன " என்றார்.

இந்தியாவில், ஒரு கொள்கை வாக்குகளின் இருப்பு அல்லது இல்லாமையை தெரிந்து கொள்ள பி.எம்.ஜி.எஸ்.ஒய். எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏனென்றால், சாலைகள் மிக எளிதில் தெரியக்கூடியவை; பொது மக்களுக்கு நல்லது; , வாக்காளர் கவர மதிப்பீடு செய்ய உதவும் என்று, கோயல் விளக்கினார். "மேலும், பி.எம்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தில் சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் மோசமான அல்லது சிறந்த அணுகல் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஆதார சான்றுகள் உள்ளன" என்று அவர் கூறினார்.

2019 பொதுத் தேர்தல்களுக்கு முன் சில மாதங்க்ளில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சி பற்றி இடம் பெறுவது சீராக குறைந்துவிட்டது. பிரசாரத்தில் கொள்கை விவாதங்கள் தவிர, மற்ற எல்லாம் மிகுதியாக இருப்பதை பார்க்க முடிந்தது என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடி தனது பிரசாரங்களில் ஆட்சிக்கு வந்ததும் செய்வதாக உறுதி அளித்த வளர்ச்சி (விகாஸ்) திட்டங்களை பற்றி எதுவும் கூறாமல், காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை, குடும்பத்தை மையப்படுத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார்.

மோடியின் அறிக்கை அட்டை என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரைகளில், பா.ஜ.க. அரசின் முக்கிய திட்டங்களான கிராமப்புற மின் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா திட்டம்) போன்றவற்றை, பேக்ட்செக்கர்.இன் (Factchecker.in) மதிப்பீடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு ஆய்வின்படி, ஜனநாயகத்திற்கான கடுமையான தாக்கங்கள் உள்ளதாக, கோயல் சுட்டிக்காட்டுகிறார்; "... வாக்காளர்கள் கொள்கை விதிமுறைக்கு பதில் தராவிட்டால், பொதுப்பொருட்கள் வழங்கல் அல்லது சேவையை வழங்குவதற்கான தேர்தல் ஊக்கங்கள், காலப்போக்கில் குறையலாம்; இது, கைவிடுவதற்கோ அல்லது இந்த முக்கியமான திட்டங்களை மோசமாக செயல்படுத்தவோ வழிவகுக்கும்" என்று அவர் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

“ஆளும் செலவை’ செலுத்தும் கட்சிகள்

கோயல், பி.எம்.ஜி.எஸ்.ஒய். இல் இருந்து விரிவான, குறைந்த அளவிலான சாலைகள் குறித்த தரவுகள், தேசிய மற்றும் மாநில அளவிலான தொகுதிகளில் ஏறத்தாழ 11,000 தேர்தல் தொகுதிகள் - பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் - சாலைகள் திட்டத்தின் ஏறத்தாழ முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதை, பயன்படுத்தினார்.

சாலைத்திட்டங்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றால், "இது மற்ற கொள்கைகளை நாம் கண்காணிப்பது சாத்தியமாகாது” என்றார். கோயலில் கருத்துப்படி, மேம்பட்ட பொது சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான இணைப்புகளின் காரணமாக, இந்திய சூழலில் சாலைகள் பரவலாக ஒரு "சிக்னல் சச்சரவு" என்று கருதப்படுகிறது.

தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஹரிஷ் ராமசாமி, வளர்ச்சிக்கும் வாக்குகளுக்கும் இடையே துண்டிப்பை கல்வியறிவு இன்மை ஏற்படுத்துவதாக கண்டறிந்தார். "இந்திய ஜனநாயகம் வளர்வது பற்றிய வாதங்களில் ஒன்று இதுதான்; ஏனெனில் கல்வியறிவு இன்மை, "என்று அவர் கூறினார். “தேர்தல் அறிக்கைகளை 1-2% வாக்காளர்கள் மட்டுமே படிக்கின்றனர்” என்றார்.

இருப்பினும், அவரது ஆய்வில் கோயல் மேலும் பொறுப்புகளை செயல்படுத்துவதுடன் வாக்காளர்களின் உயர் கல்வி மற்றும் தகவல் கிடைக்கும் சிறந்த வாய்ப்புகளையும் ஆராய்கிறார். திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும் சாலை கட்டுமானத்தின் தெளிவான ஆதாரம், தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களில் வாக்காளர்களை எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அவர் கண்டறிந்தார். இந்த திட்டத்திற்கான தகவலில் எந்த கட்டுப்பாட்டும் இல்லை; ஆனால் அதன் தேர்தல் விளைவுகள் பூஜ்யமாகவே இருந்தன.

வாக்காளர் பெருமக்கள் கொள்கை செயல்திறன் அடிப்படையில் வாக்கு செலுத்தாததால், இந்திய சூழலில், பதவிக்கு வரும் அரசியல் கட்சிகள் எந்தவொரு நன்மையை கொண்டு வருவதில்லை. மாறாக, அது "ஆளும் தரப்பிற்கு குறைபாடு" அல்லது "ஆள்வதற்கான செலவு" என்ற முடிவை தருவதாக கோயல் தெரிவிக்கிறார்.

"ஆட்சியாளர்கள் ஒப்பீட்டளவில் எதிர்க்கட்சிகளை விடவும் சாதகமானவர்கள்; ஏனெனில் அவர்களது கொள்கைளை இன்னும் திறன்பட சமிக்கை காட்டிக் கொள்ள முடியும்; எதிர்க்கட்சிகளால் அவ்வாறு முடியாது " என்றார் அவர்.

"இருப்பினும் குடிமக்கள் கட்சிகளின் செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், பதவியில் இருப்பவர்கள் ஒப்பீட்டளவிலான நன்மைகளை செய்ய முன்வருவதில்லை " என்றார் அவர்.

இது 2019 தேர்தல்களுக்கு என்ன அர்த்தம்

"இந்தத் தேர்தலில், எந்தவொரு கொள்கையின் அடிப்படையில் கட்சிகள் போட்டியிடவில்லை," கோயல் கூறினார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு எப்படி செயல்பட்டாலும், தேசியவாதம் மற்றும் வான்வெளி தாக்குதல்கள் போன்ற விஷயங்களை பற்றி மட்டுமே மோடி பேசினார். பா.ஜ.க வின் பேச்சு 2014இல் இருந்து, 2019க்கு எப்படி மாறிவிட்டது என்பதை பாருங்கள். பின்னர் இது, வளர்ச்சி மற்றும் இந்துத்துவா என்ற கலவையாக மாறியது. ஆனால் இப்போது அதன் அடையாளம் சாதி என்பது மட்டுமே என்று மாறியுள்ளது" என்றார்.

எனவே, வளர்ச்சி என்பது தேர்தல் முறையாக்கான வெகுமதி அல்ல எனில், பிறகு எந்தவொரு அரசும் சாலைகள் அமைப்பதில் நேரத்தையும் நிதிகளையும் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

"சாலைகளை அமைப்பது உதவாமல் இருக்கலாம்; ஆனால் அவற்றை தருவதில் எந்தவொரு தீங்கும் இழைக்கக்கூடாது," என, தக்ஷசீலாவில் பொருளாதார ஆராய்ச்சியாளரும், சிந்தனையாளருமான அனுபம் மனூர் தெரிவித்தார். பொருளாதாரம் சிறப்பாக இல்லையெனில், அதன் தாக்கம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக திரும்பும்" என்றார்.

'மக்கள் பல காரணிகளுக்கு வாக்களிக்கிறார்கள்; சாலைகள் அல்ல'

மக்கள் சாலை திட்டங்களை கருத்தில் கொண்டு வாக்களிக்காததற்கு வேறுபல காரணங்களும் இருக்கலாம் என்று, லோகினி நெட்வொர்க் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், சிந்தனையாளரும், ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தருமான சந்தீப் சாஸ்திரி தெரிவிக்கிறார். "பல இடங்களில், சாலை பணிகளுக்காக மக்கள் தங்களது நிலங்களையும் பண்ணைகளையும் இழக்கின்றனர்; அவர்களுக்கு அதற்குரிய இழப்பீடுகள் கிடைக்காமல் கூட போகலாம். மேலும், பி.எம்.ஜி.எஸ்.ஒய். என்பது மத்திய அரசு நிதியுதவி திட்டமாகும்; இதை மாநில அரசு செயல்படுத்தப்படுகிறது; எனவே இந்த திட்டத்திற்கான பிரதிபலனை யாருக்கு தருவது என்று கூட அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்” என்றார்.

தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு முக்கிய அளவுருவாக சாலைகள் எவ்வாறு பிரதிநிதித்துவம் செய்யும் என்று சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். "மக்களின் முற்போக்குமுறையில் இருந்து முன்னேற்றம் உருவாக்கப்படுவது என்ன என்பதைப் பார்க்க வேண்டும். சாலைகள் என்பது ஒரேயொரு காரணியாகும்; மக்கள் வாக்களிப்பதற்காக வேலையின்மை மற்றும் விலை உயர்வு போன்ற பல காரணிகளை கருதுகின்றனர்," என்றார் அவர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பண்புக்கூறு தவறுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளை கோயல் நிராகரித்தார். ஊழல் புரிவதற்காக சாலைப்பணிகளை மேற்கொள்வதற்கு ஆட்சியில் இருக்கும் அரசை குடிமக்கள் ஆதரிக்கவில்லை என்ற சாத்தியக்கூற்றையும் கோயல் மறுத்தார்.

“நான் கண்டறிந்தது, சாலைகளின் தரம் மாறுபடுவது பற்றி குடிமக்களுக்கு கவலைப்படுவதில்லை: அவர்களால் நல்ல தரமான சாலைகள் இல்லை என்பதற்கோ அல்லது மோசமான தரத்திற்காகவோ தண்டிக்க இயலாது" என்று தனது வலைப்பூதளத்தில் எழுதியுள்ளார்.

மாறாக, கட்சியின் வளர்ச்சிப் பதிவுகள் வேறொரு விதத்தில் முக்கியமானவை என்று சாஸ்திரி கூறினார். "ஜனநாயக போராட்டங்கள் உணர்ச்சிகரமான போர்கள். 2014 ஆம் ஆண்டு மோடியின் பிரச்சாரம் காங்கிரசின் செயல்திறன் பற்றி வலுவாக இருந்தது. அவர்கள் அந்த கருத்தை உருவாக்க முடியும் என அதிகாரத்திற்கு வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளை பொருத்தவரை, வளர்ச்சி என்பது அரசை தாக்குவதற்காக ஒரு கருவியாக மாறியுள்ளது, "என்று அவர் கூறினார்.

“உணர்ச்சிபூர்வமான” சாதி வாக்குகள்

வளர்ச்சி இந்தியர்களுக்கு வாக்களிக்காதது பற்றி ஆராய்வதற்கு இடமில்லை என்று கூறும் கோயல், அது சாதி ரீதியானது என்கிறார். "ஆனால் இது அவர்களின் தேர்வு அறிவுபூர்வமானது அல்ல என்றோ, அல்லது அறியாதது என்று சொல்ல முடியாது," என்றார். “இந்திய சமூக மற்றும் அரசியல் வாழ்வில் சாதி ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது வளர்ச்சி மற்றும் கொள்கைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; வாக்காளர்கள் மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது இதன் எளிதான பொருள்” என்றார்.

இன்று சாதியை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது, சாஸ்திரி மேலும் கூறினார்: "சாதி ஒரு அசாதாரண அடையாளமாக இருக்கக்கூடாது. இது நன்மைகள் பெற பயன்படுத்தப்படும், ஒரு நவீன அரசியல் அடையாளமாகும். சாதி அடிப்படையிலான மக்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை போலவே வாக்களிக்கிறார்கள்" என்றார்.

வாக்குகள் சாதிப்பற்றின் அடிப்படையை காட்டிலும் உணர்ச்சிபூர்வமாகவே போடப்படுவதாக, கர்நாடக பல்கலைக்கழகத்தின் ராமசாமி தெரிவித்தார். "சாதி அடிப்படையில் அவர்கள் வாக்களித்திருக்கலாம்; ஆனால் அது ஒரு சிறிய சதவீதமாகும். மீதமுள்ள வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வழியில் உணர்ச்சிபூர்வமாக செல்லக்கூடியவை; அதனால் தான் கட்சிகள் தேசியவாதம் அல்லது ராமர் கோவில் கட்டுவது பற்றி பேசுகின்றன. ஒவ்வொரு கட்சி தங்கள் நலனுக்காக வாக்காளர்களின் இத்தகைய உணர்ச்சிகளை தூண்டமுயற்சிக்கிறது," என்று அவர் கூறினார்.

வாக்காளர்களின் விருப்பமாக முதலில் தனிப்பட்ட நன்மைகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள்; அடுத்து சமூகம் சார்ந்த நன்மைகளும், கடைசியாக பொதுநலனை பற்றி நினைக்கிறார்கள் என்று, தக்ஷசீலாவின் மானூர் கூறினார். நன்மைகள் சிதைக்கப்பட்டால், வாக்காளர் அதை தனிப்பட்ட ஆதாயமாக பார்க்க முடியாது. "வாக்களிக்கும்போது, பெரும்பாலான வாக்காளர்கள் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பற்றி சிந்திக்கவில்லை; தனிப்பட்ட லாபங்களை பற்றி கருதினர். அதனால்தான், ஒரு தேர்தல் சுழற்சியில், அரசியல் கட்சிகள் தொடக்க ஆண்டுகளில் பொதுவான பணிகளை செய்வதிலும், ஆட்சி இறுதியில் வாக்காளர்களை கவர இலவசங்களை அறிவிக்கவும் செய்கின்றனர். இலவச புடவைகள், மடிக்கணினிகள் மற்றும் வாக்குகளை தீர்மானிக்கும் பணம் என்று நீண்டு செல்கிறது, "என்று அவர் கூறினார்.

(சாக்கோ, ஒரு இதழியல் பட்டதாரி, பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இதழியல் துறை உதவி பேராசிரியர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.