புதுடெல்லி: இந்திய தோல் தொழில்துறையில் 2016-17ஆம் நிதியாண்டுக்கான ஏற்றுமதி, 3%; 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.30% குறைந்துள்ளது. 2013-14ல் 18% வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இது சரிவு என்று, இந்தியா ஸ்பெண்ட் வர்த்தக பகுப்பாய்வில் தெரிய வருகிறது.

2014-15ல் ஏற்றுமதி வளர்ச்சி 9.37 சதவீதமாக குறைந்து, 2015-16 ஆம் ஆண்டில், 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

Exports Of Leather & Leather Products, 2013-14 To 2016-17
Year 2013-14 2014-15 2015-16 2016-17 2016-17 (April-June) 2017-18 (April-June)
Exports 5.94 6.49 5.85 5.66 1.44 1.42
Change (in %) 18.39 9.37 -9.84 -3.23 - -1.3

Source: Export archive of Council for Leather Export, ministry of commerce & industry; figures in $ billion

நாடு முழுவதும் தோல் துறை பணியில் 2.5 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் அல்லது தலித்துகள். உலகின் காலணி உற்பத்தியில் இந்திய தோல் துறை 9 %; தோல் மற்றும் அது சார்ந்த தொழிலில் 12.93% கொண்டிருக்கிறது.

கால்நடைகளை கொல்வதற்கான தடையை தொடர்ந்து, தோல் துறையையும் அதை சார்ந்துள்ள ஏழை தொழிலாளர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளை பாதித்து என, இந்துஸ்தான் டைம்ஸ் இதழ், 2017 ஜூலை 25-ல் செய்தி வெளியிட்டிருந்தது.

தோல் பொருட்கள் ஏற்றுமதியானது, 2014-15ஆம் ஆண்டில் 6.49 பில்லியன் டாலரில் இருந்து, 2016- 17ஆம் ஆண்டில் 5.66 பில்லியன் டாலராகவும்; 2014-15 நிதியாண்டில் 12.78% குறைந்தது. அதேநேரம் சீனாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி 3% அதிகரித்து, 76 பில்லியன் டாலர் என்பதில் இருந்து, 2017ஆம் ஆண்டில் 78 பில்லியன் டாலராக உயர்ந்ததாக செய்தி தெரிவிக்கின்றன..

தோல் தொழில்துறையை பாதிக்கும் பசு தொடர்பான வன்முறைகள்

“பசு வதை தடுப்பை தொடர்ந்து 5% முதல் 6% வரை உள்நாட்டு வினியோகம் சரிந்துள்ளது” என்று, தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ரபீக் அகமதுவின் தகவலை மேற்கோள்காட்டி, 2016, பிப்.4-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தோல் பொருட்களுக்கான உற்பத்தி குறியீட்டு எண் (இது பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதோடு, தொழில்களை எடைபோடுகிறது) 2014-15ஆம் ஆண்டில் ஏறத்தாழ 14 புள்ளிகள் இருந்த நிலையில், 2015-16ல் 2 புள்ளிகள் சரிந்ததாக விவரம் தெரிவிக்கிறது.

தோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த நிலையில், மாடுகள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்தன. 2012 மற்றும் 2013-ல் ஒரு வன்முறை சம்பவ்ம் என்பது, 2014-ல் மூன்றாகவும், 2017ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக, 37 சம்பவங்களாகவும் அதிகரித்தது.

பசு தொடர்பான வன்முறைகள், 2015ஆம் ஆண்டில் இருந்து குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் முகமது அக்லாக் சைபி கொல்லப்பட்ட பிறகு, வெளிப்படையாக நடக்க தொடங்கியது. அதன் பின், 2015-ல் கால்நடை தொடர்பான 12 வன்முறைகளில் 10 பேர் கொல்லப்பட்டனர். இது, 2016-ல் 24 சம்பவங்கள், 2017-ல் 11; 2018ஆம் ஆண்டில் நாளது வரை ஏழு சம்பவங்களும் நடந்துள்ளதாக, பேக்ட் செக்கர்.இன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பசு தொடர்பான வன்முறைகள், தோல் பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சி ஆகியன அரசின் கொள்கைகளோடு தொடர்புடையதாக விளைவாகவே தோன்றுகிறது.

மேக்-இன்-இந்தியா திட்டத்தில் இலக்க எட்ட தவறும் தோல் தொழில்துறை

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக்-இன்-இந்தியா திட்டத்தில், தோல் தொழில் துறையின் ஏற்றுமதி, 2015- 2016ல் 5.86 பில்லியன் டாலர் என்பதை, வரும் 2020ஆம் ஆண்டுக்குள் 9 பில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு உள்ளது. அதேபோல் உள்நாட்டு சந்தையில் தற்போதுள்ள 12 பில்லியன் டாலர் என்பதை, 18 பில்லியன் டாலர் என்று அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பசு தொடர்பான முதலாவது வன்முறை நிகழ்ந்த பின், பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுக்காக நாடு காத்திருந்த நிலையில், 2015 அக்டோபர் மாதம், அவரது அறிக்கை வெளியானது. அதில், மத நல்லிணக்கமும், ஏழ்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

“இந்துக்கள் வறுமையையா அல்லது முஸ்லீம்களை எதிர்க்க வேண்டுமா? முஸ்லீம்கள் வறுமையை எதிர்க்க வேண்டுமா அல்லது இந்துக்களையா?இரு தரப்பினரும் ஒற்றுமையாக வறுமையையே எதிர்த்து போரிடுவது அவசியம்” என்று, பீகாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதை, 2017 அக். 8ஆம் தேதியிட்ட தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

“ஒற்றுமையுடையதாக நாடு இருக்க வேண்டும்; மத நல்லிணக்கம், சகோதரத்துவமுமே நாட்டை முன்னேற்றும். அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல்வாதிகள் வெளியிடும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

புனிதமான பசுவை காரணம் காட்டி நடந்த பெரும்பாலான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் அல்லது தலித்துகளே. 2014ஆம் ஆண்டு முதல் 2018 வரை நடந்த தாக்குதல்களில் 115 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்; 2016 - 2017 கால கட்டங்களில், 23 தலித்துகள் இறந்தனர். மிக மோசமானதாக, 2016ஆம் ஆண்டில் பசு தொடர்பான வன்முறைகளில் இறந்தோரில் 34% பேர் தலித்துகள் ஆவர்.

Source: Hate-Crime Database, Factchecker.in (data accessed on August 27, 2018

இந்த சம்பவங்களில், 51% பா.ஜ.க. ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஏற்பட்டது, காங்கிரஸின் ஆட்சியில் இருந்த மாநிலங்களில், 11% நடந்தன.

பசுக்களுக்கு எதிரான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ அனைவருமே, குறைந்த வர்ய்வாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள்; விவசாயம், அல்லது கால்நடை அல்லது இறைச்சி வியாபாரத்தை நம்பி இருந்தவர்கள்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை மற்றும் பொருளாதாரம் இடையே மோதல்

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில், கடந்த 2017 மே மாதம், மத்திய விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் (கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதி) விற்பனை மற்றும் சந்தை நெறிப்படுத்துதல் - 2017 என்ற திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. இது, தோல் தொழில் துறைக்கு மேலும் ஒரு அடியாக அமைந்தது.

கடந்த 2014 தேர்தல் அறிக்கையில், இந்து மதத்தில் தாய் என்று போற்றப்படும் பசுக்களை பாதுகாக்கவும், அதன் இன விருத்திக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது.

2017 மே மாத அறிக்கையானது, 2017 அக்டோபர் மாதம் திரும்பப் பெறப்பட்டது. சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான அமைச்சர்கள் குழு விவாதித்து, இதில் திருத்தம் செய்தது.

கால்நடை உரிமையாளர்களில் 18.6% பேர் முஸ்லீம்கள், சீக்கியர்கள் 40%, இந்துக்கள் 32%, கிறிஸ்தவர்கள் 13% பேர் என்று, 2018 ஜூலை 24-ல் மிண்ட் இதழ் தெரிவித்தது.

ஏறத்தாழ 63.4 மில்லியன் முஸ்லீம்கள் (அல்லது, நாட்டின் 40% முஸ்லீம்கள்) மாட்டிறைச்சி அல்லது எருது இறைச்சியை உண்கின்றனர். ஒட்டு மொத்தமாக, 12.5 மில்லியன் இந்துக்கள் உட்பட, மொத்தம் 80 மில்லியன் இந்தியர்கள் மாடு அல்லது எருது இறைச்சியை சாப்பிடுகின்றனர். 15% பேர் மட்டுமே, பால் சுரக்காத கால்நடைகளை கொண்டுள்ளனர்.

கால்நடைகளை வதம் செய்வதை இந்தியா முழுமையாக தடை செய்தால், அதன் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று, 2017 ஜூலை 9-ல் இந்து பிஸினஸ்லைன் செய்தி வெளியிட்டிருந்தது.

"ஒவ்வொரு ஆண்டும் 34 மில்லியன் ஆண் கன்றுகள் இந்தியாவில் பிறக்கின்றன" என்று கூறும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் விகாஸ் ராவால் “அவை குறைந்தது 8 ஆண்டுகளுக்கு வாழ்ந்தால் கூட, அதன் முடிவில் நாட்டில் 270 மில்லியன் கால்நடைகள் கூடுதலாக இருக்கும்” என்கிறார்.

“இந்த மாடுகளை கவனிக்க, கூடுதலாக ரூ.5.4 லட்சம் கோடி செலவாகும். இது, மத்திய மற்றும் மாநில அரசுகள் கால்நடைத்துறைக்கென ஆண்டுக்கு செலவிடும் நிதியை விட 35 மடங்கு அதிகம்” என்கிறார்.

(ஜெயின், டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பிரிவில் முதுநிலை மாணவர். அத்துடன், ஸ்வராஜ் அபியான் என்ற ஒரு சமூக-அரசியல் அமைப்பில் ஆராய்ச்சியாளரும் ஆவார்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.