பெங்களூரு: 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு ஒன்பது பெண்கள் செல்லவுள்ளனர்- முன்பு 13 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை விட இது, நான்கு குறைவு - இது 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இத்தேர்தலில், 56 தொகுதிகளில் 104 பெண்கள் போட்டியிட்டனர்.

இதற்கு முந்தைய குறைந்தபட்ச எண்ணிக்கை, 2000ஆம் ஆண்டில் நான்கு பெண்கள் சட்டசபைக்கு சென்றது தான்; இந்த மாநிலம் சமீபத்தில் இந்தியாவின் மோசமான பாலின விகித குழந்தைகளை கொண்டிருந்தது, மேலும் 2017இல் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதம் கொண்ட மாநிலங்களில் நான்காவதாக உள்ளது.

மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 40 இடங்களை வென்றுள்ளது (அல்லது முன்னிலை வகிக்கிறது); ஹரியானாவில் (மாலை 6.25 நிலவரப்படி) இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது. இது, 2014 இல் வென்ற 47 என்ற எண்ணிக்கையை விட ஏழு இடங்கள் குறைவு. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது / முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிரா உட்பட இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 15இல் பாஜக ஆட்சி உள்ளது. மகாராஷ்டிராவில் 103 இடங்களில் வெற்றி / முன்னிலை பெற்றுள்ளது; 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜக்வின் கூட்டணி கட்சியான சிவசேனா 57 இடங்களில் வெற்றி / முன்னிலை பெற்றது.

ஹரியானாவின் போக்குகள், ஒரு தொங்கு சட்டசபை அமைவதை காட்டுகிறது. இதன் பொருள் சுயேச்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) -இது துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக்தள் கட்சியின் பிளவுபட்ட பிரிவு - ஆகியன் அடுத்த ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கை கொண்டிருக்கும் என்பதாகும். கட்டார், அரசு அமைப்பதற்கான உரிமையை கோருவார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.

2019 பொதுத் தேர்தலில் பாஜக, இந்த மாநிலத்தின் 10 நாடாளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் உறுப்பினர், சுனிதா துக்கல் மட்டுமே.

பாஜகவுக்கு 12 பெண்கள் வேட்பாளர்கள், காங்கிரசில் 10 பேர்

இந்த முறை, காங்கிரஸின் 10 பெண் வேட்பாளர்களுடன், பாஜக 12 பெண்களை தேர்தலில் நிறுத்தியது.

பாஜகவை சேர்ந்த மூன்று பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் - இது, 2014 இல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்க எட்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் என்பதைவிட ஐந்து குறைவு; காங்கிரஸில், ஐந்து பெண்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்த முறை, ஏழு பெண் வேட்பாளர்களை ஜே.ஜே.கே நிறுத்தியது. அவர்களில் ஒருவரான, துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நைனா சிங் சவுதாலா வெற்றி பெற்றுள்ளார்.

2014 இல், ஹரியானாவின் சட்டமன்ற உறுப்பினர்களில் (எம்.எல்.ஏக்கள்) பெண்கள் 14%; இது 2009 ஐ விட நான்கு சதவீதம் அதிகம். ஆனால் இது 2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதாவில் (நூற்று எட்டாவது திருத்தம் அல்லது பெண்கள் இடஒதுக்கீடு மசோதா) கோரப்பட்ட பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கான 33% பிரதிநிதித்துவத்தை விடக் குறைவு.

2014இல், நாங்கள் கூறியது போல், 13 பெண் எம்.எல்.ஏ.க்களை ஹரியானா கொண்டிருந்தது - இது, 2000ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டு தசாப்தங்களில் மிக உயர்ந்தது. 13 பேரில், நான்கு பேர் 2014 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 2019 இல் மூன்றாவது முறையாக போட்டியிட்டனர். இவர்களில் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Women’s Representation In Haryana Assembly Lowest Since 2004
Year Women candidates Total candidates Women elected (out of 90 seats) Women MLAs (As % of total MLAs)
2000 49 965 4 4.44%
2005 60 983 11 12.22%
2009 69 1222 9 10.00%
2014 116 1351 13 14.44%
2019 104 1169 9 10%
Source: PRS Legislative And Election Commission Of India

ஒட்டுமொத்தமாக, நடப்பு பெண்கள் எம்.எல்.ஏக்களில் 8 பேர் 2019 ல் மீண்டும் போட்டியிட்டனர். அவர்களில் சகுந்த்லா கட்டக் மற்றும் கீதா புகல் ஆகிய இருவர் முறையே கலனூர் மற்றும் ஜஜ்ஜாரில் இருந்து போட்டியிட்டனர், இரு தொகுதிகளும் பட்டியலின (எஸ்சி) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டவை.

சோனிபட்டில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறை போட்டியிட்ட பாஜகவின் கவிதா ஜெயின், கிட்டத்தட்ட 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார்.

"எத்தனை பெண்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து பெண்களின் அரசியலை மதிப்பீடு செய்வது கடினம்" என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ராகுல் வர்மா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். குறைந்த சமூக மேம்பாட்டுக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், பெண்களின் மிகப்பெரிய பிரதிநிதித்துவங்களில் ஒன்று ஹரியானாவில் உள்ளது என்றார் அவர். "ஆனால் வேட்பாளர்கள் மற்றும் முந்தைய வெற்றியாளர்களில் பலர் அரசியல் குடும்பங்கள் அல்லது பிரபலங்களாக இருந்தனர்" என்றார்.

அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் இணை இயக்குநரும், அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவருமான கில்லஸ் வெர்னியர்ஸ், வர்மாவின் கருத்தில் உடன்படுகிறார். "தேர்தல் முடிவு வரை, சட்டசபைகளில் பெண்களின் அதிக பிரதிநிதித்துவம் ஹரியானாவில் இருந்தது," என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது பெரும்பாலும் பெண்கள் நலனில் மாநிலத்தின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில், மோசமான பெண்கள் நலன் தொடர்பான புள்ளி விவரங்களை கொண்ட மாநிலங்களில் சரிந்த பாலின விகிதம், கல்வியறிவின்மை, குழந்தை இறப்பு போன்றவை, சிறந்த குறிகாட்டிகளுடன் உள்ளன" என்றார்.

"ஒன்று விளங்குகிறது, அந்த மாநிலங்களில் வாரிசு அரசியலின் பரவலாகும்; இது பெண்களுக்கு ஓடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது," வெர்னியர்ஸ் கூறினார். "பாரம்பரிய, பழமைவாத, வட இந்திய அரசியல் பாரம்பரியமானது, இந்தியாவின் பிற பகுதிகளை விட அரசியல் வாரிசு கலாச்சாரத்தை கொண்டுள்ளது" என்றார் அவர்.

பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தில் ஹரியானா 4ஆம் இடம்

2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில், பீகார் மற்றும் ராஜஸ்தானை போலவே, மாநில சட்டமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம் ஹரியானாவில் (14%) அதிகமாக இருந்தது என, புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் 2017 தரவுகள் தெரிவிக்கின்றன.

ஹரியானா நாட்டில் மிகக் குறைந்த பாலியல் விகிதங்களை - இது 2011 இல் 1,000 பிறக்கும் சிறுவர்களுக்கு 833 சிறுமியர் - கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பாலின விகிதத்தில் நிலையான முன்னேற்றத்தை அரசு காட்டியுள்ளது. 2019 ஆகஸ்டில் 1,000 சிறுவர்களுக்கு 920 சிறுமிகள் என்று இருப்பதாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 அக்டோபர் 20 கட்டுரை தெரிவித்துள்ளது.

ஒரு சரிந்த பாலின விகிதம், குறைந்த பெண் குழந்தைகளைக் கொண்ட கிராமங்களுக்கு வழிவகுத்தது. ஆண்களுக்கு திருமணம் செய்ய உள்ளூர் பெண்கள் மிகக் குறைவாக கிடைப்பதால், மணப்பெண்கள் பணத்திற்காக வாங்கப்படுகிறார்கள். வெளி மாநில பெண்களை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் என்று, தி கார்டியன் மார்ச் 2018 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

பெண்களுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குற்ற விகிதம் - 100,000 குற்றங்களுக்கு 88.7 குற்றங்கள், 2017 குற்றத் தரவுகளின்படி - இம்மாநிலத்தில் உள்ளது. பெண் கல்வியறிவு 75.4%, இது தேசிய சராசரியான 68.4%-ஐ விட அதிகம். மேலும் மாநிலத்தில் கிட்டத்தட்ட 46% பெண்கள் 10ஆம் வகுப்பை முடித்துள்ளனர்; இது, தேசிய சராசரியான 35.7% என்பதை விட அதிகம் என்று, எங்களின் பணியிடத்தில்@ பெண்கள் என்ற எங்கள் தொடரில், ஆகஸ்ட் 12, 2017இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஹரியானாவில் தனிநபர் வருமானம் (தற்போதைய விலையில்) ஆண்டுக்கு ரூ. 2.3 லட்சம், மாநிலத்தின் தனிநபர் வருமானம் ரூ.1.3 லட்சத்தை விட இது கிட்டத்தட்ட 77% அதிகம் என்பதன் மூலம் நாட்டின் செல்வந்த மாநிலமாக உள்ளது என்று 2018-19 ஆம் ஆண்டி ஹரியானாவுக்கான பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் (எல்.எஃப்.பி.ஆர் அல்லது மக்கள் தொகையில் தொழிலாளர் எண்ணிக்கையில் உள்ளவர்களின் சதவீதம்) கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 45.5%. இது, தேசிய சராசரியை விட 4.3 சதவீதம் புள்ளிகள் குறைவாக உள்ளது என்று, மே 2019இல் அரசு வெளியிட்ட 2017- 18 கால தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் வேலையின்மை 45 ஆண்டுகளில் அதிகபட்சமாக 6.1% ஆக உயர்ந்துள்ளது.

பெண்களின் எல்.எஃப்.பி.ஆர் இன்னும் குறைவாக இருந்தது - கிராமப்புறங்களில் 14.7% (பெண்களுக்கான தேசிய கிராமப்புற எல்.எஃப்.பீ.ஆரை விட கிட்டத்தட்ட 10% புள்ளிகள் குறைவாக); நகர்ப்புறங்களில் இது 13.7% (தேசிய நகர்ப்புற பெண் எல்.எஃப்.பீ.ஆரை விட 6.7 சதவீதம் குறைவு) என்றிருந்தது.

"வேலைவாய்ப்பின்மை, ஒரு வாக்களிக்கும் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்" என்று வெர்னியர்ஸ் கூறினார். "இந்தி பேசும் பல மாநிலங்களில் செய்வது போல, ஹரியானாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களிக்கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்காதது என்பது வீட்டு சிறைவாசம், இது பொதுத்துறையில் பெண்கள் பங்கேற்பதற்கு ஒரு வலுவான தடையாகும் ” என்றார்.

"சிக்கல் என்னவெனில், சாதாரண திறன் மற்றும் சாதாரண லட்சியத்தை விட அதிகமானவர் அரசியலில் நுழையக்கூடிய அளவுக்கு மிக அதிகமாக உள்ளது; ஆனால் பெண்கள் அரசியலில் நுழைய பல வரம்புகளைத் தாண்ட வேண்டும்” என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும், வாக்களிப்பியல் ஆர்வலருமான யோகேந்திர யாதவ், இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவரது கட்சி ஐந்து வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்களை நிறுத்தியது; அவர்கள் அனைவருமே தோற்றனர்.

"ஹரியானா சட்டசபையில் உள்ள பெண்களை அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக வடிகட்டினால், அவர்களின் எண்ணிக்கை [பெண்களின் பிரதிநிதித்துவம்] பூஜ்ஜியத்திற்கு அருகில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்" என்று யாதவ் கூறினார்.

பெண்களுக்கு பல தடைகள் உள்ளன, ஏனெனில் அரசியல் கட்சிகள் அவர்களை பலவீனமான வேட்பாளர்களாக நினைக்கின்றன, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் பணிகளை அவர்களால் செய்ய முடியாது என்று கருதுவதாக, வெர்னியர்ஸ் கூறுகிறார். “கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற சில மாநிலங்களில், வாக்காளர்கள் பெண்கள் வேட்பாளர்களுக்கு எதிராகத் திரும்பி, ஆண் வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளை தருகிறார்கள். சுய தேர்வு தொடர்பான பிரச்சினை உள்ளது; தேர்தல்கள் ஆண்பாலுக்கானது மற்றும் முரட்டுத்தனமானது என்ற கருத்து உள்ளது; இது பெண்களை ஆர்வமிழக்க செய்யக்கூடும். தேர்தல்களில் நுழைவதற்கான செலவு, பெண்களை மோசமாக பாதிக்கிறது" என்றார்.

இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில், நட்நால், கோஸ்லி, பெரி, மற்றும் உச்சனா கலன் மற்றும் பிரித்லா ஆகிய ஐந்து தொகுதிக்குபட்ட வாக்குச்சாவடிகளில் “சில குறைபாடுகள்” காரணமாக மறுவாக்குப்பதிவுக்கு மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்தர் ஜீத் உத்தரவிட்டதாக, என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.