பெங்களூரு / ஜெனீவா: ஜூலை 2019 இல் இந்திய வானிலை வரலாற்றில் புதிய அளவாக, ஜூலை 2019 வெப்பம் அதிகம் பதிவாகி உள்ளது. மேலும் இந்திய மக்கள் தொகையில் 65.12% பேர், 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எதிர்கொண்டனர். இது நான்கு ஆண்டுகளில் மிகவும் பரவலாக உள்ளது என்று ஒரு புதிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2016இல், இந்திய மக்கள் தொகையில் 59.32% பேர், வெப்ப அனல் காற்றை எதிர்கொண்டனர். இந்த எண்ணிக்கை 2017 இல் 61.4% ஆக உயர்ந்தது; 2018 இல் 52.94% ஆகக் குறைந்தது என, இந்தியா ஸ்பெண்டிற்காக புவி சுற்றுச்சூழலை கண்காணிக்கும் இந்தியாவுக்கான உலக வள நிறுவனத்தின் நிபுணர் ஆக இருக்கும் ராஜ் பகத் பழனிச்சாமி, மேற்கொண்ட ஆய்வில் தெரிய வருகிறது.

2016 ஆம் ஆண்டில் இருந்து தான் செயற்கைக்கோள் தரவுகள், இதுபோன்ற விரிவான பகுப்பாய்வைக் கொடுக்கும் அளவுக்கு மேம்பட்டது என்று பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் 2015 ஆம் ஆண்டு 1992இல் இருந்து இந்தியாவில் மிக மோசமான வெப்ப அலைகளைக் கண்டது, டெல்லியில் இருந்து தெலுங்கானா வரை, இதனால் 2,081 பேர் இறந்தனர். இது உலக வரலாற்றில் ஐந்தாவது கொடியது ஆகும்.

ஜூன் 25, 2019 அன்று, ஜார்கண்ட், அசாம் மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 5.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது, இது “இயல்பை விட குறிப்பிடத்தக்க அளவு” என்று வகைப்படுத்தியது. இமயமலை பிராந்தியம், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் வெப்பநிலை இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் அல்லது ஐஎம்டி கூறியது; இது, “இயல்பை விட அதிகமாக” இருந்தது.

2019இல், கோடையில் உலகளாவிய வெப்பநிலை பதிவுகள் தகர்க்கப்பட்டன; ஜூலை வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்தை விட 1.2 டிகிரி செல்சியஸ் என்று, உலக வானிலை அமைப்பின் (WMO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பூமி கண்காணிப்பு திட்டமான கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற திட்டத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய சி.ஓ.-2 (கார்பன் டை ஆக்சைடு) உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெப்ப அனல்காற்று அடிக்கடி நிகழும்; மேலும் தீவிரமடையக்கூடும் என்று, அறிவியல் தொடர்பான மதிப்பீடுகளை உருவாக்க ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) அளித்த, அக்டோபர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது. இதன் விளைவுகள் கொடியதாக இருக்கும்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, இந்தியா நான்கு மடங்கு வெப்ப அலைகளில் உயரும் என்று இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-காந்திநகர் ஆராய்ச்சியாளர்கள், நவம்பர் 2018 ஆய்வில் தெரிவித்தனர். உலக வெப்பநிலை உயர்வை உலகம் கட்டுப்படுத்தத் தவறினால், இந்தியா வெப்ப அலைகளில் எட்டு மடங்கு உயர்வைக் காணலாம்.

இது நோயுள்ள தன்மை மற்றும் இறப்பு இரண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். வெப்ப அலைகள் உடலின் முக்கிய வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யலாம். மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாடு, நீரிழப்பு மற்றும் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கும். ஆனால் வெப்ப அலைகளுக்கு அதிக வெளிப்பாடு பல உறுப்புகளை செயலிழக்கச் செய்து சில மணி நேரங்களுக்குள் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் வெப்பம் தொடர்பான 6,167 இறப்புகள் பதிவாகியுள்ளதாக, இந்தியா ஸ்பெண் 2019 ஏப்ரல் கட்டுரை தெரிவித்தது. 2015 ஆம் ஆண்டில் மிக அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன: அந்த ஆண்டில் அனைத்து இறப்புகளில் வெப்பம் தொடர்பானது மட்டும் 2,081 அல்லது 34% ஆகும்.

நடப்பு 2019, ஜூன் 16 ஆம் தேதி வரை நாட்டில் 94 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பாராளுமன்ற கீழவையான மக்களவையில் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 210 ஆக உயர்ந்தது; அதிக எண்ணிக்கையாக (118) இறப்புகள், பீகாரில் இருந்து பதிவாகி உள்ளது.

"ஒரு வெப்ப அலை காலத்தில் ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை சாதாரண இறப்புகளாக (இருதய அடைப்பு போன்றவை) அல்லது ஒருபோதும் மருத்துவ ரீதியாக அறிவிக்கப்படாது / சான்றளிக்கப்பட்ட வெப்ப அலை இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று, தொற்றுநோயியல் நிபுணர் காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தில் (ஐ.ஐ.பி.எச்) நான்கு ஆண்டுகளாக வெப்ப அலை இறப்பு குறித்து படித்தவருமான குல்ரெஸ் அசார் கூறினார். "ஆனால் அது மிக வெப்பம் இல்லாதிருந்தால் அந்த மரணங்கள் நடந்திருக்காது" என்றார்.

பகல்நேர வெப்பநிலையை போல், இரவு நேர வெப்பமும் அதிகரித்து வருகிறது.

"பெரும்பாலான நேரங்களில் நாங்கள் பகல்நேர வெப்ப அலைகளைப் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்," என்று, ஐ.ஐ.டி-காந்திநகரில் இணை பேராசிரியரும், ஆய்வின் இணை ஆசிரியரும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வருபவருமான விமல் மிஸ்ரா கூறினார்.

இந்த இடைவிடாமல் வெப்பமான பகல்களும், இரவுகளும் வரவிருக்கும் ஆண்டுகளில் அவரது ஆய்வு முன்னறிவிக்கும்.

ஆனால் இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.

உலகம் முழுவதும் வெப்பநிலை மற்றும் மனித செல்வாக்கைப் பதிவு செய்கிறது.

கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (சி 3 எஸ்) படி, ஜூலை மாத உலகளாவிய சராசரி வெப்பநிலை, தொழில்துறை காலத்திற்கு முந்தைய நிலையில் இருந்து 1.2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததை காட்டுகிறது.

சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவா, பனி மூடிய ஆல்ப்ஸால் சூழப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஜூலை மாதத்தில், வழக்கத்திற்கு மாறாக வெப்பமான கோடைகாலத்தை அது அனுபவித்தது. வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. மாதத்தின் சராசரி பகல்நேர வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை விடவும், சுவிஸ் அரசு வெப்பத்தில் இருந்து ‘கடும் ஆபத்து’ என்பதை குறிக்கும் ஒரு அரிய நிலை-4 வெப்ப எச்சரிக்கையை விடுக்க வேண்டியிருந்தது.

பிரான்சின் தலைநகர் பாரிஸ், ஜூலை 25இல், 42.6 டிகிரி செல்சியஸை எட்டியது; இது ஜூலை சராசரியான 24 டிகிரி சி உடன் ஒப்பிடும்போது எல்லா நேரத்திலும் மிக உயர்ந்தது. இங்கிலாந்து தலைநகர் லண்டனும் அதன் ஜூலை சராசரியான 22 டிகிரி செல்சியஸ் என்பதர்கு பதிலாக, 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது. 66 வயது பெண்ணின் மரணத்திற்கு வெப்ப அனல் வீச்சு காரணமாக இருந்ததை அடுத்து, பெல்ஜியத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், அமெரிக்காவிலும் கூட, நாடு முழுவதும் அதிக வெப்பநிலையை பதிவாகி இருக்கிறது.

கிரீன்லாந்து நாடானது, பனி பனிப்பாறைகள் 82% பரப்பளவை உள்ளடக்கியது. இது, ஜூலை 31, 2019 அன்று 1000 கோடி டன் பனியை இழந்து இருக்கிறது. இதில் 100 கோடி டன் என்பது, 4,00,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமம். உலகளாவிய கடல் மட்டங்கள் மேலும் உயரும் என்பதும் இதன் பொருள்.

முந்தைய மாதத்தின் சராசரி உலக வெப்பநிலை - ஜூன் 2019 -வரலாற்றிலும் மிக அதிக அளவாக பதிவாகி இருந்தது. இது ஜூன் 2016 ஐ விட 0.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இதுவரையில்லான வெப்பம் வரலாற்று சாதனை பதிவாக அமைந்தது.

மனித செயல்பாடே குற்றம் சாட்டப்பட வேண்டும்

வெப்ப அனல் காற்றால் உயரும் அதிர்வெண் மற்றும் தீவிரம் குறித்த அறிவியல் தெளிவாக உள்ளது: மனித செயல்பாடே இதில் குற்றம் சாட்டப்பட வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இதுபோன்ற முதல் ஆய்விலிருந்து, பண்புக்கூறு அறிவியலின் முன்னேற்றங்கள் மனித செல்வாக்கு வெப்ப அலைகளை அதிகமாக்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட தீவிர வானிலை நிகழ்வை காலநிலை மாற்றத்துடன் இணைப்பது தந்திரமானது என்று கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (சி 3 எஸ்) மூத்த விஞ்ஞானி ஃப்ரீஜா வம்போர்க் கூறினார். "இதுபோன்ற ஆய்வுகள் செய்ய நமக்கு நீண்ட காலத்திற்கு நல்ல கண்காணிப்பு தரவு தேவை," என்று அவர் கூறினார். "உலகின் சில பகுதிகளில் இதுபோன்ற ஆய்வுகள் கடினமாக இருக்கலாம், ஏனெனில் கண்காணிக்கப்படும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருக்காது" என்றார்.

வாம்போர்க்கின் கூற்றுப்படி, கொடுக்கப்பட்ட விஷயம் என்னவென்றால், இதுபோன்ற வெப்ப அலைகள், அடுத்து வரும் ஆண்டுகளில் வழக்கமான ஒன்றாகவே இருக்கக்கூடும்.

ஒரு வெப்பக்காற்றலை என்பது, நாம் குறிப்பிட்டபடி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவைக் கடப்பது பற்றியது அல்ல; அது ஒரு குறிப்பிட்ட இடத்தின் சராசரி வெப்பநிலையை விட அதிகமாக உள்ளது. உதாரணமாக, வட இந்தியாவில், ஒரு வெப்ப அலை 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஆனால் இது சுவிட்சர்லாந்தில் 29 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலாக இருக்கும்.

இருப்பினும், அதிக வெப்பநிலையை வழக்கமாக கையாளும் இடங்களில், மக்கள் பல்வேறு வகையான சமாளிக்கும் முறைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் மிதமான கோடைகாலங்களில் எதிர்கொள்ளும்பகுதிகளில், மக்கள் வெப்பக் காற்றலைக்கு தயாராக இல்லை. பிரான்ஸ் மட்டும் இதுவரை ஐந்து வெப்ப அலை இறப்புகளை பதிவு செய்துள்ளது.

ஆனால் வெப்பமான கோடைகாலத்திற்கு பழக்கப்பட்ட இந்தியாவில் கூட, வெப்பநிலை மேலும் அதிகரிப்பதால் சில பகுதிகள் வாழத்தகுதி அற்றதாக மாறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தாது இருந்தால், அடுத்த சில தசாப்தங்களில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியன, கடும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர்கள், 2017ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். இந்தோ-கங்கை சமவெளியில் இதன் தாக்கம் குறிப்பாக கடுமையாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியர்களில் 37% பேர் வரை 2019ம் ஆண்டில் ஒருநாளில் 10 மணி நேரத்திற்கும் மேல், 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை (காற்றின் வெப்பநிலை) அனுபவித்தனர். இது 2018இல் 27.42% ஆக இருந்தது என்று செயற்கைக்கோள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தரவு: ஜி.எப்.எஸ். வெப்பநிலை மதிப்பீடுகள், GPWv4, MODIS (LPDAAC - NASA); கூகுள் எர்த் எஞ்சின் பயன்படுத்தி ராஜ் பகத் பழனிச்சாமியால் செயலாக்கப்பட்டது.

வெப்ப அலை-காலநிலை மாற்ற தொடர்பு

உலகளவில், கார்பன் (CO2) உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7% இந்தியாவில் இருந்து வந்தது. இது 2016 இல் 6% ஆக இருந்தது என்று, உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கணக்கிடும் பல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியான உலகளாவிய கார்பன் திட்டத்தின் டிசம்பர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு பசுமை இல்ல வாயுவாக இருப்பதால், கார்ப்பன் டை ஆக்ஸைடு, சூரியனின் வெப்பத்தை சிக்க வைத்து, நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரிக்கும். சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக வெப்ப அலைகளுக்கு வழிவகுக்கும். எனவே, காலநிலை மாற்றம் - வெப்ப அலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு என்பது, நேரடியான ஒன்றாகும்.

"அனைத்து நிலப்பரப்பு பகுதிகளும் - இதில் எந்தவொரு விதிவிலக்குகளும் இல்லை - கடந்த 150 ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பதை கண்டோம்" என்று வாம்போர்க் கூறினார். "சில பகுதிகள் வேகமாகவும், சில பகுதிகள் மெதுவாகவும் சூடாக மாறி வருகிறது" என்றார்.

உயரும் வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளுக்கு இடையிலான இந்த உறவும் நேரியல் அல்ல. "இதன் பொருள் என்னவென்றால்: வெப்பநிலையில் (உலகளாவிய) அதிகரிப்பு இல்லாமல் 10 ஆண்டுகளில் ஐந்து வெப்ப அலைகள் இருந்தால், அரை டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் 10 ஆண்டுகளில் ஏழு வெப்ப அலைகள் இருக்கும்" என்று ஐ.ஐ.டி-காந்திநகரின் மிஸ்ரா விளக்கினார். "வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், திடீரென்று ஐந்து ஆண்டுகளில் 20 வெப்ப அலைகள் இருக்கலாம்" என்றார் அவர்.

ஆனால் உலக வெப்பநிலை மாற்றங்களின் தாக்கம் உலகம் முழுவதும் மாறுபடும். மேலும் ஈரப்பதம் அதிகரிப்பது இதற்கு ஒரு காரணியாக இருக்கும்.

"வெப்பநிலை அதிகரிக்கும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கும் 7% அதிக ஈரப்பதத்தை காற்று வைத்திருக்க முடியும்" என்று டெல்லியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி), வளிமண்டல அறிவியல் மையத்தின் கிருஷ்ணா அச்சுதராவ் கூறினார். இதனால் காற்று ஈரப்பதமாக இருக்கும் கடலோர நகரங்களில், வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம் ஈரப்பதம் அதிகரிக்கும். "ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது வியர்வை உடலில் இருக்கும், மேலும் குளிரூட்டும் விளைவு எதுவும் இருக்காது" என்று அச்சுதராவ் தெரிவித்தார். "அதனால்தான் பருவமழை காலத்தில் அதிக வெப்பத்தை உணர முடிகிறது" என்றார் அவர்.

வெப்ப அலைகளை அறிவிக்கும்போது வெப்பநிலை உயர்வை மட்டுமே ஐஎம்டி கணக்கில் எடுத்துக்கொண்டாலும், வெப்பக் குறியீட்டை விஞ்ஞானிகள் பரிந்துரைத்தனர், இது வெப்பநிலை உயர்வு மற்றும் ஈரப்பதம் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

வெப்ப அலைகளால் சேதம்

வெப்பநிலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைப் பொறுத்து, எவ்வளவு காலம் மற்றும் எவ்வளவு நிலத்திற்கு மேல், ஒரு வெப்ப அலை என்பதை பொறுத்து, மனித வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் அது பாதிக்கும்.

"ஒரு வருடத்தில் நீங்கள் தீவிர வெப்ப அலை கொண்டிருக்கலாம், ஆனால் 2015இல் (இந்தியாவில்) நாங்கள் கண்டது போல் இது மிகவும் உள்ளூர்மயமாக்கப்படலாம்" என்று ஐஐடி-காந்திநகரின் மிஸ்ரா கூறினார். “ஆனால் இந்த ஆண்டின் வெப்ப அலை நாட்டின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியது. எனவே, வெப்ப அலைகளின் தீவிரம் ஒரே மாதிரியாக இருந்தால், ஆனால் பரவிய பகுதி இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருந்தால், அதிக சேதத்தை எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறினார்.

இந்த வெப்ப அலைகளுக்கு ஏற்ப எந்த முயற்சியும் செய்யப்படாவிட்டால், அவை அதிக இறப்புகளை ஏற்படுத்தக்கூடும்; சுகாதார இதழான பி.எல்.ஓ.எஸ். (PLOS) இல் வெளியிடப்பட்ட உலகெங்கிலும் உள்ள 20 பிராந்தியங்களில், 2018 ஆய்வுப்படி, இறப்பு முழுவதும் மாறுபடும். இறப்புகளில் அதிகரிப்பு கொலம்பியாவிலும், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசிலிலும் இருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் இறப்புகள் அதிகரிக்கும்.

முன்கூட்டிய பிறப்புகள், கருவுறுதல் குறைதல், மனநல பிரச்சினைகள் அதிகரித்தல், இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை விகிதம் அதிகரித்தல் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய்கள் ஆகியவற்றிக்கு வெப்ப அனல் காற்றுடன் தொடர்பு இருக்கிறது.

கடந்த 1998 மற்றும் 2017 க்கு இடையில் அதிக எண்ணிக்கையில் தீவிர வானிலை நிகழ்வுகளை கண்ட உலகின் முதல் 20 நாடுகளில் இந்தியாவும் உள்ளதாக, காலநிலை அபாயத்தைக் கண்காணிக்கும் ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பின் 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும்போது, வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி இல்லாமல் இருப்பார்கள்.

"வெப்பத்தின் வெளிப்பாடு பொருளாதார வர்க்கத்துடன் தொடர்புடையது" என்று சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான மையம் அசோகா அறக்கட்டளை அல்லது ATREE எனப்படும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஷோய்பால் சக்ரவர்த்தி கூறினார். "இது மிகவும் ஏழ்மையானவருடன் தொடர்புடையது. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து வெப்பத்தில் பணியாற்ற வேண்டும்" என்றார்.

அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய தினசரி கூலித்தொழிலாளர்கள், வெப்ப அலைகளால் பாதிக்கப்படுவார்கள் என்று காலநிலை மாற்றத்தின் பின்னணியை கற்று வரும் சக்ரவர்த்தி கூறுகிறார். இந்தியாவில், 1991ஆம் ஆண்டில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதில் இருந்து 22 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சுமார் 6.1 கோடி வேலைகளில், 92% முறைசாரா வேலைகள் என்று 2011-12 ஆம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) 2014 சமீபத்திய தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்து தெரிவித்தது.

இந்த ஆண்டு, 37% மக்கள் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒருநாளைக்கு 10 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக அனுபவித்து உள்ளதாக, இந்தியா ஸ்பெண்டிற்காக ஆய்வு மேற்கொண்ட டபிள்யு.ஆர்.ஐ. சேர்ந்த பழனிச்சாமியின் ஆய்வு தெரிவிக்கிறது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிக உயர்ந்தது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் செயல்படும் எரிசக்தி கொள்கை நிறுவனம் சார்பில் இந்தியாவை மையமாகக் கொண்ட ஆய்வின் ஆரம்ப முடிவுகளின்படி, வெப்ப அலைகளானது உற்பத்தித்திறனைக் குறைப்பதாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வுவிலும், 2-4% உற்பத்தி குறைகிறது.

Parts of Greenland has seen temperatures 10 to 15 deg C above normal causing glaciers to melt, according to the World Meteorological Organization.

காற்று மாசுபாடு வெப்ப அலைகளின் தாக்கத்தை மறைக்கிறதா?

காலநிலை மாதிரிகளால் சித்தரிக்கப்படுவதை விட இந்தியா குறைவான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது என்று அச்சுதராவ் இணை ஆசிரியராக எழுதிய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றம் ஏற்படும்போது, தீவிர வெப்பநிலை - ஒரு பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பமான நாளில் அதிகபட்ச வெப்பநிலை - உயரும்.

"அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து ஆய்வுகளிலும் அது நடந்தது; ஆனால் இந்தியாவில் இல்லை" என்று ஐ.ஐ.டி-டெல்லியின் அச்சுதாராவ் கூறினார். “ஆனால் அது இந்தியாவில் நடக்கவில்லை. அவை தட்டையானவை, சில இடங்களில் குறைந்துவிட்டன” என்றார்.

காற்று மாசுபாடு மற்றும் நீர்ப்பாசனம் என இரண்டு காரணிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இந்தியா தனது காற்றை சுத்தம் செய்தால், சூரிய ஒளியைத் தடுக்கும் கூறுகளை அழிந்து, வெப்ப அளவு உயரக்கூடும் என்று அச்சுதராவ் கூறினார். காட்சியில் இருந்து மாசுபாடு எடுக்கப்பட்டவுடன் வெப்ப அலைகள் எவ்வளவு உயரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காற்று மாசுபாடு வாயுக்கள் இருப்பதால் மட்டுமல்ல, ஏரோசோல்களாலும் (காற்றில் திட அல்லது திரவ துகள்கள்) ஏற்படுகிறது. சில ஏரோசோல்கள் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டிருக்கின்றன, மற்றவை குளிரூட்டும் ஒன்றைக் கொண்டுள்ளன, இது மே 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் உள்ளூர் மாசுபாடு, ஈரப்பதம் அளவுகள் மற்றும் மேற்பரப்பு நீர்நிலைகளின் தன்மையைப் பொறுத்து, அந்த மாசு நீங்கும் போது வெவ்வேறு பகுதிகள் வெப்ப மட்டங்களில் உயர்வு அல்லது வீழ்ச்சியை அனுபவிக்கும்.

நீர்ப்பாசனம் நிலத்தில் குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விளைவு சிறியது மற்றும் உள்ளூருக்கானது. "கோடையில் வெப்ப அலைகள் ஏற்படுகின்றன, பெரும்பாலான பயிர்கள் அந்த நேரத்தில் இல்லாமல் போய்விடுகின்றன” என்று ஐ.ஐ.டி-காந்திநகரின் மிஸ்ரா கூறினார்.

முன்னோக்கி செல்லும் வழி

எதிர்காலத்திற்காகத் தயாராவது, இரண்டு படிகளை உள்ளடக்கும்: தணிப்பு மற்றும் ஏற்றுக் கொள்ளுதல். "எதிர்கால வெப்ப அலைகளைத் தணிக்கும் வகையில், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்கால வெப்ப அலைகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே வழி" என்று அச்சுதராவ் கூறினார். இது உலகளாவிய முயற்சியை உள்ளடக்கும்.

கார்பன் உமிழ்வைக் குறைக்க புதுப்பிக்கத்த ஆற்றலில் கவனம் செலுத்துவது மற்றும் ஏற்கனவே உள்ள காடுகளை பாதுகாப்பது பிற முக்கியமான தணிப்பு நடவடிக்கைகள் ஆகும். ஏற்றுக் கொள்ளுதல் என்பது, நகர்ப்புறத் திட்டத்தில் அதிக மரங்களை வளர்ப்பது, உள்ளூர்மயமாக்கப்பட்ட குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கும் மேற்பரப்பு நீர் செறிவு அதிகரிப்பதையும் உள்ளடக்கும்.

"காலநிலை மாற்றத்திற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் குறைந்த பட்சம் நாட்டில் வெப்பம் மற்றும் குளிரூட்டல் மேலாண்மை தேவை" என்று ஏ.டி.ஆர்.இ.இ. (ATREE) சக்ரவர்த்தி கூறினார். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிறகும் "வெப்ப அலைகள் இன்னும் இருக்கும். ஆனால் அவற்றின் தாக்கம் குறைக்கப்படும்" என்றார் அவர்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி கட்டுரைகள் எழுதுபவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.